மக்கள் புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு

கூடான்குளமும் அமெரிக்க பணமும்..!






கூடாங்குளம் அனு மின் நிலயத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்பவருக்கு அமேரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் செயல் படும் சில அமைப்புகள் மூலமாக பணம் வருகிரது என்று கூறி இருப்பது யாரோ சாமானியனின் கூற்று அல்ல இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் பத்திரிக்கையாளர்களுக்கு முன் மேற்க்கண்டவாறு கூறியுள்ளார்.

தங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பிரதமர் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் அதை பிரதமர் அவர்கள் நிருபிக்க வேண்டும். என்றும் அவ்வாறு நிருபிக்க வில்லையெனில் பிரதமர் மற்றும் அமைச்சர் நாராயன சாமி மீதும் வழக்கு போடுவேன் என்றும் உதயகுமார் கூரியுள்ளார்.இந்த நிலையில் ரஷ்ய தூதர் தாங்கள் நினைத்தது போல இந்த போராட்டதிற்கு பின்னால் அமேரிக்கவின் கை உள்ளது என்பது இந்திய பிரதமரின் அரிக்கை மூலம் நிருபனமாகியுள்ளது என கூரியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அமேரிக்காவில் இருந்து பனம் வந்துள்ளது என கூறுவது யாரோ ஒரு சாமனியனோ அல்லது தினமலர் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையோ அல்ல இந்தியாவின் பிரதமர்.இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் படைத்தை பாரத பிரதமர். இந்தியாவில் அரசுக்கு எதிராக போராடும் சிலருக்கு அமேரிக்காவில் இருந்து பனம் வருகின்றது என்பதை தெரிந்து இருக்கும் பொழுது அதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி உதயகுமாரை கைத்து செய்து நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து அவருக்கு தண்டனை வாங்கி தருவது ஒரு நாட்டின் அரசுக்கும் அந்த அரசை வழி நடத்தும் பிரதமருக்கும் பெரிய விசயமல்ல அதை விடுத்து ஒரு சிறு பிள்ளை செய்வது போல அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பிரதமர் சுய நினைவோடுதான் இருக்கின்றாரா என்ற என்னம் எழுகின்றது.


கூடங்குளத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பனம் கொடுப்பதாக ஒரு செய்தி உலவிகொண்டு உள்ளது. அதே நேரத்தில் கூட்டம் கூட்ட வேண்டுமென்றால் பனம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது சாத்தியம். ஆனால் ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு மக்களை பனம் கொடுத்து கூட்டுவது என்பது இயலாத காரியம். மக்களுக்கு உன்மையில் அரசின் நடவடிக்கை பிடிக்காத பிடிக்காத நிலை இருந்தால் தான் பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் போராட முன்வருவார்கள்.ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராடினால் என்ன என்ன பின்விளவுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது நாட்டின் அரசங்கத்தை எதிர்த்து போராட கூலிக்கு பனம் பெருபவர்கள் வருவார்களா என்பது ஐய்யமே.

அமேரிக்கவில் இருந்து பணம் பெற்று இருப்பதாக கூறப்படும் உதய குமார் என்பவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதை விடுத்து. இவ்வாறு நடந்துள்ளது என பத்திரிக்கைகளுக்கு கூறுவதன் நோக்கம் போராடும் மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதாக இருக்குமோ என்ற ஐய்யம் எழுவதை தவிற்க முடியவில்லை. உதயகுமார் என்பவர் தம்மீது பொய்யான குற்றச் சாட்டு சுமத்தப்படுள்ளது அதை நிறுபிக்க வில்லயெனில் பிரதமர் மீது அவதூறு வழக்கு போடுவேன் என்று கூறியும் அவர் குற்றத்தை நிறுபிக்க எந்த நடவடிக்கயும் எடுத்ததாக தெரியவில்லை. உன்மையில் இந்த போராட்டத்திற்கு அமேரிக்கவில் இருந்து பனம் வந்ததா? அல்லது மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதற்காகவா?

செவ்வாய்

யார் இந்த இந்து முன்னனியினர் மற்றும் காங்கிரஸ் காரர்கள்..!



இந்தியா போன்ற நாடுகளுக்கு அனு உலை தேவையா என்பதை ஏற்கனவே நாம் விரிவாக பார்த்துள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும். இந்த நிலையில் அனு உலை எதிர்ப்பு குழுவின் பிரதினிதிகள் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்திற்கு பேச்சுவார்தைக்கு வந்துள்ளனர். அவர்களை இந்து முன்னனியினர் மற்றும் காங்ரஸ் காரர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செருப்பால் அடித்துள்ளனர்.


அணு உலை எதிர்ப்பு குழுவின் போராட்டம் சரியா தவறா என்ற விவாதம் நமக்கு தேவையில்லை. ஆனால் ஒரு ஜன நாயக நாட்டில் அரசின் எந்த ஒரு நடவடிக்கை மற்றும் திட்டங்கள் குறித்து மாற்று கருத்து அல்லது அந்த திட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் இருகுமேயானால், அவர்களுக்கு போராட்டம் நடத்த எல்லா வித உரிமையும் இருப்பதாக அரசியல் சாசானம் கூறுகின்றது. அப்படி இருக்கும் பொழுது மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை தான் இந்த பேச்சுவார்த்தை உனர்த்துகின்றது. எனவே அரசின் நடவடிக்கை பாராட்ட தக்கதுதான்.



ஆனால் போராட்டம் நடத்தும் ஒரு பிரிவினரை அந்த போராட்டதில் உடன்பாடு இல்லாத மற்றொரு பிரிவிவனர் தாக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாறனமாக அமைவதற்கு முன்னால் அந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமாகதான் பின் வரும் காலங்களில் இது போன்ற வன்முறை நடக்காமல் தடுக்க முடியும். எனவே காவல் துறையினர் எந்த தயக்கமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த இந்து முன்னனியினர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்த என்ன உரிமை இருகின்றது. ஜனனாயக வழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை தடுக்க யாருக்கு அதிகாரம் இல்லை. இந்த காங்ரஸ் காரர்களின் மன நிலை என்ன மத்தியில் காங்ரஸ் ஆட்சி செய்தால் அவர்களின் திட்டங்களை யாரும் எதிர்த்து வாய் திரக்க கூடாது என்று நினைகின்றனரா? இது என்ன ஜனனாயகம். அவர்களை ஓட்டு போட்டு அதிகாரத்தில் அமர வைத்தது இந்த மக்கள்தான் அதை மறந்து விட வேண்டாம். நாளை ஓட்டுக்காக கூழக்கும்புடு போட்டுக்கொண்டு இந்த மக்கள் முன்புதான் வந்து நிற்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

அமெரிக்காவின் ஜனநாயக அக்கறை..!

“எகிப்து உண்மையான ஜனநாயகத்தை நோக்கி செல்வதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்பு நிலவுகிறது. எங்களுடைய நிலையும் அதற்கு ஆதரவானதுதான். அதனை மிக வலிமையாக ஆதரிக்கிறோம், அது விரைவில் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

தன்னை உண்மையான ஜனநாயகத்தின் நண்பன் என்று காட்டிக்கொள்வதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அமெரிக்கா மிக லாவகமாகவும், தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு ஹில்லாரி அளித்த இந்தப் பேட்டியும் ஒரு சான்று.


எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபரான ஹோஸ்னி முபாரக், கடந்த 30 ஆண்டுக்காலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்ததை எதிர்த்து அந்நாட்டில் பல மக்கள் இயக்கங்கள் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களில் அமெரிக்க அரசு யார் பக்கம் நின்றது என்பதெல்லாம் எகிப்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். எகிப்து இராணுவத்திற்கு எண்ணிலடங்கா சலுகைகளை அளித்து, அவர்களை எப்போதும் ‘குஷி’யில் ஆழ்த்திவிட்டு, பல பில்லியன் டாலர்களை கொள்ளயடித்து அயல் நாட்டு வங்கிகளில் கொண்டுசென்று முபாரக் குவித்தபோதெல்லாம் வராத ஜனநாயக அக்கறை இன்றைக்கு வந்துள்ளது அமெரிக்காவிற்கு!

முபாரக் ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வந்ததற்கு அதற்கு பல காரணங்கள் உள்ளன:

(1) எகிப்து இராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = 100 கோடி = ரூ.4,500 கோடி) கொடுத்து வந்தது அமெரிக்க அரசு.

(2) தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து.

(3) மத்திய கிழக்காசிய எண்ணெய் வளங்களை அயல் நாடுகளுக்கு கொண்டு செல்ல அதி முக்கியத் தேவையான சூயஸ் நீர் வழியை உறுதி செய்ய எகிப்து தேவை. அதுமட்டுமின்றி, டிரான் நீரிணை, அக்குவாபா வளைகுடா ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்துவது.

(4) எகிப்து இராணுவத்தின் முழு ஒப்புதலுடன் இஸ்ரேல் விமானப் படை நடத்திய காசா- எகிப்து எல்லையிலுள்ள ஃபியாடெல்பி பாதையில் அமைந்திருந்த இரகசிய சுரங்கங்களின் மீதான தாக்குதல். எகிப்து எல்லையில் நடந்த இத்தாக்குதலில் ஒரு எகிப்து இராணுவ வீரன் கூட காயமடையவில்லை!

(5) ஈரானிடன் அணு ஆயுதம் உள்ளதாக மிக அதிகமாகவே அமெரிக்கா பயமுறுத்துகிறது என்று கூறிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் எல் பராடீயை (இவர் எகிப்தைச் சேர்ந்தவர்) மீண்டும் அவ்வமைப்பின் தலைவராக வராமல் தடுத்தது.

(6) எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மத்திய கிழக்காசிய கொள்கைகளுக்கு (கொள்கைகளுக்கு) நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் எகிப்து அரசை (முபாரக் ஆட்சி) விட்டுத் தர முடியாது என்று அமெரிக்கா கூறி வந்தது.

எகிப்து நாட்டு மக்கள் ஹோஸ்னி முபாரக்கை சர்வாதிகாரி என்கிறார்கள், “அவரை நான் சர்வாதிகாரி என்று கூற மாட்டேன்” என்கிறார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன்!

ஆக, இஸ்ரேலிற்கு எதிரான வலிமையான இராணுவத்தை கொண்ட ஒரு அரபு நாட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அதனால் இஸ்ரேலிற்கும், மத்திய கிழக்காசியாவில் தனது பொருளாதார நலன்களுக்கும் எந்த பாதிப்பும் வந்தவிடாமல் காப்பாற்றிக்கொள்ளவும், அதனைத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் ‘பரந்த’ நோக்குடனேயே எகிப்து அரசிற்கு பில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுத்து முபாரக் நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது அமெரிக்கா. 1967 இஸ்ரேல் எகிப்து போருக்குப் பின்னான கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் எகிப்து மொக்கையாக்கப்பட்ட பின்னர், அது உருவாக்கிய கிழக்காசியத் திட்டத்தின் பாதுகாவலர்களில் முபாரக் மிக முக்கியமானவர்.

இன்று எகிப்து நாட்டின் இளைஞர்கள் ‘இஸ்லாமிய சகோதரத்துவம்’ என்கிற அமைப்பின் மூலம் உருவாக்கிய மக்கள் எழுச்சி, கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி, மக்கள் கோவமாக வெடித்து 18 நாட்களில் முபாரக் ஆட்சியை சாய்த்தவுடன் ஜனநாயகப் பாடலை பாடுகிறது அமெரிக்கா. இதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, அரசின் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அதனை பயங்கரவாதம் என்று கூறி, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நுழைந்ததைப் போன்று உள்ளே நுழைந்து மற்றொரு இரத்தக் கிளறியை ஏற்படுத்த அமெரிக்கா தயங்கியிருக்காது.


FILEஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் சதாம் ஹூசேன் என்று கூறி, அங்கு படையெடுத்து, தான் அளித்த இராசாயண ஆயுதங்களைக் கூட கண்டெடுக்க முடியாத நிலையில், “நாங்கள் ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூசாமல் பேசிய ஜார்ஜ் புஷ்ஷின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று, “முபாரக் காலம் முடிந்துவிட்டது. அங்கு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுக்கும் நேரம் வந்துள்ளது” என்று ஹில்லாரி கிளிண்டன் பேசுவதும், அடுத்த வரும் ஆட்சியையோ அல்லது ஆட்சியாளரையோ தங்கள் ஆளாக மாற்றும் நோக்கம் கொண்ட வார்த்தைகள்தான் என்பதை எகிப்து மக்கள் அறிய வேண்டும். தனக்கான ஆட்சியை, தனது பொருளாதார நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சியை நிறுவும் ‘ஒரே நோக்கம்’ கொண்டதே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை என்பது.

அது உறவு கொள்ளும் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறதா அல்லது அங்குள்ளவர்கள் ஜனநாயக ஆட்சியாளர்கள்தானா என்கிற வினாவிற்கு விடைகளை தேடிக்கொண்டு அமெரிக்கா உறவை ஏற்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, தனது வசதிக்கான நாட்டையே அது நண்பனாக பார்க்கிறது. உண்மையான ஜனநாயக அக்கறை அதற்கு இருந்திருக்குமென்றால், அது முஷாரஃப் அரசுடன் வாஞ்சையோடு கொஞ்சியிருக்குமா?

தெற்காசிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்கிறது இந்தியா, அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நண்பன் என்கிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவுடனான உறவை உச்சிமேல் வைத்து புளங்காகிதம் அடையும் பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ‘அதெப்படி அவர்களும் நண்பர்கள், நாங்களும் நண்பர்கள்?’ என்று வினா எழுப்பவில்லை! அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை புரிந்தவரல்லவா நமது நாட்டின் பிரதமர்? இல்லையென்னால் அந்நாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அணு விபத்து இழப்பீடு சட்டத்தை நிறைவேற்றுவாரா?


FILEஎனவே இன்றைக்கு எகிப்தின் அடுத்த தலைவர் யார் என்பதை தெரிவு செய்யும் ஒரு மிகப் பெரிய சவால் அந்நாட்டு மக்களுக்கு உள்ளது. மக்கள் புரட்சியை ஆதரித்ததற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த மொஹம்மது எல் பராடீ உள்ளிட்ட பலர் தலைமையை நிரப்ப முன்வரலாம். எகிப்து மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எகிப்து மக்களைப் புரிந்த, மக்களோடு வாழ்ந்துவரும் தலைவர் ஒருவரை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இல்லையெனில், 21வது நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சி பயன்றறதாகப் போய்விடும்.

LINK:http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/15/1110215054_2.htm