ஞாயிறு

முகலாய பேரரசின் அறிமுகமும் பாபரும்..!

எனக்கு எப்பொழுதுமே வரலாற்றின்மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே வந்துள்ளது. அதை ஆவணபடுத்தி வைக்கவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்ததின் விளைவாகவே இந்த முகலாய பேரரசின் வரலாற்றை தொடர் பதிவாக எழுத காரணம். இது வரலாறு எதுவெல்லாம் ஆவணப் படுத்தபட்டதோ அதை மட்டும் தான் எழுத முடியும். எனவே இதில் எனது சொந்த சரக்கை எழுத முடியாது. மனிதன் என்ற முறையில் நான் தவறாக ஏதாவது எழுதினால் அதை வரலாறு தெரிந்தவர்கள் சுட்டி காண்பித்தால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் எனது தவறை திருத்தி கொள்ள ஒரு போதும் தயங்கமாட்டேன் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றேன்.


இந்த வரலாற்றை பெரும்பாலான முஸ்லீம்கள் ஏற்றுகொள்வதில்லை. அவர்கள் கூறும் காரணம் வரலாறு திரிக்கப்பட்டு விட்டது. முன்பு இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரும் இப்பொழுது பெரும்பான்மையாக இருக்கும் இந்து ஆட்சியாளர்களும் அவர்களுக்கு தக்கவாறு வரலாற்றை திருத்தி விட்டனர் என்று பரவலாக முஸ்லீம் மக்கள் சொல்லக் கேட்டிருக்கேன். ஆனால் இப்பொழுது நம்கையில் என்ன வரலாறு இருக்கின்றதோ அதைதான் நாம் பதியமுடியும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் சொல்லும் வரலாறு கிடைக்குமேயானால் பிறிதொரு நேரத்தில் அதையும் விரிவாக தொகுக்கலாம் என்றுள்ளேன். அது எந்த அளுவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை பார்க்கலாம்.

முகலாய பேரரசு - ஓர் அறிமுகம்

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.

பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர்ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.

நாம் விரிவாக காணப்போகும் அரசர்களின் பட்டியல்:

பாபர் 1526 1530
ஹுமாயூன் 1530 1540
இடையீடு * 1540 1555
ஹுமாயூன் 1555 1556
அக்பர் 1556 1605
சகாங்கீர் 1605 1627
சாசகான் 1627 1658
ஔரங்கசீப் 1658 1707

பாபர் 1526 -1530

துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையில் வந்த உமர் ஷேக் மிர்சா என்ற சிற்றரசனுக்கும், மங்கோலிய மாவீரன் செங்கிஸ்தான் பரம்பரையில் வந்த குத்லூக் நிகார் என்பவருக்கும் பிறந்தவர் தான் பாபர்.

1494 ல் பாபரின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விடவே பர்கானா என்ற சிற்றரசின் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். அப்போது பாபருக்கு வயது பதினொன்று மட்டுமே. இத்தனை கேள்விப் பட்ட அண்டை நாட்டு சிற்றரசர்கள் ஒரு சிறுவன் தானே என்று படையெடுத்து வந்தவர்களை வென்று சின்னஞ்சிறு வயதிலையே தான் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்று விடாமல் தான் பதிமூன்றாம் வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார்

சாமர்கண்ட் நகரில் திடீரென தோன்றிய பஞ்சத்தால் பாபர் மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் சாமர்கண்ட் நகரையும் இழந்தார். அதே சமயம் அண்டை நட்டு அரசர்களின் சூழ்ச்சியால் தனது சொந்த நாடான பெர்கனாவையும் இழந்தார் பாபர். பின்னர் சில நாட்களிலையே ஒரு சிறு படையை திரட்டி பெர்கானாவை கைப்பற்றினார்

ஆப்கானிஸ்தானில் காபூல் மன்னன் திடீரென இறந்து விடவே, சரியான வாரிசு இல்லாத காரணத்தால் அந்நாட்டை பாபர் கைப்பற்ற திட்டமிட்டார். வெறும் 200 பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் காபூலை நோக்கி புறப்பட்டார். போகும் வழியில் பாபரின் தன்னம்பிக்கையை கண்டு வழிநெடுகிலும் உள்ள பல கிராமங்களிருந்து இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். கி.பி 1504 ல் காபூல் அரியணையில் அமர்ந்தார் பாபர். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு.

இந்த காலகட்டத்தில் இந்தியாவில் சொல்லி வைத்தது போல டெல்லியை கடங்கோலாட்சி புரிந்த இப்ரகாம் லோடியை வீழ்த்த தௌலத்கான் என்பவரிடமிருந்து "எங்களுக்கு உதவ முடியுமா" என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது பாபரின் கைகளுக்கு.. இது தான் தக்க சமயம் என்றெண்ணி ஒரு பெரும் படையோடு புறப்பட்டார்.

உதவி செய்ய வரும் பாபர் நமக்கொரு உபத்திரபமாக மாறிவிடுவாரோ என்று பயந்த தௌலத்கான் சில சிற்றரசர்களை ஓன்று சேர்த்து பாபருக்கு எதிராக போரிட்டான், ஆனால் அனுபவமும் ஆவேசமும் கொண்ட பாபரின் படைக்கு முன் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை..இவர்களை வென்ற வீரமுகத்தொடு டெல்லியை நோக்கி புறப்பட்டது பாபரின் படை.

டெல்லியில் பாபரின் படை இப்ராஹீம் லோடியின் படையை பானிப்பட் என்ற இடத்தில் எதிர்கொண்டது. இந்த போரில் பாபரின் படை அபார வெற்றி பெற்றது.பானிபட் யுத்தம் முடிந்த கையோடு ஹீமாயூன் தலைமையில் ஒரு படை ஆக்ராவை கைப்பற்றியது. இந்த நேரத்தில் தான் உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ஹீமாயூன் கைகளுக்கு வந்தது.

பிறகு சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...

கி.பி 1527 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது. இந்த போரிலும் பாபரி படை அபார வெற்றி பெற்றது. கந்தேரிக் கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர்.தான் வாழ்நாளில் அதிகமான நாட்களை போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார்.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியல், தாவரங்கள், பூக்கள், ஜாதி, மாதம், மக்களின் கணிதத் திறமை மற்றும் கலைத் திறன் என எதையும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை. டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார்.மேலும் தாவரங்கள், பறவைகள் என பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம்..ஆனால் பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும் படியாக முன்னேறவில்லை..

நான்காண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர் டிசம்பர் 26 கி.பி 1530 ம் ஆண்டு அதிகாலை மரணமடைந்தார்.. அப்போது அவருக்கு வயது 48 .பாபரின் உடல் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கக்ரையில் புதைக்கப்பட்டது.

பாபரி நாமா என்ற சுயசரிதை புத்தகம் டெல்லி அருங்காச்சியகத்தில் இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பாபருக்கு பத்து மனைவிகள் இருந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்த காலத்து அரசர்கள் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள் என்பதற்கும் உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் பல சான்றுகள் உள்ளன. அதனால் பாபர் இத்தனை மனைகளுடன் வாழ்ந்தார் என்பதில் பெரிய வியப்பு இல்லை.

பாபரின் மாணவிகள்:
ஆயிஷா சுல்தான் பேகம்
பீபி முபாரிகா யூசுவ்சே
தில்தார் பேகம்
குல்நார் அகச்சா
குல்ருக் பேகம்
மகாம் பேகம்
மசூமா பேகம்
நார்குல் அகச்சா
சாயிதா அஃபாக்
ஸெய்னாப் சுல்தான் பேகம்

இந்த மனைவிமார்கள் மூலம் பாபருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்ததாக அறியப்படுகின்றது.அவர்களின் விவரம் கீழே:

ஹுமாயூன், மகன்
கம்ரான் மிர்ஸா, மகன்
அஸ்காரி மிர்ஸா, மகன்
ஹிந்தல்l மிர்ஸா, மகன்
குல்பதான் பேகம், மகள்
ஃப்கிர்-உன்-நிஸா, மகள்

இவர்களில் ஹுமாயூன் மூத்தமகன் ஆதலால் அரச குடும்ப வழிமுறைப்படி ஹுமாயுன் பாபருக்கு பிறகு மன்னராக முடி சூட்டப்பட்டார்.

                                                                                                 - தொடரும்





4 கருத்துகள்:

SADIQALI சொன்னது…

இந்துக்களின் விரோதி என்றே இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் சித்தரிக்கப் பட்டிருப்பவர் ஔரங்கசீப். இவர் மீது சுமத்தப்படும் பிரபலமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவர் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார் என்பதாகும். இக்குற்றச்சாட்டையும் பேராசிரியர் பாண்டே ஆதாரங்களுடன் மறுக்கிறார்.

ஔரங்கசீப்பின் படை வங்காளத்தை நோக்கிச் செல்லும் வழியில் வாரணாசி வந்தடைந்தது. அவரது படையில் இடம் பெற்றிருந்த இந்து மன்னர்கள், “வாரணாசியில் ஒருநாள் தங்கிச் சென்றால் தங்கள் ராணிகள் கங்கையில் முழுகி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என ஔரங்கசீப்பிடம் விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

ராணிகள் கங்கை நதியில் முழுகி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் அவர்களுடன் சென்ற கட்ச் மகாராணி மட்டும் திரும்பவில்லை. தகவல் அறிந்து கோபமடைந்த ஔரங்கசீப் ராணியைத் தேடிக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தார். இறுதியில் அவர்கள் விஸ்வநாதர் கோவில் சுவற்றில் இருந்த ஒரு சிலை நகரும் வகையில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அச்சிலையை நகர்த்தியபோது அதன் கீழே பாதாள அறை ஒன்றிற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. கட்ச் ராணி அந்த அறையில்தான் மானபங்கம் செய்யப்பட்டு அழுது கொண்டிருந்தார். அந்த அறை விஸ்வநாதர் சிலை இருந்த இடத்திற்கு நேர் கீழே இருந்தது.

அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.

டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.

SADIQALI சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
SADIQALI சொன்னது…

ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை.” – இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன. – பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து…
பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்

Unknown சொன்னது…

அய்யா நம்படடோம

கருத்துரையிடுக