ஞாயிறு

அத்வானியின் ராமர் கோவில் ஆசை -இதுவல்லவோ லட்சியம்..!




இந்த மதவாதிகளுக்கு நாடு அமைதியாக இருந்தால் சுத்தமாக பிடிக்காது போலிருகிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டுவதுதான் தமது லட்சியம் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி, பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் என்று கூறியுள்ளார். என்னே ஒரு லட்சியம்! நாட்டுல மக்களுக்கு செய்ய வேற ஒன்றுமே இல்லை போல!

இதற்கான நேரம் விரைவில் வரவேண்டும் என்று ராமர் பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்கள் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு என்ன தான் பிரச்சினைன்னு தெரியல எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அப்பொழுது இந்த ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டியது. இதை காரணமாக வைத்து கொண்டு ஒட்டு பொறுக்கிவிட்டு மக்கள் மனதில் நஞ்சையும் விதத்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை விட பலமடங்கு அதிகமாக பணத்தை ஊழல் செய்து சம்பாதிக்க சென்று விடுவது தான் இவர்களின் வாடிக்கையாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் தேர்தலின் பொழுது சொன்ன வார்த்தைகளை உண்மை என்று நம்பி மக்கள் மாற்று மதத்தினருடன் பகைமையை எனும் தீயை வளர்த்து கொண்டு நிம்மதியில்லாமல் சண்டையிட்டு கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசியல் வியாதிகள் அந்த தீயில் நன்றாக குளிர் காய்ந்துகொண்டு இருப்பார்கள்.

ராமர் கோவிலை அத்வானி மட்டுமல்ல அவருடைய பேரபிள்ளைகள் அரசியலுக்கு வந்தாலும் கட்ட மாட்டார்கள். ராமர் கோவிலை கட்டி விட்டால் அவர்களுக்கு அரசியல் பிழைப்பு நடத்த வழி இருக்காது. இந்த மத பிரச்சினை என்னும் தீ எரிந்து கொண்டே இருந்தால் தான் அவர்கள் அரசியல் வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.


இந்த கோவில் கட்டி விட்டால் இந்த நாட்டில் தேனாறும் பாலாரும் ஓடிவிடுமா என்ன? நாட்டின் வருமைகோடு அழிந்துவிடுமா? இந்த கோவிலால் நாட்டு மக்களுக்கு என்ன நடந்து விட போகின்றது. நாட்டில் இருகின்ற கோவில் போதாதா இன்னும் ஒரு கோவில் கட்டுவது தேர்தல் வாக்குரிதியாம் என்ன கொடுமையா இது. இந்த கோவிலை படிப்பறிவில் பின்தங்கி இருக்கும் உ பி மக்களுக்கு எதற்கு பயன்பட போகின்றது இந்த கோவில். இதெல்லாம் ஒரு தேர்தல் வாக்குறிதி. எதை நோக்கி சென்று கொண்டிருகின்றது நமது தேசம் மக்களே சிந்திக்க மாடீர்களா?



4 கருத்துகள்:

நல்லவண்டா..! சொன்னது…

சரியாக கூறினீர்கள் இந்த அரசியல் வா(வியா)திகளுக்கு ஒட்டு தான் முக்கியம். ஓட்டுக்காக இப்படி ஏதாவது கூறிக்கொண்டே இருப்பார்கள் நாம் அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது.

நல்லவண்டா..! சொன்னது…

arumaiyaana katturai

Unknown சொன்னது…

பாஜகா விற்கு எப்பல்லாம் ஓட்டு வாங்க ஞாபகம் வருகிறதோ அப்பெல்லாம் ராமர் கோயில் ஞாபகத்திற்கு வரும் :))

tamilan சொன்னது…

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

>>>> 1. ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா? <<<<<


>>>>2. இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .
<<<<<<

,

கருத்துரையிடுக