தலையங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலையங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

கிரிக்கெட்டால் நாம் பெற்றது அதிகமா? அல்லது இழந்தது அதிகமா?


ஒரு காலத்தில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்ற அளவில் இருந்தது. சிலர் மைதானத்தில் விளையாட பலர் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தனர். மெல்ல மெல்ல கிரிகெட் தெற்காசிய நாடுகளில் கால் ஊன்ற துவங்கியது. குறிப்பாக உலகின் மிகபெரிய சந்தை பகுதியான இந்தியாவில்  கால் ஊன்ற துவங்கியது. அப்படி இந்தியாவில் கால் ஊன்ற துவங்கிய கிரிகெட் இந்திய மக்களிடம் இருந்த பெரும்பான்மையான விளையாட்டுக்களை குழி தோண்டி புதைத்தது.

இன்று  நம்மை ஆட்டிவித்துக் கொண்டிருக்கும் கார்பெரேட் நிறுவனங்கள். கருப்பு என்பது ஒரு தீண்ட தகாத நிறம் என்பது போலவும். கருப்பாக இருப்பவர்கள் சமுதாயத்தில் ஒதுக்க பட வேண்டியவர்கள் எனவும் தனது விளம்பரங்கள் மூலமாக பிரச்சாரம் செய்துவருவதன் பாதிப்பு இன்றைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினாலே அவர்கள் கருப்பாக மாறி விடுவார்கள்.  வெயில் கொடுமையால் அவர்கள்  எதிர் காலமே வீணாகி விடும்.  கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தும் இன்று அவர்கள்  வெயிலில் சுற்றி  கருப்பாக மாறியதால்  பாதிக்க படும் என்ற மன நிலைக்கு நமது கார்பரேட் நிறுவனங்கள் நமது சமூகத்தை மாற்றி விட்டது.

மேலும் குழந்தை பருவம் என்பது எதிர் காலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே ஏதாவது ஒரு நிறுவனத்தில் அடிமையாக வேலை பார்த்து மாதா மாதம் சம்பளம் பெற தயார் படுத்தும் ஒரு பருவமாக மட்டுமே குழந்தை பருவத்தை பார்க்கும் மன நிலையை நமது கல்விக்கூடங்களும் பெற்றோரும் ஏற்படுத்தி விட்டனர். குழந்தை பருவம் என்பதும் மாணவ பருவம் என்பதும் படிக்க மட்டும் தான் என்ற மன நிலைக்கு நமதும் பிள்ளைகளும் வந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் நமது பிள்ளைகளை எந்த நேரமும் படித்து கொண்டிருப்பதும் டிவி பார்ப்பதும் மட்டுமல்ல. விளையாடுவதும் இந்த பருவத்தின் ஒரு அங்கம் தான் என சிறிதாவது சிந்திக்க வைத்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வர பெரிதும் உதவுவது கிரிகெட் மட்டுமே. இந்த பிள்ளைகளிடம் கிரிகெட் அறிமுகமாகி இருக்கா விட்டால் எந்த ஒரு குழந்தையும் விடுமுறை நாட்களில் கூட வீட்டை விட்டு வெளியே வர வேண்டி இருந்திருக்காது.

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மட்டும் நடந்த காலத்தில் அது பெரும்பாலான தெற்க்காசிய நாடுகளில் ரசிக்கும் விளையாட்டாக  இல்லை. பின்பு அறிமுகமான ஒருநாள் போட்டியின் மூலமாக தெற்காசிய நாடுகளில்  அது அசூர வேக வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக இந்தியாவில் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ந்தது.

இந்த கால கட்டத்தில் தான் உலகின் மிக பெரிய சந்தையான இந்தியாவில் கால் ஊன்ற ஒவொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. பெரு நிறுவனங்களுக்கு தங்களின் பொருளை சந்தை படுத்த இந்த கிரிகெட் எனும் மந்திர சொல் பெரிதும் உதவும் என்பது புரிய ஆரம்பித்தது. அந்த புள்ளியில் இருந்து தொடங்கியது கிரிகெட்டின் அசூர வளர்ச்சி.

இந்திய அணியையும் அதில் விளையாடும் வீர்களும் இந்தியர்கள் மனத்தில் ஒரு ஹீரோவாக பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எந்த பொருளை வாங்க சொல்கின்றார்களோ அந்த பொருளை மக்கள் கண்ணை மூடி கொண்டு வாங்குவார்கள். அவர்களை ஹீரோவாக்க வேண்டு மென்றால் அதற்கு ஒரு வில்லன் வேண்டும் அல்லவா. இருக்கவே இருகின்றார்கள் பாகிஸ்தானியர்கள். நமது அரசியல் வாதிகளும் மீடியாவும் நமது மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் முதல் நமது வீட்டு குடிநீர் குழாயில் குடிதண்ணீர்  வராமல் இருப்பது வரை அனைத்திற்கும் பாகிஸ்தானின் சதிதான் காரணம் என்ற பிம்பம். அதே போன்று பாகிஸ்தானிலும் அவர்களுக்கு காலை தூங்கி எழுந்ததும் கக்கா வர வில்லை என்றாலும் அதற்கும் இந்தியாவின் ரா அமைப்புதான் காரணம் என நம்ப வைத்து இருகின்றார்கள். ஆகா இந்திய கிரிகெட்டிற்கு ஒரு வில்லன் கிடைத்தாகி விட்டது.

 இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை இரு நாட்டுக்கும் இடையில் நடக்கும் போரை போன்று மீடியாக்களால் ஊத்தி பெருசாக்க பட்டது. இந்திய விளையாட்டில் தோற்றால் ஒவ்வொரு இந்தியனும் நேரடியாக பாகிஸ்தானிடம் தோற்றதாக வருதப்பட்டான். இந்தியா வெற்றி பெற்றால் அவனே நேரடியாக பாகிஸ்தானுடன் சண்டை இட்டு வெற்றி பெற்றதாக ஆர்ப்பரிதான். அவன் சார்பாக போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்ற வீரர்கள் அவன் மனதில் ஹீரோவாக அல்ல கடவுளாக தெரிந்தார்கள்.

இந்த நாளுக்காக தான் காத்து இருந்தார்கள் பெரு நிறுவன முதலாளிகள். இந்த வாய்ப்பை கிரிகெட் எனும் பிம்பத்தை மிக சரியாக பயன் படுத்த துவங்கினார்கள். அதன் விளைவு காலையில் தூங்கி எழுந்து எந்த பற்பசைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்பதில் துவங்கி இரவு தூங்கும் போது எந்த நிறுவனத்தின் காற்றாடி துணை கொண்டு தூங்க வேண்டும் என்பது வரை முடிவு கார்பரேட் நிறுவனங்களே முடிவு செய்தன. நாம் அனைவரும் அவர்களின் பொருட்களுக்கு அடிமையாகி போனோம்.

தொழில் போட்டி அதிகமானது. மேலும் யோசித்தார்கள். கிரிகெட் தங்க முட்டை இடும் வாத்து அதை வைத்து முடிந்த வரை சம்பாதித்து விட வேண்டும் என முடிவெடுத்தார்கள். இரு நாடுகளுக்கு இடையில் போட்டி நடத்தி  தேசிய பற்றை ஊட்டி அதன் மூலம் சம்பாதிப்பது மட்டும் போதாது. வேறு எதாவது செய்தாக வேண்டும். யோசித்தார்கள். கிரிக்கெட்டில் தேசிய உணர்வு என்பதை தாண்டி அதை ஒரு கமர்சியல் சினிமாவாக மாற்றினால் என்ன என யோசித்தார்கள். ஐம்பது ஓவர் கொண்ட போட்டிகளாக இருந்ததை இருபது ஓவர்களாக குறைத்தார்கள். துவக்கம் முதல் இறுதி வரை அதிரடி, அரைக்குறை ஆடை உடுத்திய வெளிநாட்டு மங்கைகளின் ஹை டெக்  நடனம். வீரர்களிடையே உள்நாடு வெளி நாடு என்ற பாகு பாடு கிடையாது. அணைத்து வீரகளையும் ஏல முறை விற்பனை அவர்களை வாங்கும் கார்பரேட் நிறுவனங்கள் என புது ஜிகினா பூசும் வேலையை வேலைகள் செய்தார்கள். பணம் பணம் எங்கு திரும்பினாலும் பணம்.

பேராசை யாரை விட்டது நிறுவனங்கள் கொட்டித் தரும் பணம் விளம்பரம் மூலம் கோடிகளில் பணம் இருந்தும் போதவில்லை. பண ஆசை யாரை விட்டது. பணத்திற்கு ஆசை பட்ட வீரர்கள்.சூட்டத்தில் ஈடு பட்டதால் காவல் துறையால் கைது செய்ய பட்டார்கள். இவர்கள் கைது செய்ய பட்டதால் கிரிகெட் எந்த விதத்திலும் பாதிக்க பட போவதும் இல்லை. அது பாதிக்க நமது பெரு முதாளிகள் விட போவதும் இல்லை. இது மனம் காய்க்கும் மரம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நாமும் இதோ இந்த சேனலில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்கள் கைது என்ற செய்தியை பார்த்து விட்டு அடுத்த கணமே சேனலை மாற்றி ஐபிஎல் மேட்சை பார்க்க துவங்கி விட்டோம்.

இந்த விளையாட்டால் நாம் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா முடிவை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.  

 

வியாழன்

விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா?


சர்ச்சை நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம்கள் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடை விதிற்கும் அளவுக்கு சென்றுள்ளதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.  .எப்பொழுதுமே கமல் தனது படங்களில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்தும் கேலிசெய்வது போன்ற காட்சி அமைப்பது நாம் அறியாத ஒன்றல்ல.

சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். கமலஹாசன் தான் விரும்பியதை திரைப்படமாக எடுப்பதில் தவறு இல்லை. இது ஜனநாயக நாடு இங்கு ஒருவர் தனது கருத்தை திரைப்படமாக எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அதை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்றெல்லாம் சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று புலம்புகின்றவர்கள் ஒன்றை மனதில் வைத்துகொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது என்ன அதற்கான அளவுகோல் என்ன என்பதை விளங்க வேண்டும். நமது ஊரில் பொதுவாக சுதந்திரத்தைப் பற்றி ஒன்றை சொல்லுவார்கள். அதாவது நமது சுதந்திரத்தின் எல்லை கோடு எதுவரை என்றால் நாம் நமது கையை நீட்டினால் நமக்கு எதிரில் இருக்கும் நபரின் மூக்கு நுனி வரை நமது சுதந்திரம் நமக்கு உண்டு. நமது கை நமக்கு முன்பிருக்கும் நபரின் மூக்கு நுனியில் பட்டுவிட்டால் நாம் அவரின் சுதந்திரதில் கை வைத்து விட்டோம் என்று பொருள். அது போல கமல் தனது கருத்தை சொல்லலாம் எதுவரை என்றால் முஸ்லீம்களின் மூக்கு நுனி மீது கமலின் கை படும் வரை. முஸ்லீம்கள் கமல் நீட்டிய கை எங்கள் மூக்கு நுனியில் படுகின்றது ஆகவே கமலஹாசன் தனது கையை மடக்கி கொள்ள வேண்டும் என கூறுகின்றார்கள். இது எந்த வகையில் கமலின்  கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

கமலஹாசன் அவர் எடுக்கும்  திரைப்படங்களில்  தன்னை பற்றி எதுவேண்டு மென்றாலும் சொல்லலாம் அது  அவர் கருத்து சுதந்திரம். தான்  நாத்திகன் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை  என சொல்வது அவர் உரிமை. அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் பைதியகார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா. அது போல தாங்கள் திரைப்படம் எடுக்கலாம் தவறு இல்லை அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேறு ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை  ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

கமல் தான் விரும்பிய அனைத்தையும் சொல்லும் உரிமை  இருக்கிறது. அது எதுவரை என்றால் மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வரை  மட்டுமே. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் இதை புரிந்து  கொள்ள வேண்டும்.  

சனி

முஸ்லீம்களே வன்முறையை ஆதரிகாதீர்..!

முஹமது அவர்களை கீழ்தரமாக சித்தரித்து அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது. இத்ற்கு உலகம் முளுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு சாதரன நையாண்டி செய்யப்பட்டு எடுக்க பட்டதாக தோன்றலாம். ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரைக்கும் அவர்களின் மத உனர்வை புன்படுத்தும் விதத்தில் இது அமைந்து உள்ளது. நாமும் அவர்களின் மத உனர்வை மதித்து நமது கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

 

அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.

 

இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.

 

எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.


 

வெள்ளி

மதத்தை விமர்ச்சிக்கலாம் நாகரீகமாக..!



 
  
சமீபகாலமாக பதிவுலக நடக்கும் சண்டைகளை பார்க்கும் பொழுது மிகவும் வெருக்க தக்க வகையில் உள்ளது. அந்த சண்டையில் மதம் பிரதான இடம் வகிக்கின்றது. மதம் மனிதனை பக்குவப் படுத்தி அவனை நேர்வழியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாராக ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுதும் வகையில் அது இருக்க கூடாது. என்னை பொருத்த வரையில் சில மூட பழக்கவழக்கங்களை தவிர மதங்களில் எந்த குறையும் இருப்பதாக படவில்லை. அதை பின் பற்றும் மனிதனிடம்தான் குறை உள்ளதாகவே தோன்றுகிறது. எல்லா மதங்களுமே அமைதியயும் அன்பையும் தான் போதிகின்றன.

 

மததின் பெயரால் ஏன் இத்தனை சண்டைகள். ஒருவர் மற்றவரின் மததை அவமதிப்பது போல் சமீபத்தில் அதிக அலவில் பதிவுகள் வந்து கொண்டு இருகின்றது. நாட்டில் வேரு எந்த பிரசினையும் இல்லயா. பதிவில் எழுத நாட்டில் என்னற்ற பிரசினைகள் நிறைந்து உள்ளது. அது குறித்து பதிவில் எழுதி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவர்கள் இப்படி மதத்தின் பெயரால் அடித்து கொள்வது யாருக்கு என்ன பயனை கொடுத்து விட போகின்றது. மததை தூற்றி குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை.


 

அவர்கள் எழுதும் பதிவில் அவர்களின் சில அடி வருடிகள் ஒட்டு போட்டு அதை தமிழ்மனத்தில் முன்னனி இடுகை பட்டியலில் கொண்டு வர போராடுகின்ரார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் இந்த பதிவர்கள் சிந்திக்க மறுகின்றனர். மததின் பெயரால் அடித்து கொள்வதால் நமக்குள் பிரிவினை ஏற்படுவதை தவிர வேறு என்ன நிகழ்ந்து விட போகின்றது. அவர்கள் மதம் குறித்து பேசுகின்றனர் அதனால் நாங்கள் விமர்ச்சிகின்றோம். என கூறுவதாக இருந்தால். மததை விமர்ச்சிப்பது தவறு இல்லை. அதை நாகரீகமான முறையில் செய்யுங்கள். எல்லா மதமும் விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவைதான். ஆனால் ஒரு மதம் குறித்து கீழ் தரமாக எழுதுவதை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்யமான அறிவு பூர்வமான கருத்துக்களை மதம் குறித்து முன் வையுங்கள். ஹிட்சை எப்படி வேண்டுமானாலும் அதிகரித்து கொள்ளலாம். ஒரு சாரார் மீது செற்றை வாரி இரைத்து அதன் மூலமாக பெருகின்ற ஹிட்சை வைது என்ன சாதித்து விட போகின்றீர்கள். பதிவுலக நன்பர்களே சிந்தியுங்கள்.



வியாழன்

தனியார் பள்ளிகளின் அலட்சியம்...!


த‌‌னியா‌ர் ப‌ள்‌ளி பேரு‌‌ந்‌தி‌ல் இரு‌ந்து ‌கீ‌ழே ‌விழு‌ந்த மாண‌வி ஒருவ‌ர் ப‌லியான ச‌ம்பவ‌‌ம் த‌மிழக‌ம் முழுவது‌ம் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. பேரு‌ந்த‌ி‌ல் இரு‌ந்த ஓ‌ட்டையே மாண‌‌விய‌ி‌ன் உ‌யிரை ப‌றி‌த்தது கொடுமை‌யிலு‌ம் கொடுமை. இ‌ந்த அல‌ட்‌சிய‌த்து‌க்கு பேரு‌ந்தை ஆ‌ய்வு செ‌ய்த அ‌திகா‌‌ரிகளா? த‌மிழக அரசா? எ‌ன்ற ‌வினா ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் எழு‌ந்து‌ள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரை சேர்ந்த மாதவன்- ‌பிரியா த‌ம்ப‌தி‌க்கு பிரனவ் என்ற மகனும், சுருதி (6) என்ற மகளும் உள்ளனர். பிரனவ் அரு‌கி‌ல் உ‌ள்ள பள்ளியில் 5ஆ‌ம் வகுப்பு படித்து வருகிறான். சுருதி சேலையூரில் உள்ள சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ஆ‌ம் வகுப்பு படித்து வந்தாள்.
தினமும் பள்ளிக்கூட‌த்து‌க்கு ப‌ள்‌ளி பேரு‌ந்‌தி‌ல் சென்று வருவா‌ள் சுரு‌தி. வழக்கம்போல நே‌ற்று பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் பேரு‌ந்த‌ி‌ல் ‌வீ‌‌ட்டி‌ற்கு வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தா‌ர். டிரைவர் இருக்கைக்கு பின்னால் 6வது வரிசையில் உள்ள இருக்கையில் அம‌ர்‌ந்‌திரு‌ந்த சுரு‌தி, இருக்கையின் அடிப்பகுதியில் இரு‌ந்த பெரிய ஓட்டை ஒ‌ன்று இரு‌ந்து‌ள்ளது. அ‌ந்த ஓ‌ட்டையை சாதாரண பலகை வை‌த்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதுவு‌ம் பலகை அசையாம‌ல் இரு‌க்க ஆ‌ணி எதுவு‌ம் அடி‌க்க‌வி‌ல்லை. பேரு‌ந்து வேகமாக ‌திரு‌ம்‌பியபோது பலகை ‌வில‌கி அ‌ந்த ஓ‌ட்டை‌யி‌ன் வ‌ழியே ‌கீழே ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ள் சுரு‌தி. அப்போது பேரு‌ந்‌தி‌ன் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக இறந்து‌வி‌ட்டா‌ள் சுரு‌தி.
சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பா‌ர்‌த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு டிரைவரை பிடித்து அடி‌த்து உதை‌த்தன‌ர். கொ‌தி‌ப்‌பி‌ல் இரு‌ந்த பொதும‌க்க‌ள் மாணவ-மாணவிகளை கீழே இறங்கினர். ‌பி‌ன்ன‌ர் பேரு‌ந்தை ‌தீ வை‌த்து கொழு‌த்‌தின‌ர். த‌ன்னுடைய ‌பி‌ள்ளை இறந்த தகவல் கேட்டு ஓடோடு வ‌ந்த பெ‌ற்றோ‌ர், மக‌ளி‌ன் உடலை பா‌ர்‌த்து கத‌றி அழுதன‌ர்.
பள்ளி பேரு‌ந்‌தி‌ல் ஓட்டை இருந்தும் அதை கவனிக்காமல் மாணவியின் உயிரை பறித்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். இத‌ி‌ல் வேடி‌க்கை எ‌ன்னெ‌‌ன்றா‌ல், 20 நா‌ட்களு‌க்கு மு‌ன்பு தா‌ன் பேரு‌ந்து எ‌‌ப்‌சி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மோ‌ட்டா‌ர் வாகன ஆ‌ய்வாள‌ர் பேரு‌ந்‌து ச‌ரியான க‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌ல் இரு‌க்‌கிறதா எ‌ன்று ஓ‌ட்டி‌ப்பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல், அவரோ எதையு‌ம் செ‌ய்யாம‌ல் பேரு‌ந்து‌‌க்கு ஓகே சொ‌ல்‌‌லி‌வி‌ட்டா‌ர். இத‌ற்கு காரண‌ம் ல‌ஞ்ச‌ம் எ‌ன்று‌ம் கூறப்படு‌கிறது.
மேலு‌ம் ஒரு அ‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது. ‌சீயோ‌ன் மெ‌ட்‌ரி‌குலே‌‌ச‌ன் ப‌ள்‌ளி‌‌யி‌ன் தலைமை அலுவலக‌ம் சேலையூ‌ர் இ‌ந்‌திராநக‌ரி‌ல் உ‌ள்ளது. மாட‌‌ம்பா‌க்க‌ம், செ‌ம்பா‌க்க‌த்த‌ி‌‌ல் இ‌‌ந்த ப‌‌ள்‌ளி‌க்கு சொ‌ந்தமாக ப‌ள்‌‌ளிக‌ள் உ‌ள்ளது. மேலு‌ம் சேலையூ‌ரி‌ல் ஆ‌ல்‌வி‌ன் மெமோ‌ரிய‌ல் எ‌ன்ற பெய‌ரி‌ல் ‌சி‌பிஎ‌ஸ் ப‌ள்‌ளியாக செ‌யல்படு‌கிறது.
இ‌ந்த ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌கிழ‌க்கு தா‌ம்ப‌ர‌ம், மே‌ற்கு தா‌ம்பர‌ம், சேலையூ‌ர், ‌சி‌ட்ல‌ப்பா‌க்க‌ம், மாட‌ம்பா‌க்க‌ம், செ‌ம்பா‌க்க‌ம், மேடவா‌க்க‌ம், ச‌ந்தோ‌ஷபுர‌ம், முடி‌ச்சூ‌ர், ம‌ணிம‌ங்கல‌ம், பட‌ப்பை, வ‌ண்டலூ‌ர், கூடுவா‌ஞ்சே‌ரி, குரோ‌ம்பே‌ட்டை, ப‌ள்‌ளி‌க்கரணை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து 4 ஆ‌யிர‌‌த்‌தி‌‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ - மாண‌விக‌ள் படி‌‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்த மாணவ - மாண‌விகளை அழ‌ை‌த்து வரவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் கொ‌ண்டு ‌விடவு‌ம் ப‌ள்‌ளி பேரு‌ந்து, வே‌ன், ‌மி‌னி வே‌ன், டாடா மே‌ஜி‌க் என 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வாகன‌ங்க‌ள் உ‌ள்ளன. ‌சில த‌னியா‌ர் வாகன‌ங்களை வாடகை‌க்கு எடு‌த்து‌ம் மாணவ‌ர்களை அழை‌த்து செ‌‌ல்‌கிறது ப‌ள்‌ளி ‌‌நி‌ர்வாக‌ம். இ‌த‌ற்காக மாணவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் பண‌த்தை வசூ‌ல் செ‌ய்யு‌ம் ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌ம், பேரு‌ந்துகளை ச‌ரியாக பராம‌ரி‌ப்பது இ‌ல்லை எ‌ன்று பு‌கா‌ர் கூற‌ப்படு‌கிறது.
ப‌ள்‌ளிக‌ள் ‌திற‌ந்தவுட‌ன் ப‌ள்‌‌ளி வாகன‌ங்க‌ளி‌ல் சோதனை செ‌ய்‌கி‌ன்றன‌ர் போ‌க்குவர‌த்துறை அ‌திகா‌ரிக‌ள். சோதனை‌யி‌ன் போது வாகன‌ங்க‌ளி‌ன் ‌‌கிய‌ர் பா‌க்‌ஸ், ‌பிரே‌க், இரு‌க்கைக‌ள், க‌ண்ணாடிக‌ள், லை‌ட்டுக‌ள், அளவு‌க்கு அ‌திகமாக மாணவ‌ர்களை ஏ‌ற்‌றி செ‌ல்‌கிறா‌ர்களா எ‌ன்பது கு‌றி‌த்து ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌அ‌திகா‌ரிக‌ள், பேரு‌ந்து உ‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌‌ம் வா‌ங்‌கி‌க் கொ‌ண்டு இவ‌ற்றையெ‌ல்லா‌ம் க‌ண்டுகொ‌‌ள்வ‌தி‌ல்லை.
.

ஞாயிறு

கேள்விக் குறியான மக்களாட்சி..!

ஒரு மக்களாட்சி நடை பெரும் நாட்டில் அந்த நாட்டை ஆளும் அரசு எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளையும் அன்நாட்டு குடிமக்கள் அனைவரும் ஆதரித்து ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. அப்படி கட்டாய படுத்தினால் அது ஜனனாயக நாடாக இருக்க முடியாது. அரசு எடுத்த முடிவு நல்லதாக அந்த மக்களுக்கு தெரிந்தால் ஆதரிக்கலாம். அது அந்த மக்களுக்கு தவறாக தெரிந்தால் அதை எதிர்த்து போராடலாம். அந்த போராட்டத்துக்கான அலவு கோல் என்பது வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் உன்னாவிரதம், பேரணி, கண்டன ஆர்ப்பட்டங்கள் இப்படி எந்த முறையில் வேண்டுமானாலும் போராடலாம். அவர்கள் வன்முரையில் மட்டும் இறங்க கூடாது. இதுதான் மக்களட்சி தத்துவத்தின் ஆனிவேர். வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதை இந்திய அரசியல் சாசன சட்டமும் உறுதி படுத்துகின்றது.



ஒரு சாரார் கூடங்குளத்தில் அனு உலையை எதிர்த்து போராடுகின்றனர். மற்றொரு சாரார் அனு உலை பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். அனு உலை பாதுகாப்பானதா இல்லையா என்பது நமக்கு தேவையில்லை. அதை பற்றி விவாதிக்க வேண்டாம். இந்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதை எதிர்த்து போராட அவர்களுக்கு உரிமையுள்ளது. எதுவரை என்றால் அவர்கள் வன்முரையில் இறங்காது இருக்கும் வரை. அவர்களின் போராட்டம் என்பது அவர்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்க அரசுக்கும் காவல் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் நான் கண்ட வரையில் இந்து முன்னயினர் மற்றும் காங்கிரஸ் காரர்களால் மாவட்ட ஆட்சியர் அழுவலகம் முன்பு அவர்கள் தாக்கப்பட்டது தவிற அவர்களின் போராட்டத்தில் கடந்த ஏழு மாதமாக எந்த வன்முறையும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

 

அப்படி இருக்கும் பொழுது கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல் துறை மற்றும் துனை ரானுவமும் அந்த பகுதியில் முகமிட்டு 144 தடை உத்தரவு பிரபித்துள்ளது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும். அந்த மக்களுக்கு உனவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருற்கள் கிடைக்காமல் தடை செய்து இருப்பதை பார்க்கும் பொழுது இது ஜனனாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற ஐயம் எழுகின்றது. மக்கள் அறவழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை அரசு காவல் துறையை ஏவி அடக்க முற்படுவது ஜனாயகம் என்ற அமைப்பை குழி தோண்டி புதைப்பதை போல் உள்ளது.



ஆளும் அரசின் ஜனனாயகத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் இந்த செயலை கண்டித்து எந்த அரசியல் கட்சியும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க வில்லை என்பதுதான் உச்ச கட்ட கொடுமை. போராட்ட காரர்கள் அனு உலையை எதிர்த்து போராடுவது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த போராட்டத்தை இப்படி அரசு ஒடுக்க நினைப்பது மக்களாட்ட்சி தத்துவத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனம் ஆகி விடாதா? இது மக்களாட்சி என்ற பதத்தை பதம் பார்த்து விடாதா? அந்த மக்களின் போராட்டம் தவறு. அனு உலையை துவங்கினால்தான் மின் பற்றா குறையை சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனு உலை தேவையானது என்று அரசு கருதும் பட்சத்தில் அதை மக்களுக்கு புறிய வைப்பது அரசின் கடமை. மக்களுக்கு தெளிவாக அனு உலையால் எற்படும் நன்மைகளை அந்த மக்களுக்கு தெரியபடுத்தி அனு உலைபாதுகாப்பானது என்பதை அந்த மக்களும் நிருபித்து அந்த மக்களின் அச்சைத்தை போக்க வேண்டும் அதை விடுத்து காவல் துறையை ஏவி போராட்டைத்தை ஒடுக்குவது மக்களாட்சி என்ற ததுவத்தை குழி தோண்டி புதைபதற்க்கு சமம்.







வியாழன்

ராணுவ (வீரன்) கோழை..!

இலங்கையில் நடந்த படுகொலைகளை கானும் பொழுது நெஞ்சம் பதரவே செய்கின்றது. குழந்தைகளும் பெண்களும் இலங்கை ரானுவத்தின் தோட்டாக்களுக்கு இறையாகி ரத்த வெல்லத்தில் கிடப்பதை பார்க்கும் பொழுது உனக்கு இந்த உலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் செய்த குற்றம் என்ன பெரும்பான்மையான சிங்களவர்கள் வாழும் இலங்கையில் சிறூபான்மை இனத்தில் பிரந்ததை தவிர. சிறுபான்மை இனத்தில் பிறந்ததது அவர்கள் செய்த குற்றமா? அவர்கள் விருபப்பட்டுதான் சிறுபான்மை இனத்தில் பிறந்தார்களா?. எங்கு பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமோ சக்தியோ அவர்களுக்கு இருகின்றதா?. அவர்கள் செய்த குற்றம் என்ன?



 விடுதலை புலிகள் கையில் ஆயுதம் எடுத்தார்கள். அதன் விலைவு அவர்களுக்கு மரனம். புலிகளின் போராட்டத்தை நியாயபடுத்த முடியாது.புலிகளின் ஆட்சி பகுதி என அறிவிக்க பட்ட இடத்தில் அவர்கள் செய்த கொலைகள் என்னிலடங்காதவை. அவர்கள் கொலைகள் மூலம் விதத்ததை அவர்கள் மரனம் மூலமாக அருவடை செய்து இருகின்றார்கள். ஒரு நாட்டை எதிர்து ஆயுதம் தாங்கி போராடும் குழு அந்த நாட்டை பொருத்த வரை தீவிரவாத குழுதான் அதில் மற்று கருத்து இல்லை. அவர்கள் கையில் ஆயுதம் எடுத்து போராடுவது சரி என்றால் மாவோயிடுக்களின் ஆயுதம் தாங்கி போராடும் போராட்டமும் சரியா அவர்கள் தீவிரவாதி இல்லையா. மாவோயிஸ்டுக்கள் தீவிரவாதி இல்லயா அல்லது காஸ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டுமென்று போராடும் காஸ்மீர் தீவிரவாதிகளை என்ன சொல்வது. காஸ்மீரை அவர்களின் அனுமதி இல்லாமல் இந்தியா ஆக்ரமித்து விட்டது என்பது காஸ்மீர் விடயங்கள் தெரிந்த அனைவருக்கும் தெளிவாக தெரியும். அவர்களும் தனி இனம் தான். தனி மொழியுடையவர்கள் தான். அதற்காக காஸ்மீரில் ஆயுதம் தாங்கி போராடும் ஒரு குழுவை தீவிரவாதி இல்லை என சொல்ல முடியுமா.

காஸ்மீரிலும் அஸ்ஸாமிலும் மே.வங்கத்திலும் அவர்கள் இனத்திற்காக போராடினாலும் அவர்கள் தீவிரவாதிகள் தான். கஸ்மீர் தீவிரவாதிக்கு ஒரு அலவுகோள் வைத்து அவர்களை தீவிரவாதி என்றும் விடுதலை புலிகளுக்கு ஒரு அலவு கோல் வைத்து அவர்களை தியாகி என்றும் என்னால் சொல்ல முடியாது. இருவருமே தீவிரவாதிகள் தான். நான் பேசும் மொழி தமிழ் ஆதலால் தமிழர்கள் என்ற அங்கிகாரத்தை வைத்து புலிகள் செய்தது சரி என்று என்னால் பார்க்க முடியவில்லை. என் பொழி பேசுபவர்கள் என் இனம் என் சமூகம் என்று குறுகிய வட்டத்தில் நின்று பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் மனிதர்களாகவே பார்க்க விழைகின்றேன். சிங்களவர் உட்பட.


இலங்கை ரானுவ வீரனே கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வருபவனை நீ கொல்வதில் எந்த தவறும் இல்லை. நீ கொல்லாமல் விட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள். இருவரும் கையில் ஆயுததுடன் போராடும் பொழுது ஒருவர்தான். வெற்றி பெற முடியும் மற்றவர் மரனம் தான் அடைவார். ஆனால் கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வராதவர்களை, உன்னை கொல்ல வந்தவர்களின் மொழி பேசுவதால் அவர்களும் கொல்ல பட வேண்டியவர்கள் என்று எப்படி முடிவெடுத்தாய். அவர்களும் உன் நாட்டை சேர்ந்தவர்கள் தானே அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுபில் இருக்கும் நீ அவர்களை கொல்ல உங்களுக்கு என்ன நேர்ந்தது. ஒன்றும் அரியாத அப்பாவி மக்களை கொன்ற உன்னை எப்படி ரானுவ வீரன் என்று அழைப்பது. உன்னுடன் சண்டையிட வருபர்களை கொன்றால் நீ ரானுவ வீரனே! ஆனால் உயிரை கையி பிடித்து வாழ வழிதேடி ஓடிக்கொண்டிருக்கும் அப்பவிகளையும் பெண்களையும் என்ன நடகின்றது என்று அரியாத குழந்தைகளயும் கொன்ற நீ ரானுவ வீரனா இல்லை. இல்லவே இல்லை. உன்னை ரானுவ வீரன் என்று அழைக்க என் மனது ஒப்புகொள்ள வில்லை. வேண்டுமென்றால் ரானுவ கோழை என்று அழைகின்றேன்.

இந்த உலகு யாருடைய தனி சொத்தும் இல்லயே அனைவருக்கும் பொதுவானது தானே. அந்த உலகில் நீங்களக எல்லைகள், நாடுகள், இனம், மொழி, மதம், என்று ஒருவரை ஒருவர் கொன்று அவர்களின் பினங்கள் உங்களது சாம்ராஜ்யத்தை நிறுவ நினைகின்றீர்கள். இந்த உலகில் யாரும் நிரந்தரம் அல்ல. இலங்கை தமிழன் இன்று இரந்தால் நீ நாலை இரக்க போகின்றாய் அவ்வலவே இந்த குருகிய கால வாழ்கையில் ஏன் இந்த ரத்த வெறி.

புதன்

அபாய எச்சரிக்கை..!



இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்து இருக்கின்றது.


மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.


சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன.

 செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.



ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டது.


இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.



அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இப்படி அணு உலை நிறுவியதால் அவர்கள் அதன் விளைவை இன்று அறுவடை செய்துகொண்டு இருகின்றார்கள். ஆனால் நமது அரசு அணு உலை பாதுகாப்பானது என ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறது.  அவர்களுக்கு  துணையாக சில ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. அணு உலையால் எவ்வளவு நன்மை இருக்கின்றதோ அதை விட  அதானால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம்.இது மக்களுக்கான அபாய எச்சரிக்கை. மக்களே சிந்திக்க தவறாதீர்கள்.  

செவ்வாய்

டாஸ்மாக்கும் இன்றைய மாணவர்களும்..!




நமது இளைய சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டு இருகின்றது என்பதே புரியவில்லை. காஞ்சிபுரத்தில் ஒன்பதாவது படிக்கும் மானவன் பீர் பாட்டிலை வாங்கி இடுப்பில் வைத்து கொண்டு சைகிளில் செல்லும் பொழுது பீர் பாட்டிலில் உள்ள கேஸ் அழுத்ததின் காரனமாக பாட்டில் வெடித்து அந்த மானவன் இறந்துள்ளன். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது நம்மை ஆண்ட முன்னால் முதவரும் இன்னால் முதல்வரும் நம் மக்களுக்கும் நமது மானவ சமுதாயத்திற்கும் சேவை செய்யும் விதமாக
டாஸ்மாக்கை ஊருக்கு ஊர் திறந்து நமக்கு ஆற்றிய பணியை தஞ்சாவூர் கல்வெட்டில் தான் பதிய வேண்டும்.

மதுவினால் நமது மானவ சமுதாயம் சீர்கெட்டு போயுள்ளது என்பதை நான் இந்த சம்பவத்தை மட்டும் வைத்து சொல்ல வில்லை. அரசே மதுபான கடைகளை ஊருக்கு ஊர் திறக்கும் முன்பு மது என்பது சமுதாயத்தில் மிக பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. டாஸ்மாக்கை அரசு ஆரம்பிக்கும் முன்பு வரை ஒயின்சாப் என்பது அனைத்து ஊரிலும் இருக்காது. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சந்தை பகுதியாக இருக்கும் நகர பகுதிகளில் மட்டும் தான் இருக்கும்.அங்கு அனைவரும் சென்று நினைத்த நேரத்தில் மது வாங்க முடியாது. கிராமங்களில் ஊருக்கு ஒதுக்கு புறம் மறைவாக சாரய கடைகளும் வெயில் காலங்கலில் கள்ளு கடைகளும் இருக்கும். அந்த கடைகளுக்கு இப்பொழுது டாஸ்மாக் கடைக்கு யார் வேண்டுமானாலும் போவது போல் போக முடியாது. வழக்கமாக வருபவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சென்றால் தான் தருவார்கள் யாரும் புதியவர்கள் சென்றால் தரமாட்டார்கள். காரனம் அந்த கடைகள் அரசுக்கு தெரியாமல் சட்டத்திற்க்கு புறம்பாக நடத்த படுபவை. புதியவர்களுக்கு யார் என்று தெரியாமல் விற்றால் அவர்கள் கடை காவல் துறைக்கு தெரிந்து விட வாய்ப்பு இருகின்றது என்ற அச்சம். அங்கு மானவர்கள் சென்று வாங்க நினைப்பது என்பது இயலாத காரியம்.

நான் மானவனாக இருக்கும் பொழுது பள்ளி சீருடை தைப்பதற்காக அருகாமயில் உள்ள நகர் பகுதியில் ஒரு தையற்கடைக்கு சென்ற பொழுது அந்த கடையில் இருந்தவர் மற்றொருவருடன் யேதோ பேசிக்கொண்டிறுக்கும் பொழுது அவர்களின் பேச்சின் ஊடாக ஒரு மது பாட்டில் விலை முப்பது ரூபாய் (பீரா அல்லது மற்ற வகை மதுவா என்பது அந்த வயதில் எனக்கு தெரிய வில்லை) என்பதை தெரிந்து கொண்டேன். இன்றுவரை அது என் நினைவில் மறக்காமல் இருகின்றது. இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டி உள்ளது. அன்றைக்கு ஒரு பீரின் விலை முப்பது ரூபாய். என்னை போன்ற மானவர்களின் பாகெட் மனி (வாங்கி திங்க காசுன்னு சொல்லுவாங்க). நான் பத்தாவது படிக்கும் வரை எனக்கு வீட்டில் தருவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய். எனக்கு மட்டுமல்ல என்னுடன் படித்த பெரும்பாலான மானவர்கள் கொண்டு வரும் காசு அவ்வள்ளவே. ஏதாவது பண்டிகை வந்தால் தான் பதினைந்து அல்லது இருபது ரூபாய் முழுதாக பார்க்க முடியும். அந்த காசை வைத்து நாங்கள் நினத்தாலும் எந்த மதுவும் வாங்க முடியாது. அப்படியே ரெண்டு மூனு பேரு சேர்ந்து காசு போட்டு வாங்க நினைத்தாலும் எந்த மதுபான கடையும் எங்கள் அருகாமயில் இருக்காது. அதற்காக டவுனுக்கு போய் வாங்கி வரும் அளவுக்கு எங்களுக்கு தைரியமும் இருந்தது இல்லை. இதுதான் டாஸ்மாக் திறக்கும் வரை இருந்த நிலை.

அன்றைக்கு ஒரு பீர் முப்பது ரூபாய் இன்று ஒரு பீர் அருபதில் இருந்து என்பது வரை இந்த பதினைந்து வருடத்துக்கு ஒன்று முதல் ஒன்னறை பங்கு வரை விலை உயர்ந்துள்ளது. இது சரியான அலவில் தான் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு ரூபாய்யும் இரண்டு ரூபாயுமாக கொடுத்து கொண்டிருந்த பாகெட் மனி மேற்கூறிய சதவிகிததில் தான் கூடியுள்ளதா. இன்று படிக்கும் பசங்களிடம் இரண்டு ரூபயோ அல்லது நாங்கு ரூபாயோ பாகெட் மனியாக கொடுக்க முடியுமா. நாம் நூரு இறுனூரு என சாதரனமாக கொடுக்கும் நிலை உள்ளது. அன்று போல மதுபான கடைக்கு போக எந்த சிரமமும் இல்லாமல் அரசே அவர்களுக்கு அருகாமையில் மதுபான கடையை திறந்துள்ளது. இப்படி மானவர்கள் தப்பு பன்னுவதற்க்கான எல்லா வழிகளையும் நாமும் நமது அரசும் திறந்து விட்டிருக்கும் பொழுது மானவர்கள் தவறு செய்ய்யதான் செய்வார்கள்.

இந்த மானவ பருவம் அனைத்து விசயத்தயும் கற்று கொள்ள துடிக்கும் வயசு. அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என தெரியாது. அவர்களை நல்வழிபடுத்த வேண்டியது நமது கடமையும் அரசின் கடமையுமே தவிர இதில் வேரு யாரை குற்றம் சொல்ல முடியும்.