இதன் முந்தய பாகம் படிக்காதவர்கள் இங்கு படித்துக்கொள்ளவும்
அஸ்வின்: இந்திய அணியில் சீனியர் வீரர்கள் எப்படி மொக்கையாக விளையாடினாலும் அனும்பவம் மட்டும் இருந்தால் போதும். முந்தய சாதனைகளை வைத்து கொண்டு தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கலாம். யாரும் ஏதும் செய்ய முடியாது என்ற பல்லவியை ஹர்பஜன்சிங் விசயத்தில் உடைத்து காட்டியவர்.
என்னதான் ஐபிஎல் மேட்ச்சில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடிக்க கொஞ்சம் போராடவேண்டிதான் இருந்தது. காரணம் ஹர்பஜன் என்ற ஜாம்பவான். ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிவிட்டு அணியில் இடம்பிடித்தார். இவர் பந்து வீசும் முறையும் வித்தியாசமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலிய போன்ற வேக ஆடுகளங்களிலும் ஓரளவுக்கு விக்கெட்டும் எடுத்து வருகின்றார். இவர் இப்போல்துதான் அணிக்கு வந்திருக்கின்றார் எனவே இவர் இந்திய அணியில் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜாகிர் கான்: நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த தொடக்க காலத்தில் வாசிம் அக்கரம், டொனால்ட் போன்ற அதிவேக பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு எப்பொழுது கிடைப்பார்கள் என்ற ஏக்கம் இருக்கும் அதை ஸ்ரீ நாத் ஓரளவுக்கு நிறைவு செய்தாலும் சச்சின் கேப்டனாக இருந்த பொழுது ஸ்ரீ நாத்தை அதிகமாகவே பயன்படுத்தியதின் காரணமாக விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார். அந்த இடத்தை மிக சரியாக நிறைவு செய்தது ஜாகிர்கான் தான்.
ஆனால் துரதிர்ஷ்டம் இவர் அதிகமாகவே காயங்களால் பாதிக்கப்பட்டார். அதற்க்கு காரணம் இந்திய அணியில் பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கததுதான். ஒரு கட்டத்தில் இவருடைய கிரிகெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக தோன்றியது. இவருக்கு நல்ல நேரம் இருக்கும் போல காயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து விட்டார். இருந்த பொழுதும் எப்பொழுது காயம் ஏற்படும் என்று தெரியாது. எப்பொழுது வேண்டுமானாலும் காயம் ஏற்படும் என்ற நிலைதான் உள்ளது.
இஷாந்த் சர்மா: இந்திய அணி வீரர்கள் என்றால் ஐந்து அடி அல்லது ஐந்தரை அடிதான் இருப்பார்கள் என்ற மனநிலை எல்லோரிடமும் இருந்தது. மற்ற நாட்டு வேகபந்து வீச்சாளர்களை எல்லாம் பார்த்தால் ஆறு அடி உயரத்திற்கு மேல் இருப்பார்கள் அவர்கள் பந்துவீச்சு அச்சுறுத்தும் விதத்தில் இல்லை என்றாலும் பந்து வீச்சாளர்களின் தோற்றமே எதிரணி வீரங்களை பயமுறுத்தும் விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எதிரணி வீரர்கள் மத்தியில் ஒரு பாவப்பட்ட ஜந்துவை போலதான் இருப்பார்கள்.
இந்திய அணியியல் முதன் முறையாக ஆறு அடிக்கும் உயரமான பந்துவீச்சாளர்கள் உண்டு என்று நிருபிக்கும் விதமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர்தான் இஷாந்த் சர்மா. இவரின் ரிவர்ஸ் ஸ்விங் எதிர் அணியில் வயிற்றில் புலியை கரைக்கும் விதத்தில் இருந்தது. கடந்த ஆஸ்திரேல சுற்று பயணத்தின் பொழுது ரிக்கி பாண்டிங்கை தனது ரிவர்ஸ் ஸ்விங் மூலம் படாத பாடு படுத்தினார். இவரின் போறாத காலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் பிடித்த பொழுதும் ஒருநாள் அணியில் இவரால் நிரந்தர இடம் பிடிக்க முடிய வில்லை.
உமேஷ் யாதவ்: இவர் இப்பொழுதான் சர்வதேச போட்டிகளில் இடம் பிடித்துள்ளார். ஐவரும் ஒரு அதுவேக பந்துவேச்சாளர் தான். இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக தான் பந்துவீச்சி கொடிருக்கின்றார். இவர் இப்பொழுதான் விளையாட ஆரம்பித்திருப்பதால் இவரை பற்றி கணிக்க சிறிது காலம் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.
-முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக