வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ, நமது ஆட்சியாளர்களுக்கு மிக சரியாக பொருந்தும். இதை பல சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்பவர்கள் நிருபித்து கொண்டே தான் இருகின்றார்கள். உதாரனதிற்கு ஈமு கோழி வளர்ப்பில் நடந்த மோசடியை எடுத்து கொள்ளுங்கள் ஈமு நிருவனங்கள் இரண்டு ஈமு கோழியை தங்களிடம் இருந்து வாங்கி வளர்தால் போதும் எல்லோரும் அம்பானியாக மாறிவிடலாம் என்ற வகையில் விளம்பரம் செய்தது. அதை ஒத்து ஊதும் விதமாக விளம்பரபங்களில் நடித்த நமது நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூட சேர்ந்து கூவினார்கள்

. இப்பொழுது பணம் கட்டினால் உங்கள் பெயரில் ஒரு தேக்குமரம் நட படும் இன்னும் இருபது வருடம் கழித்து அந்த தேக்குமரதை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தருவதாக கூறுவதையே நம்பி பணம் கட்ட தயாராக இருக்கும் நம்ம மக்கள். பணம் கட்டி ஈமு கோழியை வாங்கினால் வருடா வருடம் ஊக்க தொகை தரபடும். அதன் ஒரு முட்டை இரண்டாயிரம் முதல் நாங்காயிரம் விலை மதிக்க தக்கது. அதையும் எங்கள் நிருவனமே விலைக்கு வாங்கிக் கொண்டு உங்களுக்கு பணம் தருகின்றோம். அதன் இரச்சி ஒரு கிலோ ஆயிரம் விலை பொகும் அதற்க்கான பனத்தயும் நாங்களே தருகின்றொம் என கூறினால் அதை நம்பாமல் என்ன செய்வார்கள். அனைவரும் விவசாயத்தை விட்டு விட்டு ஈமுவில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த விளம்பரங்கள் வர ஆரம்பித்த உடனே நமது ஆட்சியாளர்கள் என்ன செய்து இருக்க வேண்டும். இந்த நிருவனம் செய்யும் விளம்பரம் உன்மைதானா அதன் நம்பக தன்மை எந்த அலவுக்கு சரியானது என விசாரித்து இருக்க வேண்டாமா. ஆனால் நமது அரசோ அந்த விளம்பரத்திற்கும் நாம் ஆட்சி செய்யும் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் மெத்தன்மாக இருந்தார்கள். இன்று அந்த நிறுவனம் இழுத்து மூடபட்டு விட்டது. இப்பொழுது அந்த நிருவனம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

அதேபோல் பள்ளி பேருந்தில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து இறந்த பிறகு அனைத்து பள்ளி பேருந்துகளின் தரத்தையும் ஆராய முவந்துள்ளது. பள்ளி பேருந்து குறித்து சட்ட திருத்தம் கொண்டுவருகின்றது. இதை ஏன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்த விபதிற்கு முன்பு பள்ளி பேருந்து தரம் குறித்து எந்த சட்டமும் இல்லயா. அதை பின் பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இனி பள்ளி பேருந்துகளின் தரத்தை உயர்த்துவதின் மூலம் இறந்த ஒரு உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா, குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் துயரத்தை துடைத்து விட முடியுமா. அதேபோல இப்பொழுது அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்த பிறகு எலியை பிடிக்க நடவடிக்கை எடுகின்றார்கலாம்.

ஆட்சியாளர்களின் கடமை மக்களை காப்பாற்ற வெண்டியதுதான். மக்கள் பாதிக்க பட்டவுடன் அவர்களுக்கு நிவாரன நிதி கொடுப்பதும் ஆறுதல் சொல்வதும் அறிக்கை விடுவது மட்டுமல்ல. மக்களை காப்பதும்தான்.

வியாழன்

மனதை விட்டு நீங்காத வரிகள்..!

தமிழ் சினிமா பாடல்களில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத சில பாடல்கள்உண்டு. அந்த வகையில் 1978ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும்  திரைப்படத்திற்காக கண்ணதாசன் அவர்களால்  எழுதப்பட்டு இளையராஜா  இசையமைத்து ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் வரிகள் உங்களுக்காக.இந்த பாடலில்  பாடலாசிரியர் பெண்ணுக்கு உவமையாக காடுகள், மலைகள், மரங்கள் மேகங்கள் என அருமையாக எழுதியிருக்கும் வரிகளை நீங்களும் ஒரு முறை  படித்து பாருங்கள் எப்பொழுதும் மனதை விட்டு நீங்காத வரிகள் அவை.   


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
[செந்தாழம்பூவில்...]

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

[செந்தாழம்பூவில்...]

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

[செந்தாழம்பூவில்...]

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செவ்வாய்

பெண்கள் நகரம்



பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர்.இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.

இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதே போல பெண்கள் மட்டுமே பணியாற்றும் தனி தொழிற்சாலைகளைக் கட்டவும் செளதி திட்டமிட்டுள்ளது.

இதற்காக செளதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹபுப் நகரத்துக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை அந் நாட்டு அரசு வழங்கவுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சுமார் 5,000 பெண்கள் பணியாற்றும் ஜவுளி ஆலைகள், மருந்துத் தயாரிப்பு ஆலைகள், உணவுப் பதப்படுத்தல் ஆலைகளை இந்த நகராட்சி கட்டவுள்ளது.

கடந்த ஆண்டு செளதியின் பெண்கள் உள்ளாடை விற்பனை நிலையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதே போல அழகுப் பொருட்கள் விற்பனை மையங்களிலும் பெண்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் முதலாக செளதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு முதல் செளதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களும் வாக்களிக்கலாம் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சனி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!



என்னது ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா . என்னப்பா சொல்றீங்க இவ்வளவு நாளா ஹாக்கி தேசிய விளையாடுன்னு பாடம் எடுத்தீங்க இப்ப என்னடான்ன ஒரு மாணவி இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி யான்னு தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டதுக்கு மத்திய அரசு எந்த ஒரு விளையாட்டையும் இந்திய அரசு தேசிய விளையாட்டுன்னு அறிவிக் கலன்னு பதில் சொல்லி இருக்கு . அப்படின்னா இவ்வளவு நாட்களா எல்லோரும் நம்ம தேசிய விளை யாட்ட விட்டுட்டு வெள்ளகாரனோட கிரிகட்ட எல்லோரும் பாக்க றாங்கன்னு கழிவி கழிவி ஊத்துனான்களே அதுக்கு என்ன அர்த்தம். நெனச்சாலே சிரிப்புதான் வருது. இன்னும் என்னவெல்லாம் நாம தப்பா புரிந்து இருக்கமோ.


----------------------------------------------------------------------------------------------------------------

நம்ம அண்ணா ஹசாரே இந்தியாவின் அடுத்த காந்தி இனி இந்தியா ஒளிர போகுது இந்தியாவிற்கு பிடித்த சாபம் எல்லாம் போய்டுச்சி இனி இந்தியா வில் பாலாரும் தேனாறும் ஓட போகுதுன்னு வட இந்திய ஊடகங்கள் எல்லாமே ரொம்ப ஓவரா கூவிக்கினு இருத்தாங்க. இந்தியாவில் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு எதிரா லோக்பால் வருது கோப்பால் வருதுன்னு ஓவரா சவுண்டு உட்டாரு நம்ம ஹசாரே. கடசில பார்த்தா ஒரு ஆவின் பாலு கூட வரல. இப்ப என்னடான்னா அரசியல் கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்றாரு. இவரோட போராட்டத்துக்கே கூட்டம் வராம காத்து போன பலூனாட்டும் ஆய்ட்டாரு. இந்த நெலமைல அரசியல் கட்சி வேற ஆரம்பிக்க போறாராமா. கட்சி ஆரம்பித்து மட்டும் நம்ம அரசியல் வாதிகளை என்ன பண்ண முடியும். ஒன்னும் பண்ண முடியாது. அரசியல் வாதி ராக்.

-----------------------------------------------------------------------------------------------------------------
சென்னை அருகே ஒரு நாதாரி குடி போதைல தன்னோட மகளையே கற்பழிக்க முயன்ற பொழுது தன்னை காத்து கொள்ள தந்தையை கொன்ற வழக்குல சென்னை உயர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு எதிரான வழக்க தற்பாதுகாப்பு கொலைன்னு தள்ளுபடி செய்தது பாராட்ட பட வேண்டிய விசயம்தான். அந்த நீதிபதிய பாராட்டியே ஆகணும். ஆனால் சில நீதிபதிங்க குற்ற வாளிகளுக்கு சாதகமா தீர்ப்பு சொல்றதுக்கு லஞ்சம் வாங்குராங்கன்ர செய்திய பார்க்கும் பொழுது நீதி துறையை நெனச்சி கவலையா இருக்கு. ஆமா இந்த நீதிபதிங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா.
--------------------------------------------------------------------------------------------------------