சனி

கார்த்தியின் சகுனியும் மலையாளிகளின் விமர்சனமும்..!


நான் சினிமா பார்ப்பதை விட்டு ஏறக்குறைய எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. எப்பொழுதாவது ரோபோ தசாவதாரம் போன்ற சில  படங்களை மட்டுமே திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கின்றேன். அந்தவகையில் நான்  கடைசியாக பார்த்த படம் சங்கரின் நண்பன். அந்த படம்  பார்க்க சென்றது  ஹிந்தியில் அமீர்கான் நடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் தழுவல்  என்ற  காரணத்தால் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பிறகு இன்று வரை எந்த படமும் பாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்த வில்லை. கடந்த வியாழன் அன்று கார்த்தி நடித்த சகுனி வெளியானது. அந்த படத்தை  பார்த்தே தீர வேண்டும் என  என் நண்பனின் வற்புறுத்தலின் காரணமாக  சகுனி  திரைப்படத்தை துபாயில்  நள்ளிரவு 1.30 காட்சி பார்க்க நேர்ந்தது.

படத்தை பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் இந்த படமும் வழக்கமான தமிழ் சினிமாவாகதான் இருக்கும் என்று என்னதிலையே சென்றிருந்தேன். நான் எதிர் பார்த்தது போலவே படத்தில் எந்த சுவாரச்யமும்  இல்லாமல் வழக்கமான தமிழ் சினிமா பார்முலாபடி 4 பாட்டு, கொஞ்சம்  காமெடின்ர பேர்ல மொக்க, வழக்கமாக பாடலுக்கு மட்டும் மார்பையும்  வயித்தையும் தொடையும் காட்டி ஆடிசெல்லும் கதாநாயகி காது  கிழியும்  அளவுக்கு கத்தும் வில்லன் அப்படின்ற  வழக்கமான  தமிழ் சினிமாதான் சகுனி. தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டதா அல்லது சினிமா குறித்த என் பார்வை மாறி விட்டதானு எனக்கு நானே கேள்வி கேட்டுபது உண்டு.
அது பற்றி தனி பதிவே போடலாம். நான் சொல்ல வந்தது  அது பற்றியல்ல.  தமிழ் சினிமாவில் மலையாளிகளின்  ஈர்ப்பு குறித்து என் பார்வையை பகிர்ந்து  கொள்ள விரும்புகின்றேன்.


துபாயில் நான் தங்கி இருப்பதுக்கு அருகில்தான் திரை அரங்கு இருக்கிறது. அங்கு  எந்த அளவுக்கு தமிழ் சினிமா வெளியிடுகின்றார்களோ அதே  அளவுக்கு மலையாள படமும் வெளியிடுவார்கள். அப்பொழுதெல்லாம் திரையரங்கில்  இருக்கும் மக்களை கவனித்து இருகின்றேன். மலையாள  படத்துக்கு பெரிதாக  கூட்டம் இருக்காது. அதே நேரத்தில் தமிழ் சினிமா விற்கு தமிழ் மக்களை விட  மலையாளிகளின் கூட்டமே அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் மலையாள  படத்திற்கும் எந்த ஒரு தமிழ் மக்களும் சென்று  இதுவரை நான் பார்த்தது இல்லை. இதை நான் வெளிபடையாக ரஜினியின் ரோபோ ரிலீஸ் ஆனா  பொழுது திரையரங்கம் மலையாளிகளால் நிறைந்து  வழிவதைபார்த்து  வியபடைந்துள்ளேன். அதேபோல் விஜயின் நண்பன்  படத்துக்கும்  மலையாளிகள் டிக்கெட்டுக்கு அடித்துகொன்டதை பார்த்து  இருகின்றேன். ரஜினி விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் மாஸ் ஹீரோக்கள்  அவர்கள். படத்தை  மொழிகளைகடந்து மலையாளிகள் ரசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கார்த்தி  போன்ற புதியவர்களின் படத்துக்கும் அதே அளவு மலை யாளிகளின் கூட்டம் வருவதை பார்க்கும் பொழுது ஆச்சர்யம்மகதான் உள்ளது.


சகுனி படம் முடிந்து வெளிவரும்போது மலையாளிகள் அவர்களுக்கு இடையில் "ஈ ஆளுக்கு எந்த பேக்ரவுண்டும் இல்ல பின்ன எங்கன ஈ ஆளு ஒரு ஸ்டேட் சி எம் சேன்ஞ் ஆக்கும் லோஜிக் கரக்டாயிட்டு இல்ல" இப்படி  பேசிக் கொண்டு போனதை காண முடிந்தது . மொழியை கடந்து சினிமாவை  ரசிக்க  வந்த இவர்களின் இந்த ஒரு வரி விமர்சனம் போதும்  இந்த படத்தை  பற்றி  நாம் ஒரு  முடிவிற்கு  வர நான் சொல்வது சரிதானே.  



        


  

2 கருத்துகள்:

Gujaal சொன்னது…

தமிழ்ப்படங்களில் மலையாளிகளை (குறிப்பாகப் பெண்களை) நக்கலடிப்பதை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

பெயரில்லா சொன்னது…

இப்பொழுதேல்லாம் தமிழ் சினிமா பணம் சம்பாதிப்பதர்காக மட்டுமே வந்துக் கொண்டிருக்கிறது. அது தேரியாது சிலர் தீயவனுக்கு ரசிகனாக மாறி உலகில் வாங்க கூடாத அத்தனை அவமானங்களையும் சந்திகிறார்கள்

கருத்துரையிடுக