செவ்வாய்

யார் இந்த இந்து முன்னனியினர் மற்றும் காங்கிரஸ் காரர்கள்..!



இந்தியா போன்ற நாடுகளுக்கு அனு உலை தேவையா என்பதை ஏற்கனவே நாம் விரிவாக பார்த்துள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும். இந்த நிலையில் அனு உலை எதிர்ப்பு குழுவின் பிரதினிதிகள் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்திற்கு பேச்சுவார்தைக்கு வந்துள்ளனர். அவர்களை இந்து முன்னனியினர் மற்றும் காங்ரஸ் காரர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செருப்பால் அடித்துள்ளனர்.


அணு உலை எதிர்ப்பு குழுவின் போராட்டம் சரியா தவறா என்ற விவாதம் நமக்கு தேவையில்லை. ஆனால் ஒரு ஜன நாயக நாட்டில் அரசின் எந்த ஒரு நடவடிக்கை மற்றும் திட்டங்கள் குறித்து மாற்று கருத்து அல்லது அந்த திட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் இருகுமேயானால், அவர்களுக்கு போராட்டம் நடத்த எல்லா வித உரிமையும் இருப்பதாக அரசியல் சாசானம் கூறுகின்றது. அப்படி இருக்கும் பொழுது மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை தான் இந்த பேச்சுவார்த்தை உனர்த்துகின்றது. எனவே அரசின் நடவடிக்கை பாராட்ட தக்கதுதான்.



ஆனால் போராட்டம் நடத்தும் ஒரு பிரிவினரை அந்த போராட்டதில் உடன்பாடு இல்லாத மற்றொரு பிரிவிவனர் தாக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாறனமாக அமைவதற்கு முன்னால் அந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமாகதான் பின் வரும் காலங்களில் இது போன்ற வன்முறை நடக்காமல் தடுக்க முடியும். எனவே காவல் துறையினர் எந்த தயக்கமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த இந்து முன்னனியினர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்த என்ன உரிமை இருகின்றது. ஜனனாயக வழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை தடுக்க யாருக்கு அதிகாரம் இல்லை. இந்த காங்ரஸ் காரர்களின் மன நிலை என்ன மத்தியில் காங்ரஸ் ஆட்சி செய்தால் அவர்களின் திட்டங்களை யாரும் எதிர்த்து வாய் திரக்க கூடாது என்று நினைகின்றனரா? இது என்ன ஜனனாயகம். அவர்களை ஓட்டு போட்டு அதிகாரத்தில் அமர வைத்தது இந்த மக்கள்தான் அதை மறந்து விட வேண்டாம். நாளை ஓட்டுக்காக கூழக்கும்புடு போட்டுக்கொண்டு இந்த மக்கள் முன்புதான் வந்து நிற்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

திங்கள்

இந்திய அணியை மாற்றியமைக்க வேண்டுமா?




நடந்து முடிந்த ஆஸ்திரேலியா இந்திய இடையிலான  டெஸ்ட் போட்டி களில்  படுதோல்வி அடைந்துள்ளது நமது அணி . இந்திய அணியில்  ஆட்ட நுணுக்கங்களை காணும் பொழுது சில காலத்திற்கு முன்பு டெஸ்ட்  அணி  பட்டியலில் முதலிடம்  மற்றும்  உலக கோப்பை வெற்றி பெற்ற அணி தானா என்பதில் ஐயம் ஏற்படுவதை   தவிர்க்க  முடியவில்லை. இந்திய  அணியை பொறுத்தவரை ஒரு கருத்து  பரவலாக  உள்ளது.

இந்திய துணை கண்டங்களில் சிறப்பான  ஆட்டத்தினை  வெளிபடுத்தும்  நமது  அணி ஆஸ்திரேலிய நியூசிலாந்து மற்றும்  இங்லாந்து   போன்ற வேக  களங்களில் சிறப்பாக விளையாடாது என்பது மட்டும் இல்லாது மிக  மோசமாக  விளையாடும் என்ற ஒரு கருத்து பொதுவாக இருந்து வருகின்றது. அந்த  கருத்தை நிருபிக்கும் வகையில்தான் இந்த ஆஸ்திரேலிய  தொடரும்  அமைந் துள்ளது. இந்த தொடரை காணும் பொழுது சில  விஷயங்கள்  தெளிவாக  தெரிகின்றன. அவைகளை இப்பொழுது காணலாம்.

    சச்சின் சத்தத்தில் சதம் அடிக்கவேண்டும்  என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.


மேலும் அயல்நாடுகளில் அவர்களுக்குச் சாதகமாக பச்சைப் பசுந்தரை களத்தை அமைக்கின்றனர். அதனால் அவர்கள் இங்கு வரும்போது குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு நாம் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற மனோ நிலை சிறுபிள்ளைத் தனமானது.

சச்சின் டெண்டுல்கர் தலைமை வகித்த போது ஆஸ்ட்ரேலியாவிடம் 3- 0 என்று உதை வாங்கித் திரும்பினார். அப்போது தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட வந்திருந்தது. ஸ்ரீகாந்த் பிட்ச் தயாரிப்பு ஆலோசகராக இருந்தார்.

சச்சின், ஸ்ரீகாந்தை அழைத்து தனக்கு முதல் ஓவரிலிருந்தே பந்துகள் திரும்பவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை ஸ்ரிகாந்த் ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். ஆனால் என்னவாயிற்று பந்துகள் திரும்பின, ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறும் நிக்கி போயே 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை தோல்வியுறச்செய்தார்!

அதுதான் எப்போதும் நடக்கும், இதெல்லாம் தீர்வேயல்ல. உண்மையில் நம் 'மகான்' வீரர்களின் ஆட்டம் முடிந்து விட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்வதும், புதிய வீரர்களை அறிமுகம் செய்து அவர்கள் சிறப்பாக விளையாட நல்ல சூழலை அமைத்துத் தருவதும்தான் பி.சி.சி.ஐ.யின் பணியாக இருக்க முடியும்.

இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.


ஞாயிறு

இதெல்லாம் ஒரு பொழப்பு - கிரிகெட் ஜோக்..!

"என்னப்பா ராகுல் டிராவிட் அங்கேயிருந்து மறுபடியும் PAD கேக்கறார், அதான் கட்டிட்டு போனாரே?

அவர் ஒருவேளை ஸ்டம்ப்களுக்கு கேக்கறாரோ என்னவோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"யாரும் ஓய்வு பெற வேண்டியத் தேவையில்லை - சேவாக்"

என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு யாரும் ரிட்டையர் ஆக வேண்டாம்னு சொல்றாரு?

அவங்கள்லாம் ஏதாவதொரு கம்பெனில வேல பாத்திட்டுருப்பாங்கள்ல அதுலேர்ந்து ரிட்டையர் ஆயிட வேண்டாம்னு சொல்லியிருப்பார் போல.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"நாங்களும் இந்தியாவில் 2- 0 என்று வெற்றி பெற்றோம்- சேவாக்"

"அவர் தூக்கத்துல பொலம்பினத அப்படியே போட்டிருக்காங்க! இப்பல்லாம் மீடியா ரொம்ப முன்னேறிடுச்சு சேவாக் தூங்கும் போது கூட மைக்கை வாய் கிட்ட வைக்கிறாங்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"இந்திய மூத்த வீரர்கள் மீண்டும் எழுச்சியுறுவார்கள்-மைக்கேல் கிளார்க்"

என்ன கொழுப்பு பார்த்தியா இவருக்கு! அடுத்த தடவை இந்தியாவுக்கும் வந்து நம்மள உதை கொடுக்க இப்பவே திட்டம் போடறாரு போல"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நிருபர்கள்: என்ன ஸ்ரீகாந்த் சார் 8 மேட்ச் உதை வாங்கியிருக்கோமே உங்களோட கருத்து என்ன?


ஸ்ரீகாந்த்: ஒண்ணும் பெரிசா நடந்துடல! உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் தேவை. அவங்க நல்ல விளையாடினாங்க நாம அத ஒத்துக்கணும்! எப்பவுமே நம்ம பசங்க வெளிநாடுன்னா ஊத்திக்குவாங்க! அதனாலதான் அடுத்த 2 வருஷத்துக்கு ஃபாரின் டூரே இல்லைன்னு ஐ.சி.சி. சொல்லிடுச்சு

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வியாழன்

அணு உலை அணு உலைன்னு கடுபேத்துராங்க மை லார்ட்..!


அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். இந்தியாவில் அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா என்பதை மட்டும் நாம் பார்ப்போம். நமது நாடு ஊழல் நிறைந்த நாடு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை .


உதாரணமாக போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசுமே காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள் முழுமை யாக அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன. அதுமட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

விச வாயு கசிவுக்கு ஆளான யூனியன் கார்பைடு ஆலையை டவ் நிறுவனம் வாங்கி நடத்தி கொண்டுதான் இருக்கின்றது. நம்மால் என்ன செய்ய முடிந்தது. அல்லது நமது ஆட்சியாளர்கள் தான் என்ன செய்தார்கள். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டது எந்த அரசியல் தலைவரும் அல்ல எல்லோரும் அப்பாவி மக்கள் தான். அப்பாவி மக்கள் பாதிக்க பட்டால் அதர்க்காக இந்த நாட்டில் யார் கவலை பட போகின்றார்கள். அவர்கள் ஆடு மாடு போன்றவர்கள் கேக்க நாதியற்றவர்களாய் கோடிகணக்கில் இருகின்றார்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைத்துவிட்டார்கள்.

நடந்த ஒரு விபத்திற்கே இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்னும் முடிவு தெரிய வில்லை. இந்த லட்சணத்தில் அணு உலை அமைக்க சர்வதேச ஒப்பந்தமாம். கடுபேத்துராங்க மைலார்ட்.

தானே புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு நிவரனபநிகளை முடிக்கிவிடவே நமது முதல்வருக்கு நேரம் இல்லை. கருணாநிதி பாதிக்க பட்ட மக்களை காண போகின்றார் என்ற அறிவிப்பு வந்ததும். அவர் மக்களை சந்தித்து நல்ல பெயர் எடுத்து விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் பறந்து வந்து கடமைக்கு சிலரை ஒரு திருமண மண்டபத்திற்கு வரவைத்து பார்த்து விட்டு கிளம்பிவிட்டார். புயல் தாகி இருபத்தி ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையாக மின்சாரம் தரப்படவில்லை.

இந்த லட்சணத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும். நீங்களே சிந்தித்து பாருங்கள்.முதல்வர் எங்கே விபத்துனடந்த பகுதிக்கு சென்றால் கதிர்வீச்சு நம்மையும் பாத்திது விடும் என்று பயந்து போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அறிக்கை கொடுப்பார். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க மத்திய அரசும் கருணாநிதியும் தான் காரணம். பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு ஐந்து லட்சம்கோடி நிதி உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற வகையில் அந்த அறிக்கை இருக்கும். நமது ஆட்சியாளர்களின் லட்சணம் இதுதான் இவர்களை நம்பி எப்படி நாம் அணு உலை அமைக்க முடியும். இங்கு அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்ததாகவே உள்ளது.

இந்தியாவில் அரசு நிறுவனங்களில் அடிமட்டத்தில் இருந்து ஆட்சியாளர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தியாவில் எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. உச்சநீதிமன்றமே அரசு அலுவலகத்தில் ஒவொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம் என்பதை அரசே அறிவித்து விட்டால் மக்கள் சிரமம் இல்லாமல் அந்த தொகையை செலுத்திவிட ஏதுவாக இருக்கும் என்று நய்யாண்டி செய்யும் அளவில் நமது ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்.

அணு உலை அமைப்பதற்கு முன்னாள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குங்கள் பிறகு அணு உலைகளை உருவாக்கலாம்.

செவ்வாய்

எச்சில் துப்பாதே..!

"கிணற்றுள் எச்சில் துப்பாதே-பின்னர் அதையே நீ குடிக்க நேரலாம்!" என்கிறது ஜித்திஷ் பழமொழி.

இதற்கு, "என் வீட்டில் கிணறே இல்லையே; அப்புறம் எப்பூடி..." என்று வடிவேலு பாணியில் கேள்வி கேட்கும் நகரத்துவாசிகளுக்கும், "ஐயையோ! கிணற்றுக்குள்ளா...? "என்று அவசரமாக மறுக்கும் கிராமத்துவாசிகளுக்கும்தான் இந்தக் கட்டுரை!

"பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது" என்று பள்ளியில் நமக்கு அன்போடும் அக்கறையோடும் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.கல்லூரிக் காலத்தில் அது தொடர்பாக பலவற்றைப் பேசிப் பகிர்ந்து, தீமைகளை உணர நிதானமான வாய்ப்பு நிறையவே இருந்திருக்கிறது.

இவ்விரண்டு காலத்துக்கும் பின்னர், அவசர அவசரமாக வேறொரு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம்.முன்பு அன்பாகவும் அமைதியாகவும் சொல்லித் தரப்பட்ட அதே கருத்து, இப்போது நமக்கான எச்சரிக்கையாகி அச்சுறுத்துகிறது.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் "இங்கே எச்சில் துப்ப வேண்டாம்; மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்று எழுதப்பட்டிருப்பது இதற்குச் சான்று!

நின்று நிதானிக்க நேரம் இல்லாமலும், அருகில் தெரிவதை அவதானிக்க முடியாமலும் தினமும் தொடரும் நம் விரைவுப் பயணத்தில், தெருக்களின் நிறங்களை மறைக்கும் அளவுக்கு போதையூட்டப்பட்ட வெற்றிலை பாக்குக் கறைகளில் கால்கழுவியும், ஜலதோசம் பிடித்தவர்கள் உமிழ்ந்த எச்சிலில் சறுக்கியும் செல்வது சகஜமாகிவிட்டது.

இது அருவருப்பை ஏற்படுத்தும் பெருந்துன்பம் என்பதற்கப்பால், குழந்தைகள் உள்ளிட்டவர்களை கொடிய நோய்கள் சுலபமாகத் தாக்கி விடுகின்ற பாதக விளைவுபற்றிச் சிந்திக்கும் நிலையில் நாம் இல்லை.

பொது சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால், அபராதம் விதிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கனடா என்று தொடரும் பட்டியலில், அநேகமான ஆசிய நாடுகளுக்கு இடமில்லை.அதில் இடம்பெற நாம் முயன்றதும் இல்லை.

குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு ஆசிய நாடுகளில் இயங்கிவருகின்ற அரசுசார்பற்ற சில சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் வருடமொன்றுக்கு 1.95 மில்லியன் குழந்தைகள் தொற்றுநோயால் இறந்துவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவில் மட்டும் தினமும் 5,000 குழந்தைகள் டயரியா, நியோமோனியா மற்றும் சுவாசத் தொற்றுநோய்களால் இறந்துவிடுகின்றனர் என்பதும் இவர்களில் பெருமளவினர் 3-5 வயதிற்குட்பட்ட வயதினர் என்பதும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது!


இந்தத் தொற்றுநோய்கள் பல்வேறு காரணிகளால் ஏற்பட வாய்ப்புள்ளது எனினும், சுகாதாரமற்ற சுற்றுச் சூழலே தலையாய காரணி என்பது வெளிப்படை.

இந்த உலகம் வட்டமோ சதுரமோ; அதில் வாழும் நாங்கள் வட்டமடித்து வாழ்கிறோம் என்பது மட்டும் நிஜம்! வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நம் கலாச்சாரமும், பண்பாடும் பகிரப்படுகிறது அல்லது பரஸ்பரம் கவரப்படுகிறது.

இதன்போது, நல்லவை போலவே தீய பழக்கவழக்கங்களுக்கும் நாம் அடிமைகளாகிவிடுவது தன்னியல்பாகவே நேர்ந்துவிடுகிறது. போதையூட்டும் மட்டமான புகையிலைப் பழக்கம், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தாவிவந்து நெடுங்காலமாயிற்று.

அதன் விளைவுகள் பாரதூரமானவை என்று மருத்துவத்துறை எவ்வளவோ அறிவுறுத்தியபோதிலும், மோசமான அந்தப் பழக்கம் இன்னும் பரவியே வருகிறது. இதன் விளைவு, அதனுடன் தொடர்பற்றவர்களையும் குழந்தைகளையும் தாக்கி அழிக்கிறது. நமது தீய பழக்கம் நம்மோடு முடிந்துபோனால் கூடப் பரவாயில்லை. அது பிறரைத் தாக்கவும் காரணமாக உள்ளது என்பது கொடுமையல்லவா?

எனவே, குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை என்றுணர்ந்து செயற்படுவோம்! இதற்காக நாம் ஒன்றுமே செய்யத் தேவையில்லை.

மாறாக, நீங்கள் சுற்றுச் சூழலை அசுத்தமாக்கும் நடவடிக்கைகளைச் செய்யாமலிருந்தாலே போதும். இதில் முதற்படியாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்போம்!நம் தலைமுறையை நோயிலிருந்தும் இறப்பிலிருந்தும் காப்போம்!!


நன்றி: வெப்துனியா 

ஞாயிறு

முகலாய பேரரசின் அறிமுகமும் பாபரும்..!

எனக்கு எப்பொழுதுமே வரலாற்றின்மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே வந்துள்ளது. அதை ஆவணபடுத்தி வைக்கவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்ததின் விளைவாகவே இந்த முகலாய பேரரசின் வரலாற்றை தொடர் பதிவாக எழுத காரணம். இது வரலாறு எதுவெல்லாம் ஆவணப் படுத்தபட்டதோ அதை மட்டும் தான் எழுத முடியும். எனவே இதில் எனது சொந்த சரக்கை எழுத முடியாது. மனிதன் என்ற முறையில் நான் தவறாக ஏதாவது எழுதினால் அதை வரலாறு தெரிந்தவர்கள் சுட்டி காண்பித்தால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் எனது தவறை திருத்தி கொள்ள ஒரு போதும் தயங்கமாட்டேன் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றேன்.


இந்த வரலாற்றை பெரும்பாலான முஸ்லீம்கள் ஏற்றுகொள்வதில்லை. அவர்கள் கூறும் காரணம் வரலாறு திரிக்கப்பட்டு விட்டது. முன்பு இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரும் இப்பொழுது பெரும்பான்மையாக இருக்கும் இந்து ஆட்சியாளர்களும் அவர்களுக்கு தக்கவாறு வரலாற்றை திருத்தி விட்டனர் என்று பரவலாக முஸ்லீம் மக்கள் சொல்லக் கேட்டிருக்கேன். ஆனால் இப்பொழுது நம்கையில் என்ன வரலாறு இருக்கின்றதோ அதைதான் நாம் பதியமுடியும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் சொல்லும் வரலாறு கிடைக்குமேயானால் பிறிதொரு நேரத்தில் அதையும் விரிவாக தொகுக்கலாம் என்றுள்ளேன். அது எந்த அளுவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை பார்க்கலாம்.

முகலாய பேரரசு - ஓர் அறிமுகம்

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.

பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர்ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.

நாம் விரிவாக காணப்போகும் அரசர்களின் பட்டியல்:

பாபர் 1526 1530
ஹுமாயூன் 1530 1540
இடையீடு * 1540 1555
ஹுமாயூன் 1555 1556
அக்பர் 1556 1605
சகாங்கீர் 1605 1627
சாசகான் 1627 1658
ஔரங்கசீப் 1658 1707

பாபர் 1526 -1530

துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்சா என்ற சிற்றரசனுக்கும், மங்கோலிய மாவீரன் செங்கிஸ்தான் பரம்பரையில் வந்த குத்லூக் நிகார் என்பவருக்கும் பிறந்தவர் தான் பாபர்.

1494 ல் பாபரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விடவே பர்கானா என்ற சிற்றரசின் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். அப்போது பாபருக்கு வயது பதினொன்று மட்டுமே. இத்தனை கேள்விப் பட்ட அண்டை நாட்டு சிற்றரசர்கள் ஒரு சிறுவன் தானே என்று படையெடுத்து வந்தவர்களை வென்று சின்னஞ்சிறு வயதிலையே தான் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்று விடாமல் தான் பதிமூன்றாம் வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார்

சாமர்கண்ட் நகரில் திடீரென தோன்றிய பஞ்சத்தால் பாபர் மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் சாமர்கண்ட் நகரையும் இழந்தார். அதே சமயம் அண்டை நட்டு அரசர்களின் சூழ்ச்சியால் தனது சொந்த நாடான பெர்கனாவையும் இழந்தார் பாபர். பின்னர் சில நாட்களிலையே ஒரு சிறு படையை திரட்டி பெர்கானாவை கைப்பற்றினார்

ஆப்கானிஸ்தானில் காபூல் மன்னன் திடீரென இறந்து விடவே, சரியான வாரிசு இல்லாத காரணத்தால் அந்நாட்டை பாபர் கைப்பற்ற திட்டமிட்டார். வெறும் 200 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் காபூலை நோக்கி புறப்பட்டார். போகும் வழியில் பாபரின் தன்னம்பிக்கையை கண்டு வழிநெடுகிலும் உள்ள பல கிராமங்களிருந்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். கி.பி 1504 ல் காபூல் அரியணையில் அமர்ந்தார் பாபர். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு.

இந்த காலகட்டத்தில் இந்தியாவில் சொல்லி வைத்தது போல டெல்லியை கடங்கோலாட்சி புரிந்த இப்ரகாம் லோடியை வீழ்த்த தௌலத்கான் என்பவரிடமிருந்து "எங்களுக்கு உதவ முடியுமா" என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது பாபரின் கைகளுக்கு.. இது தான் தக்க சமயம் என்றெண்ணி ஒரு பெரும் படையோடு புறப்பட்டார்.

உதவி செய்ய வரும் பாபர் நமக்கொரு உபத்திரபமாக மாறிவிடுவாரோ என்று பயந்த தௌலத்கான் சில சிற்றரசர்களை ஓன்று சேர்த்து பாபருக்கு எதிராக போரிட்டான், ஆனால் அனுபவமும் ஆவேசமும் கொண்ட பாபரின் படைக்கு முன் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை..இவர்களை வென்ற வீரமுகத்தொடு டெல்லியை நோக்கி புறப்பட்டது பாபரின் படை.

டெல்லியில் பாபரின் படை இப்ராஹீம் லோடியின் படையை பானிப்பட் என்ற இடத்தில் எதிர்கொண்டது. இந்த போரில் பாபரின் படை அபார வெற்றி பெற்றது.பானிபட் யுத்தம் முடிந்த கையோடு ஹீமாயூன் தலைமையில் ஒரு படை ஆக்ராவை கைப்பற்றியது. இந்த நேரத்தில் தான் உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ஹீமாயூன் கைகளுக்கு வந்தது.

பிறகு சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...

கி.பி 1527 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது. இந்த போரிலும் பாபரி படை அபார வெற்றி பெற்றது. கந்தேரிக் கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர்.தான் வாழ்நாளில் அதிகமான நாட்களை போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார்.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியல், தாவரங்கள், பூக்கள், ஜாதி, மாதம், மக்களின் கணிதத் திறமை மற்றும் கலைத் திறன் என எதையும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை. டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார்.மேலும் தாவரங்கள், பறவைகள் என பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம்..ஆனால் பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும் படியாக முன்னேறவில்லை..

நான்காண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர் டிசம்பர் 26 கி.பி 1530 ம் ஆண்டு அதிகாலை மரணமடைந்தார்.. அப்போது அவருக்கு வயது 48 .பாபரின் உடல் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கக்ரையில் புதைக்கப்பட்டது.

பாபரி நாமா என்ற சுயசரிதை புத்தகம் டெல்லி அருங்காச்சியகத்தில் இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பாபருக்கு பத்து மனைவிகள் இருந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்த காலத்து அரசர்கள் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள் என்பதற்கும் உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் பல சான்றுகள் உள்ளன. அதனால் பாபர் இத்தனை மனைகளுடன் வாழ்ந்தார் என்பதில் பெரிய வியப்பு இல்லை.

பாபரின் மாணவிகள்:
ஆயிஷா சுல்தான் பேகம்
பீபி முபாரிகா யூசுவ்சே
தில்தார் பேகம்
குல்நார் அகச்சா
குல்ருக் பேகம்
மகாம் பேகம்
மசூமா பேகம்
நார்குல் அகச்சா
சாயிதா அஃபாக்
ஸெய்னாப் சுல்தான் பேகம்

இந்த மனைவிமார்கள் மூலம் பாபருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்ததாக அறியப்படுகின்றது.அவர்களின் விவரம் கீழே:

ஹுமாயூன், மகன்
கம்ரான் மிர்ஸா, மகன்
அஸ்காரி மிர்ஸா, மகன்
ஹிந்தல்l மிர்ஸா, மகன்
குல்பதான் பேகம், மகள்
ஃப்கிர்-உன்-நிஸா, மகள்

இவர்களில் ஹுமாயூன் மூத்தமகன் ஆதலால் அரச குடும்ப வழிமுறைப்படி ஹுமாயுன் பாபருக்கு பிறகு மன்னராக முடி சூட்டப்பட்டார்.

                                                                                                 - தொடரும்





சனி

இந்திய அணியின் பதினோறு கோமாளிகள் - III

இதன் முந்தய பாகம் படிக்காதவர்கள் இங்கு படித்துக்கொள்ளவும்


இந்திய அணியின் பதினோரு கோமாளிகள் பாகம் - ஒன்று  பாகம்- இரண்டு
 


அஸ்வின்: இந்திய அணியில் சீனியர் வீரர்கள் எப்படி மொக்கையாக  விளையாடினாலும் அனும்பவம் மட்டும் இருந்தால் போதும். முந்தய  சாதனைகளை வைத்து கொண்டு தொடர்ந்து விளையாடிக் கொண்டே  இருக்கலாம்.  யாரும் ஏதும் செய்ய முடியாது என்ற பல்லவியை ஹர்பஜன்சிங்  விசயத்தில் உடைத்து காட்டியவர்.   
 
என்னதான் ஐபிஎல் மேட்ச்சில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடிக்க கொஞ்சம் போராடவேண்டிதான் இருந்தது. காரணம்  ஹர்பஜன்  என்ற ஜாம்பவான். ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிவிட்டு அணியில் இடம்பிடித்தார். இவர் பந்து வீசும் முறையும்  வித்தியாசமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலிய போன்ற வேக ஆடுகளங்களிலும்   ஓரளவுக்கு விக்கெட்டும் எடுத்து வருகின்றார். இவர் இப்போல்துதான் அணிக்கு  வந்திருக்கின்றார் எனவே இவர் இந்திய அணியில் தொடர்ந்து  தன்னுடைய  இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்வாரா என்று  பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.  
 
ஜாகிர் கான்: நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த தொடக்க காலத்தில் வாசிம்  அக்கரம்,  டொனால்ட் போன்ற அதிவேக பந்து வீச்சாளர்கள் இந்திய  அணிக்கு எப்பொழுது கிடைப்பார்கள் என்ற ஏக்கம் இருக்கும் அதை ஸ்ரீ நாத்  ஓரளவுக்கு  நிறைவு செய்தாலும் சச்சின் கேப்டனாக இருந்த பொழுது ஸ்ரீ நாத்தை   அதிகமாகவே பயன்படுத்தியதின் காரணமாக விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.  அந்த இடத்தை மிக சரியாக நிறைவு செய்தது ஜாகிர்கான் தான்.
 
ஆனால் துரதிர்ஷ்டம் இவர் அதிகமாகவே  காயங்களால் பாதிக்கப்பட்டார்.  அதற்க்கு  காரணம் இந்திய அணியில்  பந்து வீச்சாளர்களை சுழற்சி  முறையில் தேர்ந்து  எடுக்கததுதான்.  ஒரு கட்டத்தில் இவருடைய  கிரிகெட்  வாழ்க்கை முடிந்துவிட்டதாக  தோன்றியது.  இவருக்கு நல்ல நேரம் இருக்கும்  போல காயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும்  இந்திய அணியில் இடம்  பிடித்து விட்டார். இருந்த பொழுதும் எப்பொழுது காயம்   ஏற்படும் என்று  தெரியாது.  எப்பொழுது  வேண்டுமானாலும் காயம் ஏற்படும் என்ற நிலைதான்  உள்ளது.  
 
இஷாந்த் சர்மா: இந்திய அணி வீரர்கள் என்றால் ஐந்து அடி அல்லது  ஐந்தரை அடிதான்  இருப்பார்கள்  என்ற மனநிலை எல்லோரிடமும்  இருந்தது. மற்ற நாட்டு  வேகபந்து  வீச்சாளர்களை எல்லாம் பார்த்தால்  ஆறு அடி  உயரத்திற்கு   மேல் இருப்பார்கள் அவர்கள் பந்துவீச்சு  அச்சுறுத்தும் விதத்தில் இல்லை  என்றாலும் பந்து வீச்சாளர்களின்  தோற்றமே எதிரணி வீரங்களை  பயமுறுத்தும்  விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எதிரணி வீரர்கள்  மத்தியில் ஒரு பாவப்பட்ட ஜந்துவை  போலதான் இருப்பார்கள்.    
 
இந்திய அணியியல் முதன் முறையாக ஆறு அடிக்கும் உயரமான பந்துவீச்சாளர்கள் உண்டு என்று நிருபிக்கும் விதமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர்தான் இஷாந்த் சர்மா. இவரின் ரிவர்ஸ் ஸ்விங் எதிர் அணியில் வயிற்றில் புலியை கரைக்கும் விதத்தில் இருந்தது.  கடந்த  ஆஸ்திரேல சுற்று பயணத்தின் பொழுது ரிக்கி பாண்டிங்கை தனது ரிவர்ஸ் ஸ்விங் மூலம் படாத பாடு படுத்தினார். இவரின் போறாத காலம் டெஸ்ட்  போட்டிகளில் தொடர்ந்து இடம் பிடித்த பொழுதும் ஒருநாள் அணியில்  இவரால் நிரந்தர இடம் பிடிக்க முடிய வில்லை.
 
உமேஷ் யாதவ்: இவர் இப்பொழுதான் சர்வதேச போட்டிகளில் இடம்  பிடித்துள்ளார். ஐவரும் ஒரு அதுவேக பந்துவேச்சாளர் தான். இந்த  ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக தான் பந்துவீச்சி கொடிருக்கின்றார். இவர் இப்பொழுதான் விளையாட ஆரம்பித்திருப்பதால் இவரை பற்றி கணிக்க சிறிது காலம் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
                                                                                                                           -முற்றும்             
 
                   

வியாழன்

வாழ்ந்து கெட்ட மாமேதை..!

ராமராஜன் இந்த பெயர் இன்று அனைவருக்கும் ஒரு கேலிக்குரிய பெயராகிவிட்டது. ஆனால் இரு இருபத்தி மூன்று வருடம் பின்னோக்கி சென்றோம் என்றால் அனைத்து தயாரிப்பாளர்களின் மந்திர சொல் ராமராஜன்.

ஒரு சின்ன கொசுவத்தி:
16 - ஜூன் 1989 வருடம் கரகாட்டக்காரன் என்ற படம் ரிலீசானது.  இந்த படத்தை  G B கம்பைன்ஸ் வெளியிட்டது.   இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்த இயக்கினது இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெரும்ன்னு நானே எதிர்பார்க்கலன்னு ஒரு நேர்காநல்ல  கங்கை அமரனே சொன்னார் அந்த அளவுக்கு அந்த படம் சூப்பர் ஹிட். இந்த படத்தின் தயாரிப்பலார்கள் திரு. கருமாரி கந்தசாமி  மற்றும் ஜெ.துரை அவர்கள். இந்த படம் தொடர்ச்சியாக இறைண்டரை வருடம் ஓடியதாக நினைவு.   

எப்படியாவது ராமராஜனை வைத்து ஒருபடமாவது இயக்கிவிட வேண்டும் என்று  அனைத்து இயக்குனகளும்  ஏங்கிய காலம் அது. எங்கள் ஊர் பகுதிகளில்  கரகாட்டகாரன் பார்க்க மக்கள் வண்டி கட்டி கொண்டு  டூரிங் டாகீச்க்கு  சோத்து மூட்டையுடன் சென்றது 'நல்ல தங்கள்' என்ற  அப்புறம் அது கரகாட்டக்காரனுக்கு  மட்டுமே. அதன் பிறகு பல நல்ல படம் என்று சொல்லிக்கொள்ளும்  அளவுக்கு படங்கள் வந்தாலும் கரகாட்டக்காரன்  அளவுக்கு  கிராமங்களில்  தாக்கத்தை  ஏற்படுத்தவில்லை.  

ராமராஜன் சினிமாத்துறையில் உச்சாணி கொம்பில் இருந்தகாலம் அது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பழமொழிக்கு ஏற்ப காலம் மாறியது. கால ஓட்டத்தில் பல புதிய நடிகர்கள் வர தொடங்கினார்கள். மக்களின் ரசனையும் மாறியது ஆனால் ராமராஜனுக்கு மக்களின் ரசனைக்கு தகுந்தவாறு தன்னை புதுபித்துகொள்ள   தெரியவில்லை. 

பிரபு, சத்யா ராஜ், பாண்டியராஜ் போன்ற நடிகர்கள் தங்களுக்கு எது ஒத்து வருமோ அது போன்ற பாத்திரங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார்கள். உதாரணமாக இரண்டாவது  ஹீரோ பாத்திரம் 
ஆனால் நம்ம ராமராஜ் சார் மட்டும் நடித்தால் ஹீரோ அதுவும். எம்.ஜி. ஆர். அதிகம்  நடித்த ஏழை மக்களுக்கு   உதவுவது. பெண்களை தானாக தேடி செல்லாமல் பெண்கள் கதாநாயகனை தேடிவரவேண்டும். போன்ற  கதை அமைப்புள்ள பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்ததும் தான் இன்று சீறிவரும் காளை, மேதை  போன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை எற்ப்படக்காரணம்.

பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார் அ தி மு க சார்பில் பனிரெண்டாவது லோக்சபா  தேர்தலில்  திருசெந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.  சரி ராமராஜனின்  பாதை மாறிவிட்டது என்று பார்த்தல் பதிமூணு மாதம்தான்  அந்த வாழ்க்கை.  புரச்சி தலைவியின்  ஆசியால் ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும்  வரவேண்டிய நிலை.  

சரி அரசியல் பொழப்புதான் நாசமா போய்டுச்சி நடிப்பு தொழிலையாவது கவனிக்கலாம்  என்றால் 'முத்தின கத்தரிக்காய்' மார்கெட்டில் விலை போகவில்லை. அப்பொழுதான்  எல்லா நடிகர்களும் செய்யும் ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்தார். அதுதான்  சொந்த படம் எடுப்பது அதிலும் மரண அடி. அதன் மூலம் கடன் தொல்லை  குடும்ப பிரச்னை என்று அவர் வாழ்கையில் சூறாவளி அல்ல சுனாமியே வீச  ஆரம்பித்தது.
என்ன லுக்குடா..! இதுக்கு பேர்தான் ராஜபார்வையோ  

இப்படி பல பிரச்சினைகளை சந்தித்து விடா முயற்சியின் காரணமாக இரண்டாவது ரவுண்டுக்கு  மேதை  தயாராகி விட்டார்.  எங்க மக்கள் நாயகன் யானையல்ல விழுந்தால் ஏல முடியாமல்  போக. அவர் ஒரு அரேபிய குதிரை எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து மறுபடியும் விழுந்து மறுபடியும்  எழுந்து மறுபடியும் விழுந்துன்னு உங்கள் மனதை உறுதிபடுத்த  மேதை போன்ற படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருப்பார் என்று தெருவித்து கொள்கின்றோம் 

               
 


புதன்

தகவல்களை தர மறுக்கும் விக்கிபீடியா..!

சர்வதேச இணையதளங்களை தணிக்கை செய்ய புதிய மென்பொருட்களை கொண்டுவருவதால் இணையதளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது போன்றதாகும் என்பதால் இன்று காலை 10.30 மணி முதல் உலகில் ஒரு நாளைக்கு அதிக நபர்கள் பார்வையிடும் மிக முக்கியமான விக்கிபீடியா இணையதளம் தனது ஒருநாள் சேவை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.

விக்கிபீடியாவை இப்போது திறப்பவர்களுக்கு கிடைப்பதெல்லாம் "இமாஜின் எ வேர்ல்ட் விதவுட் ஃப்ரீ நாலெட்ஜ்" என்று கருமையான பிண்ணணியில் வெள்ளையாக எழுதப்படும் வாச்கங்கள் மட்டுமே.

இணையதளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க அரசின் மசோதா பற்றிய விவரங்களுக்கான இணைப்பும், சட்டத்தை இயற்றுவோரை அணுகும் விதம் எப்படி என்ற விவரங்களும் மட்டுமே இன்னமும் 24 மணிநேரத்திற்கு விக்கிபீடியாவில் இருக்கும்.

இதற்கு முன்னதாக விக்கி பீடியாவின் இத்தாலிய பதிப்பு பெர்லுஸ்கோனியின் இணையதள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து சேவை நிறுத்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது ஒரு ஆங்கில பதிப்பு முழு சேவை நிறுத்தம் செய்வது இதுவே முதல் முறை.

விக்கி பீடியாவின் 5 தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நடத்தை விதிகளில் "நடுநிலையான கோணத்திலிருந்து எழுதுவது" என்பது மிகவும் முக்கியமானதாகும்.

விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுகையில், சில விவகாரங்களில் விக்கிபீடியா சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நடுநிலையைத் தவறவிடுவதில்லை என்றார்.

"என்சைக்ளோபீடியா நடுநிலையானதுதான், ஆனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது வேடிக்கை பார்க்காது" என்றார் அவர்.

அம்ரிக்காவில் தணிக்கை மசோதா நிறைவேறுமெனில் ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிபோகும். ஆனால் அமெரிக்க தரப்பு என்ன கூறுகிறது எனில் அமெரிக்க பொருட்களை கள்ளச்சந்தையில் அயல் நாடுகளில் இன்டெர்னெட் மூலம் விற்பதைத் தடுக்கவே இந்த புதிய மசோதா என்கிறது. அமெரிக்காவின் இந்த வாதத்திற்கு அமெரிக்க திரைப்பட மற்றும் இசை தொழில்துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் கூகுள், ஃபேஸ்புக், யாஹு, டுவிட்டர், ஈ-பே, ஏ.ஓ.எல். ஆகிய இணையதளங்கள் அமெரிக்க அரசின் இந்தச் செயல் சுதந்திரப் பேச்சுரிமையை பறிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது எதிர்ப்பை தனது முகப்புப் பக்கத்தில் வித்தியாசமாகக் காட்டும் என்று கூறியுள்ளது.

டுவிட்டர் சி.இ.ஓ. கூறுகயில், தேசிய அரசியலின் ஒரு தனிப்பட்ட விஷயத்தை எதிர்க்க முழு சேவையையும் நிறுத்துவது முட்டாள்தனமானது என்று மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்தாலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாதது என்று வேறு தரப்புகள் தெரிவித்துள்ளன.

எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ல் கொள்ளை.!

தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் பெற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தியுள்ளது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த ஆண்டு பஸ் கட்டணத்தைவிட 50 சதவீதத்திற்கு மேல் கட்டணம் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அ‌தி‌ர்‌ப்தியை ஏற்படுத்‌தியுள்ளது. ஒருபுறம் இப்படி இருக்க தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மறைமுகமாக மக்களை ஏமாற்றி வருவது வேதனையான விஷயமாகும்.

ஆம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவு பேருந்து, சொகுசு பேருந்து இப்படி பல வகையாக பிரித்துள்ளனர். இதெல்லாம் நீண்ட தூரம் செல்லும் பஸ்களுக்கு பொருந்தும். மற்றபடி அனைத்து பஸ்களும் ஒன்றுதான். ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளையடித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இயக்க‌ப்பட்ட பிறகு அனைவரும் இந்த பஸ்ஸில் சென்றால் நேரம் ‌குறைவதா‌ல் பயணிகள் இந்த பஸ்ஸில் செல்லவே முக்கிய‌த்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்ஸிற்காக தனி கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட் பெயரிலேயே எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு பயணிகளிடம் 50 சதவீதத்திற்கு மேல் கட்டணம் வசூல் செய்வது எந்த விததத்தில் சரி என தெரிவில்லை.

உதாரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அனைத்து பஸ்களும் ரூ.26 கட்டணம் உள்ளது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்று போர்டு மட்டும் போட்டுவிட்டு மிகவும் மோசமாக பஸ்ஸில் பயணம் செய்தால் இதே இடத்திற்கு செல்ல ரூ.35 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத்தூர் செல்ல சாதாரண பஸ்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் உட்பட ரூ.29 வசூலிக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இதே இடத்திற்கு செல்ல ரூ.39 வசூலிக்கப்படுகிறது. (மீதம் ஒருரூபாய் கண்டக்டர் கொடுப்பதில்லை என்பது வேறுவிஷயம்).

இந்த கட்டணம் குறித்து எக்ஸ்பிரஸ் பஸ் கண்ணாடியில் எழுதியிருந்தால் கூட பயணிகள் கட்டணம் அதிகம் என அடுத்த பஸ்ஸில் செல்வார்கள். ஆனால் மக்களை ஏமாற்ற அதையும் செய்வதில்லை. பஸ்ஸில் பயணிகள் ஏறி பஸ் சென்றுகொண்டிருக்கும்போது கண்டக்டரிடம் டிக்கட் வாங்கும்போதுதான் இந்தகூடுதல் கட்டணம் பற்றிய தகவல் தெரியவரும்.

ஆகவே அரசு பஸ்களில் பயணிகளை இப்படி ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை ஆட்சியாளர்கள்தான் கூறவேண்டும்.

நன்றி: வெப் துனியா  

செவ்வாய்

இந்திய அணியின் பதினோரு கோமாளிகள்-II

இதன் முந்தய பாகம் படிக்காதவர்கள் இங்கு படித்துக்கொள்ளவும்
இந்திய அணியின் பதினோரு கோமாளிகள் பாகம்- இரண்டு




V V S  லக்ஷ்மன் இவரின் தொடக்க கால கிரிகெட்  வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. இந்திய அணியில் தனக்கான இடத்தை கண்டு பிடிபதற்கு இவர் அதிகமாகவே போராடவேண்டி இருந்தது. இந்த போராட்டத்தில் இவர் தனது ஆட்ட முறையை மற்றாததின்  காரணமாக ஒருநாள் அணியில் இவரால் தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைக்க 
முடியவில்லை. டெஸ்ட் அணியிலும் சோதனை முயற்சி என்ற அடிபடையில்   தொடக்க 
ஆட்டக்காரராகவும் களமிரக்கபட்டார். 

பல போராட்டத்திற்கு பிறகுதான் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார். இவரின்ஆட்ட முறை வெகு இயல்பாகவே டெஸ்ட் போட்டிகளுக்கு பொருந்தி வந்தது .இவர் எப்பொழுதும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாகவே  இருந்து வந்துள்ளார். பொதுவாக இவருடன் ஒரு இயல்பு உள்ளது. முதல்  இன்னிங்க்சில் சிறப்பாக விளையாடவில்லை எனில் இரண்டாவது இன்னிங்க்சில்
சிறப்பாக விளையாடுவார். ஐவரும் ஒய்வு பெரும் தருணத்தை நெருங்கி விட்டதாகவே  தெரிகின்றது. இந்த ஆஸ்திரேலிய தொடரில் இவரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாட வில்லை. 
  
M S தோணி: இந்திய அணியின் சாதனை கேப்டன், இவர் தலைமையில் தான் 20 - 20 உலக கோப்பை 50 ஓவர் உலக கோப்பை டெஸ்ட் அணி ரேங்கிங்கில் நம்பர் 1  என்று எந்த அணி தலைவரும் செய்யாத  சாதனையை இந்திய அணி நிகழ்த்தி காட்டியது. இந்த சாதனை இவரின்   திறமைக்கு  கிடைத்ததுன்னு  சொல்ல முடியாது.  அதிர்ஷ்டம்  இவருக்கு  கைகொடுத்ததுன்னுதான் சொல்லணும்.

என்னை பொறுத்தவரையில்         இவர் ஒரு மந்தமான செயல்படாத கேப்டன்னு தான் சொல்லணும்.  இன்று  இவரின்  தலைமை பதவி  கேள்வி  குறியாகி  உள்ளது.   இவரின் செயல்  பாடுகளை பார்த்து  நான்  முன்பே எதிர்பார்த்து  ஒன்று தான்.

டெஸ்ட்            போட்டி          என்பது ஒருநாள் போட்டியில்                       இருந்து முற்றிலும் வேறுபட்டது.  ஒருநாள் போட்டியில் ரன்களை  கட்டுபடுத்துவது எவ்வளவு  முக்கியமோ  அதுபோல டெஸ்ட் போட்டியில் விக்கெட்  எடுப்பது  மிக  அவசியம். போட்டிகளிபோது  ஒரு சில நான்கு ரன்கள்  போய்விட்டால்  உடனே கல தடுப்பை தளர்த்தி  மட்டை வீச்சாளர்கள்  ஒன்று இரண்டாக  ரன் எடுக்கும் வாய்ப்பை கொடுத்து  விடுவார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் சில நான்கு ரன்கள் போவதை பற்றி கவலை  படாமல் களத்தடுப்பை இறுக்கமாக  அமைத்து மட்டை வீச்சாளர்களுக்கு  அழுத்தம் தரவேண்டும்.  அப்பொழுதுதான் மட்டை வீச்சாளர்  அழுத்தத்தின்  காரணமாக ஒரு சில தவறுகள் செய்ய நேரிடும்.  அதை சரியாக  பயன்படுத்தி அந்த  விக்கெட்டை  எடுக்க முடியும். அதுபோல இவரின் அணுகு முறை பின்கள மட்டை வீச்சாளர்களை  கட்டுபடுத்தமுடியாமல்  பல  ஆட்டங்கள்  வெற்றி  பாதிக்கப்பட்டுள்ளது.   இவரிடம் ஆக்ரோஷம்  இல்லை என்பது போட்டிகளை காணும்பொழுது தெளிவாக தெரியும்.  இவரிடம் டெஸ்ட்  போட்டிக்கான தலைவர் பதவியை கொடுத்தது என்பது  செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கை போன்றது.

விராத் கோலி:  இவர் ஒரு வளர்ந்து வரும் அருமையான இளம் வீரர்.  இவர் ஒருநாள் போட்டிகளில் நல்ல சராசரி  வைத்துள்ளார். தோனியின்  அணுகுமுறையால் இவரின் எதிர்காலமும் கேள்வி குறியாகிடும்போல.  பந்து நன்கு எழும்பும் வேக ஆட்டகலங்களில் சச்சின், திராவிட் போன்ற  ஜாம்பவான்கள் என்று சொல்லும் வீரர்களே தினரும்பொழுது இவர் என்ன  செய்வார். இவர் களமிறங்கும் ஒவொரு ஆட்டத்திலும் இந்திய அணி சொற்ட்ப  ரன்கள் எடுத்து  நான்கு அல்லது ஐந்து விக்கெட் இழந்து தினறிக்கொண்டு  இருக்கும்.  பந்து நன்கு எழுந்து வேகமாக திரும்பும் ஆட்டகலங்களில்  பதட்டம்  காரணமாக விரைவாக வெளியேறும் நிலை ஏற்றப்பட்டு  விருகின்றது. இதற்க்கு அனுபமின்மைதான் காரணம். முனகல வீரர்கள்  நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தால் தான் இவர் போன்றவர்கள் பதற்றம்  இல்லாமல் விளையாட முடியும்.

பதிவு ரொம்ப பெரியதாகி விட்டதால் தொடரும்...!             

திங்கள்

சரி செய்ய முடியாத சாலை போக்குவரத்து.!


நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.


அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'

சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.

இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.

ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?

சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!

தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.

கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?

கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.

சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?

கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?

இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.

கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...

ஞாயிறு

இவிங்க தொல்லை தாங்க முடியலப்பா..! - கிரிகெட் ஜோக்ஸ்


நிருபர்: சார் போன இங்கிலாந்து டூரும்
இந்த ஆஸ்திரேலிய டூர் பத்தின உங்க கருத்து என்ன சார்?

தோணி: இங்கிலாந்துக்கு  கூட்டிட்டு போயி ஒரு குரூப்பு  டெஸ்ட் மேட்ச்ன்ற பேர்ல  மரண அடி அடிச்சானுங்க அடிச்சிட்டு,
 ஒரு விமானத்துல ஏத்தி அனுப்புனாங்க. சரி இந்தியாக்கு தான் அனுப்புறாங்கன்னு நம்பி ஏறுனேன்.

அந்த விமானம் நேரா ஆஸ்திரேலியாவுக்கு போச்சுப்பா அங்க ஒரு  பதினோரு  பேரு நாலு  டெஸ்ட் மேட்ச் சும்மா தெனற தெனற அடிச்சானுங்க சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.

நிருபர்: ஏன் சார் திரும்ப நீங்க அடிக்கலையா?

தோணி: இல்லை

நிருபர்: ஏன் சார்?

தோணி: அதுல ஒருத்தன் சொன்னா
'டேய் இவன் எவ்வளவு அடிச்சாலும் தான்குராண்டா இவன் ரொம்ப நல்லவன்டா அதனால இவனுக்கு
ஒரு விருது குடுத்திடலாம்' அப்படின்னு

நிருபர்:????????

தோணி(அழுதுகொண்டே): நானும் எவ்வளவு நேரம்தான்
வலிக்காதமாதிரியே நடிக்கறது.          

பங்களாதேஷ் கேப்டன்: ஹலோ தோனி! மிஸ்டர் தோனி... ஹலோ பாஸ்...


தோனி: என்னது நாம் பாஸா?

பங்களாதேஷ் கேப்டன்: அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ் இவங்க இப்படித்தான் நம்மள போட்டு மிதிமிதின்னு மிதிப்பாய்ங்க; இதெல்லாம் பாத்தா ஃபீல்டுல இருக்க முடியுமா?

                              @@@@@@@@@@@@@@@@@@@@@

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்!
டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!


ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?

நீங்க வேற மேட்சே அதுக்குள்ளே முடிஞ்சு போச்சு..!

                              @@@@@@@@@@@@@@@@@@@@@


வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு


வீரர் 2 : ஏன் என்னாச்சு?

வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!
 
                              @@@@@@@@@@@@@@@@@@@@@
 

பிளெட்சர்: எல்லாரும் கன்னாபின்னான்னு பேட்டிங் ஆடறீங்க வாங்க வாங்க எல்லாரும் பயிற்சிக்கு வாங்க!


தோனி: (நைசாக நழுவிய படியே) ஆமாமாம்! எல்லாம் பயிற்சிக்கு செய்ங்க!

பிளெட்சர்-தோனியிடம்: நீ எங்க எஸ்கேப் ஆர, உனக்குத்தான் பயிற்சியே தேவை!

தோனி: கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டுருக்கு!

புதன்

பன்ச்..! - மூக்கு உடைந்தால் கம்பெனி பொருப்பல்ல!!





'பஜ்ஜி' இல்லாமல் ஆஸ்திரேலியா போயிருக்கக் கூடாது -வாசிம்.
யோவ் நீயெல்லாம் பெரியமனுசனா? நாம என்ன பொண்ணு பார்க்கவா போறோம்?

*******************************************

கற்பூரம் காட்டி வழிபட்ட காலண்டர் கடவுள் வருட முடிவில் குப்பைத்தொட்டி சென்றுவிட்டார்.

********************************************

நைட்டியின் பெயரை மேக்ஸி என்று மாத்தியாச்சாமே?
இனி நைட்டி பற்றி பேசுவோர் மீது 'ஆணாதிக்க குண்டர்' சட்டம் பாயுமோ?

********************************************

அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி பேர் எல்லாம்... கரெக்டா தெரிந்து இருக்கும் நகரவாசி பலருக்கு.
பக்கத்து வீட்டுக்காரன் பேரு மட்டும் தெரியாது.

******************************************

காமம் என்பார் கலீஜ் என்பார் நாணிநிப்பார் நாசமா போவார்
பட்டாங்கில் உள்ளபடி.!! பொழப்ப பாருங்கையா.

*******************************************

பேச்சிலர்க்கு வீடு தர மாட்டாங்களாம்.
ஆனா பிள்ளையார மட்டும் வீட்ல வெச்சி கும்புடுவாங்கலாம்.

********************************************

எனக்கொரு டவுட் கொலைவெறி பாடல் இங்லீஸ்ல தானே இருக்கு அப்படி கேவலப்படுத்தினாலும் அது இங்லீஷ்க்தானே கேவலம்?
அந்த பாட்ல தமிழே இல்லையே

**********************************************


குறிப்பு: இந்த பன்ச் எல்லாம் ட்வீடர்ல வந்தது.





திங்கள்

என்ன கொடுமை சார் இது...! - கிரிகெட் ஜோக்ஸ்



என்னப்பா இந்த சேவாக் டிவி-யை போடறதுக்கு முன்னாலேயே அவுட் ஆயிடறார்?


இது பரவாயில்லை போன இன்னிங்ஸ்ல இறங்கறதுக்கு முன்னாலயே அவுட் ஆயிட்டார்னா பாத்துக்கயேன்.

                                       ******************************
 தோனி: பீ கேர் ஃபுல் அடுத்த டெஸ்ட்ல ஜெயிச்சு...

கிளார்க்: என்ன சொன்னீங்க?

தோனி: நான் உங்களச் சொன்னேன்!
          
                                       *******************************
 நிருபர்: உள்நாட்டுல பயங்கரமா ஆடி சூரப்புலி கணக்கா இருக்கீங்க? வெளிநாட்டுலன்னா பதுங்கற பூனையாயிடறீங்களே ஏன்?

தோனி: உள்நாட்டுல ஜெயிக்கறதுனாலதான இப்படி கேக்கறீங்க, இனிமே உள்நாட்டுலையும் தோத்து நாங்க யார்னு உங்களுக்கு கூடிய விரைவில் நிரூபிக்கிறோம்!

                                       *******************************
தோனி: இங்கிலாந்துல ஒரு 11 பேர் கூட்டிட்டுப் போயி கும்கும்முனு கும்மினாங்க, அடுத்து ஆஸ்ட்ரேலியாகாரன் அவங்க ஊருக்கு கூட்டிட்டு போயி மாறி மாறி டயர்ட் ஆக வரைக்கும் அடிச்சாங்க...

"இவ்வளவு அடி வாங்கினீங்களே உங்களுக்கு கோபமே வரலியா?

"அங்கதான் என்ன "கேப்டன் கூல்"னு சொல்லி அடக்கிட்டாங்களே...
                          
                                       *********************************
சச்சின் டெண்டுல்கர் 100வது செஞ்சுரியை எப்பத்தான் அடிப்பாரு?

100வது வயசுல 100வது சதம் எடுக்கறது ஒரு சாதனைன்னு அவர் கிட்ட யாராவது சொல்லித் தொலைச்சுட்டாங்களோ என்னவோ!

                                       ***********************************
 நிருபர்: எதிர் அணி பேட்ஸ்மென்களை நீங்க ரொம்ப சுலபமா ரன் எடுக்க அனுமதிக்கிறீங்கன்னு உங்க மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கே?

தோனி: அவங்கதான் சின்னப்பிள்ளத் தனமா நம்ம பேட்ஸ்மென்களுக்கு ரன் தர பிடிவாதம் பிடிக்கறாங்கன்னா நம்மளும் அப்படியா இருக்கறது, அப்பறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?


                                     ************************************
தோனியிடம் அணி மேலாளர்: தோனி! சச்சின், லஷ்மண் அவுட் ஆயிட்டாங்க!

தோனி: என்னடா லஞ்ச் முடிஞ்சுடுச்சே இன்னும் எதுவும் நடக்கலையேன்னு பார்த்தேன்!

                                    **************************************
கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: தோனி! நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா?

தோனி: நீங்க ஜெயிக்கறா மாதிரிதானே விளையாடறேன்?

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: பாண்டிங், ஹஸ்ஸியையெல்லாம் நாங்க தூக்கறதாயிருந்தோம் இப்ப நீங்க ரன் எடுக்க விட்டுட்டீங்க!

தோனி: அது உங்களுக்கு நல்லதுதானே!

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா: மண்ணாங்கட்டி! கிரெக் சாப்பல், ரிச்சி பெனோ, ஆலன் பார்டர், கிம் ஹியூஸ் எல்லாரும் நானும் தயாராத்தான் இருக்கேன் எனக்கும் வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க அதுக்குக் காரணம் நீங்கதான?

                                      ***************************************
தோனி: டாஸ் ஜெயிச்சு பேட்டிங் செஞ்சேன்; 191ரன்னுக்கு ஆல் அவுட் ஆனா நான் என்ன செய்ய முடியும்?

மேலாளர்: அவங்கள முதலில் பேட் செய்யச் சொல்லவேண்டியதான?

தோனி: அவங்க 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தா நாம ஜெயிக்கற மாதிரி வந்துடும். ஜெயிக்கறதுனாலே பசங்க ரொம்ப பயப்படறாங்க!

                                       ***************************************
என்ன சார் இது ரோஹித் ஷர்மாவை உக்கார வச்சுட்டு கோலியை விளையாட வைக்கிறீங்க, அவருக்கு பேட்டிங் வரல்லியே சார்!

தோனி: எனக்கு மட்டும் வருதா என்ன? அதையெல்லாம் பார்த்தா முடியுமா பாஸ்!

                                      *****************************************

நன்றி: வெப்துனியா  

சனி

பதிவு பட்டியல்...!

நன்பேண்டா...!: இந்திய அணியின் பதினோறு கோமாளிகள்..!

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இந்திய அணி விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுது ஏதோ வாங்க தேசம் அணி விளையாடுவது போல உள்ளது. இந்திய வீரர்கள் ஏதோ இப்பொழுதுதான் முதன் முதளில்


சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடும் கத்து குட்டி அணி போல விளையாடுகின்றார்கள்.

 


 
தமிழ் நாட்டை தலை கீழாக மாற்றிய தானே..!


தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பை பக்கம் பக்கமாக விவரித்து எழுத்துக்களால் கூறுவதை விட, கூற முடியாத பல செய்திகளை ஒரு புகை படம் கூறிவிடும்




மக்களே.! மக்களின் மக்களை...! தனுசின் கொல வெறி பாட்டுக்கு போட்டியா நம்ம ஒஸ்தி சிம்பு வெளியிட்டு இருக்கும் இந்த பாட்டு தனுஷின் கொலைவெறி பாடல் அளவு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பாப்போம்.

தணுஷே கொல வெறி பாடல் இந்த அளவு வெற்றி பேரும்னு எதிர் பார்த்திருக்க மாட்டார். இணையதில பார்த்தா ஏகப்பட்ட கொல வெறி ரீமிக்ஸ் வந்துகிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம ஜப்பான் அதிபர் மற்றும் நம்ம மன்மோகன் சிங் கூட நம்ம தனுஷ் விருந்து உண்ணுகின்ற அளவுக்கு தனுஷுக்கு வாய்ப்பு இந்த பாட்டு ஏற்ட்படுதி குடுத்திருக்கு.




எனவே இந்த புகை படங்களுக்கு விளக்கம் தேவை இல்லையென நினைகின்றேன்.