அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைய துவங்கியதுமே
எப்படியும் பெட்ரோல் விலை உயர்த்த படும் என்று நான் முன்னமே எதிர் பார்தேன். எதிர்பார்த்தது போல அம்பானி குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கும் மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றி விட்டது. நம்ம மத்திய அரசுக்கு மக்கள் கஷ்ட படுவதை பற்றி கவலை இல்லை. அம்பானி மல்லைய போன்ற வர்கள் கஷ்டப் படகூடாதுன்னு அவர்களுக்காகவே ஆட்சி நடத்தும் நம்ம மதிப் புக்குரிய பொருளாதார மேதை மன்மோகன் சிங்கிடமும் அன்னை சோனியா விடமும் விலையேற்றத்தை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.
இதுல பெரிய காமெடி என்னன்னா புரட்சி தலைவி அம்மா ஆட்சியில் தமிழகத்தில் பாலாரும் தேனாறும் ஓடுற மாதிரியும் தமிழக மக்கள் அனைவரும் சுக போகமா எந்த கஷ்டமும் இல்லாம நிம்மதியா வாழ்ற மாதிரியும் இந்த பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்க படுவாங்க அவங்க விடும் கண்ணீர் மத்திய அரசை சும்மா விடாதுன்னு சாபம் விட்டுகிட்டு இருக்காங்க.
ஏற்கனவே மக்கள் அம்மா தயவால் பால் விலை உயர்வு பஸ் கட்டண உயர்வு மின்சார கட்டண உயர்வுன்னு விலை உயர்வை எல்லாம் பார்த்து பழகிட்டாங்க. இப்ப இந்த பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை பொறுத்த வரை பத்தோடு பதினொன்னு அவ்வளவு தான். அதனால புரட்சி தலைவி அம்மா அவர்களே மக்கள் கஷ்ட படுவாங்கன்னு வறுத்த படாதீங்க வழக்கம் போல பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு கிளம்புங்க வெயில் அதிகமாயிடுச்சி உடன்பிறவா சகோதரிய கூட்டிகிட்டு கொடநாடு பொய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அதுக் குள்ள மத்த கட்சிகாரங்க எல்லாம் போராட்டம் நடத்தி வழக்கம் போல 1 அல்லது 2 ருபாய் விலையை குறைபாங்க அப்ப வந்து என்னால்தான் மத்திய அரசு இந்த விலையை குறைக்க முன்வந்ததுன்னு அறிக்கை விட்டுக்கலாம் கொடநாடு கெளம்புங்க வெயில் அதிகமாகிட போகுது.
நம்ம கலைஞர் அதுக்கு மேல காமெடி பண்ணிக்கிட்டு இருக்கின்றார். பெட்ரோல் உயர்வை வாபஸ் பெறக் கோரி வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய
அரசு அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மத்தியில் அரசில் இருந்து கொண்டே
மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துகிறார்களாம். அதாவது, தங்களை
தாங்களே எதிர்த்துப் போராட்டம் நடத்துவது மாதிரி.
இப்படி பட்ட தலைவர்களை வைத்து கொண்டு இவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும். நம்மை ஆள்வதற்கு நல்ல தலைவர்கள் இல்லாதது நமது தலை எழுத்ததுன்னு நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியதுத் தான். வேணும்னா ஒன்னு பண்ணலாம் உன்குத்தமா என்குத்தமா யார நானும் குத்தம் சொல்லன்னு பாடிகிட்டே வண்டிக்கு பெட்ரோல் போட எக்ஸ்ட்ராவா காச எடுத்துகிட்டு கிளம்புங்க



