வியாழன்

மனதை விட்டு நீங்காத வரிகள்..!

தமிழ் சினிமா பாடல்களில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத சில பாடல்கள்உண்டு. அந்த வகையில் 1978ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும்  திரைப்படத்திற்காக கண்ணதாசன் அவர்களால்  எழுதப்பட்டு இளையராஜா  இசையமைத்து ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் வரிகள் உங்களுக்காக.இந்த பாடலில்  பாடலாசிரியர் பெண்ணுக்கு உவமையாக காடுகள், மலைகள், மரங்கள் மேகங்கள் என அருமையாக எழுதியிருக்கும் வரிகளை நீங்களும் ஒரு முறை  படித்து பாருங்கள் எப்பொழுதும் மனதை விட்டு நீங்காத வரிகள் அவை.   


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
[செந்தாழம்பூவில்...]

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

[செந்தாழம்பூவில்...]

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

[செந்தாழம்பூவில்...]

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

2 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

பெயர்: நண்பன்- நண்பேன்டா - அப்படித்தானே எழுதனும்?

மலரின் நினைவுகள் சொன்னது…

சில மாதங்களுக்கு முன் இப்பாடலின் ஒலியே இல்லாமல் முழுவதுமாக ஆனந்தத்துடன் அனுபவித்தேன்...
எப்படியென்று கேட்கிறீர்களா?
இதோ...
http://www.malarinninaivugal.blogspot.in/2012/06/blog-post.html

கருத்துரையிடுக