புதன்

போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது.

கீழே உள்ள அணைத்து படங்களும் முக புத்தகத்தில் பகிரபட்டவை உங்கள் பார்வைக்காக. 

மின்சாரத்த காணலையாம் யாரவது கண்டுபிடிச்சி குடுங்க அதுக்கு சன்மானமா  கரண்ட் சாக் தந்தாலும் தருவாங்க 



நாடு முழுவதும்னு சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். தமிழ் நாடு தவிர்த்து நாடு முழுவதும்னு சொல்லி இருந்தா பொறுத்தம இருந்து இருக்கும்.  



ஓ! இவருதான் மின்வெட்டு சாரி மின்சாரத்துறை அமைச்சரா இப்பதானுங்க மொதோ தரம் பாக்குறேன். 

 
 
பேசாம அடுத்த வருடத்தில் இருந்து காலண்டர்ல நல்ல நேரம் எமகண்டம் மாதிரி மின்வெட்டு நேரத்தையும் வெளியிட்டா மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும். 




போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது. 



இதை எல்லாத்தையும் பார்த்துட்டு கடைசில இப்படிதான் போய் எங்கயாவது முட்டிக்கணும் 




செவ்வாய்

அய்யயோ! ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா

ஒரு மத்திய அமைச்சர் ரூ71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும். இதுவே ரூ71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேட்டி 
-செய்தி 

அதானே ஒரு லட்சத்தி எழுபாதாயிரம் கோடி எல்லாம் சர்வ சாதரணமாக ஊழல்  செய்து புகழ் பெற்ற எங்களை கேவலம் 71 லட்சம் ஊழல் செய்ததாக சொல்லி எங்கள் புகழுக்கு குந்தகம் விளைவித்தார்னு வழக்கு தொடுத்தாலும் தொடுபாங்க போல. நாட்டு மக்களுக்கு சோத்துக்கே வழி  இல்ல இவுங்க என்னடான்னா 71 லட்சம் எல்லாம் சாதாரணம் அப்படிங்குறாங்க. நாடு வெளங்கிடும். தொடந்து மென்மேலும் கோடி கணக்குல  ஊழல செய்து  சாதனை படைக்கணும்னு நாட்டு மக்களாகிய நாங்கள்  வாழ்த்துகின்றோம்.   



-----------------------------------------------------


வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்கும்:சென்னை வானிலை ஆய்வு மைய 

 இயக்குனர் ரமணன்

-செய்தி

அய்யயோ! என்னது ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா. அப்பா கண்டிப்பா மழை வராது. வெயில் மண்டய பொலக்க போகுது. ஏற்கனவே மக்கள் பவர் கட்டால கஷ்ட்ட படுறாங்க இப்ப வெயில் வேற ரண கொடூரமா அடிச்சா மக்கள் என்ன தான் பண்ணுவாங்க. ஆண்டவா ஏன் இப்படி மக்கள மென்மேலும் சோதிக்கிற.  

----------------------------------------------------------

துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை:  கலைஞர் 

கருணாநிதி

-செய்தி 

வரவர நம்ம தலைவரோட காமெடிக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. அவரோட பேரப்புள்ள  ஏன் தலைமறைவா இருக்காருன்னே நம்ம தலீவருக்கு தெரிலயாமா. என்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ போங்க பாஸு 



வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

ரயில் பெட்களில் பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க, இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன எந்திரம் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.                                                                                                 - செய்தி


அட நீங்க வேற! பயனிகளுக்கு நல்லது செய்வதாக நினைத்து எலி கரப்பான் மூட்டப் பூச்செல்லாம் ஒழிச்சிடாதீங்க. அப்புறம் அந்த ரயில் இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ரயில்தானனு மக்களுக்கு சந்தேகம் வந்துரப் போகுது. அதுமட்டும் இல்லாம ரயில்ல கரபானும் எலியும் இல்லைன்னா நம்ம பதிவர்கள் பயண கட்டுரையின் போது ரயில்வே துறையை குறைக் கூறி எழுத மேட்டர் இல்லாம போயிடும். அதனால பதிவர்கள் சார்பாக நம்ம கோரிக்கைய பரிசீலனைக்கு எடுத்து பழையபடி எலி கரப்பானெல்லாம் இரயிலில் உலவ அனுமதிக்கனும்னு கேட்டுகொள்கின்றோம்.

 


=======================================

காவேரி பிரச்சினையால் பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை! தயாரிப்பாளர்  கவலை.                                          -செய்தி 1


காவேரியில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாததால் தஞ்சை பகுதி விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் கவலை.                                  - செய்தி 2


போட்ட பணத்த எடுக்க முடியுமா முடியாதான்னு தயாரிப்பாளுருக்கு கவலை. தொடர்ந்து விவசாயம் செய்து காலத்த ஓட்ட முடியுமா முடியாதான்னு விவசாயிகளுக்கு கவலை. பவர் கட்டால மானாட மயிலாட தொடர்ந்து பாக்க முடியலயேனு நமக்கு கவலை. வாழ்கைலதான் எத்தனை கவலை ஓ மை காட்!

 
=========================================

இயர்பியலுக்கான நோபல் பரிசு சேர்ஜே ஹரொசீ (Serge Haroche) மற்றும் டேவிட் ஜெ. வின்லான்ட் (David J. Wineland)

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு சான் பி.குர்தோன் மற்றும் ஜூல்ஸ் கால்ப்மேன்
                                                                                                                                           -செய்தி


இதேமாதிரி பவர் கட்டுக்கும் ஒரு நோபல் பரிசு தரனும்னு தமிழக மக்கள் சாரிபாக நோபல் பரிசு கமிட்டிக்கு ஒரு கோரிக்கை வைக்கனும்னு கேடுகொள்கின்றோம். அப்படியாவது தமிழகத்துக்கு ஒரு நோபல் பரிசாவது கிடைக்கட்டும்