கடுபேத்துறாங்க மை லார்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடுபேத்துறாங்க மை லார்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன்

போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது.

கீழே உள்ள அணைத்து படங்களும் முக புத்தகத்தில் பகிரபட்டவை உங்கள் பார்வைக்காக. 

மின்சாரத்த காணலையாம் யாரவது கண்டுபிடிச்சி குடுங்க அதுக்கு சன்மானமா  கரண்ட் சாக் தந்தாலும் தருவாங்க 



நாடு முழுவதும்னு சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். தமிழ் நாடு தவிர்த்து நாடு முழுவதும்னு சொல்லி இருந்தா பொறுத்தம இருந்து இருக்கும்.  



ஓ! இவருதான் மின்வெட்டு சாரி மின்சாரத்துறை அமைச்சரா இப்பதானுங்க மொதோ தரம் பாக்குறேன். 

 
 
பேசாம அடுத்த வருடத்தில் இருந்து காலண்டர்ல நல்ல நேரம் எமகண்டம் மாதிரி மின்வெட்டு நேரத்தையும் வெளியிட்டா மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும். 




போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது. 



இதை எல்லாத்தையும் பார்த்துட்டு கடைசில இப்படிதான் போய் எங்கயாவது முட்டிக்கணும் 




செவ்வாய்

அய்யயோ! ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா

ஒரு மத்திய அமைச்சர் ரூ71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும். இதுவே ரூ71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேட்டி 
-செய்தி 

அதானே ஒரு லட்சத்தி எழுபாதாயிரம் கோடி எல்லாம் சர்வ சாதரணமாக ஊழல்  செய்து புகழ் பெற்ற எங்களை கேவலம் 71 லட்சம் ஊழல் செய்ததாக சொல்லி எங்கள் புகழுக்கு குந்தகம் விளைவித்தார்னு வழக்கு தொடுத்தாலும் தொடுபாங்க போல. நாட்டு மக்களுக்கு சோத்துக்கே வழி  இல்ல இவுங்க என்னடான்னா 71 லட்சம் எல்லாம் சாதாரணம் அப்படிங்குறாங்க. நாடு வெளங்கிடும். தொடந்து மென்மேலும் கோடி கணக்குல  ஊழல செய்து  சாதனை படைக்கணும்னு நாட்டு மக்களாகிய நாங்கள்  வாழ்த்துகின்றோம்.   



-----------------------------------------------------


வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்கும்:சென்னை வானிலை ஆய்வு மைய 

 இயக்குனர் ரமணன்

-செய்தி

அய்யயோ! என்னது ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா. அப்பா கண்டிப்பா மழை வராது. வெயில் மண்டய பொலக்க போகுது. ஏற்கனவே மக்கள் பவர் கட்டால கஷ்ட்ட படுறாங்க இப்ப வெயில் வேற ரண கொடூரமா அடிச்சா மக்கள் என்ன தான் பண்ணுவாங்க. ஆண்டவா ஏன் இப்படி மக்கள மென்மேலும் சோதிக்கிற.  

----------------------------------------------------------

துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை:  கலைஞர் 

கருணாநிதி

-செய்தி 

வரவர நம்ம தலைவரோட காமெடிக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. அவரோட பேரப்புள்ள  ஏன் தலைமறைவா இருக்காருன்னே நம்ம தலீவருக்கு தெரிலயாமா. என்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ போங்க பாஸு 



வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

ரயில் பெட்களில் பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க, இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன எந்திரம் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.                                                                                                 - செய்தி


அட நீங்க வேற! பயனிகளுக்கு நல்லது செய்வதாக நினைத்து எலி கரப்பான் மூட்டப் பூச்செல்லாம் ஒழிச்சிடாதீங்க. அப்புறம் அந்த ரயில் இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ரயில்தானனு மக்களுக்கு சந்தேகம் வந்துரப் போகுது. அதுமட்டும் இல்லாம ரயில்ல கரபானும் எலியும் இல்லைன்னா நம்ம பதிவர்கள் பயண கட்டுரையின் போது ரயில்வே துறையை குறைக் கூறி எழுத மேட்டர் இல்லாம போயிடும். அதனால பதிவர்கள் சார்பாக நம்ம கோரிக்கைய பரிசீலனைக்கு எடுத்து பழையபடி எலி கரப்பானெல்லாம் இரயிலில் உலவ அனுமதிக்கனும்னு கேட்டுகொள்கின்றோம்.

 


=======================================

காவேரி பிரச்சினையால் பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை! தயாரிப்பாளர்  கவலை.                                          -செய்தி 1


காவேரியில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாததால் தஞ்சை பகுதி விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் கவலை.                                  - செய்தி 2


போட்ட பணத்த எடுக்க முடியுமா முடியாதான்னு தயாரிப்பாளுருக்கு கவலை. தொடர்ந்து விவசாயம் செய்து காலத்த ஓட்ட முடியுமா முடியாதான்னு விவசாயிகளுக்கு கவலை. பவர் கட்டால மானாட மயிலாட தொடர்ந்து பாக்க முடியலயேனு நமக்கு கவலை. வாழ்கைலதான் எத்தனை கவலை ஓ மை காட்!

 
=========================================

இயர்பியலுக்கான நோபல் பரிசு சேர்ஜே ஹரொசீ (Serge Haroche) மற்றும் டேவிட் ஜெ. வின்லான்ட் (David J. Wineland)

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு சான் பி.குர்தோன் மற்றும் ஜூல்ஸ் கால்ப்மேன்
                                                                                                                                           -செய்தி


இதேமாதிரி பவர் கட்டுக்கும் ஒரு நோபல் பரிசு தரனும்னு தமிழக மக்கள் சாரிபாக நோபல் பரிசு கமிட்டிக்கு ஒரு கோரிக்கை வைக்கனும்னு கேடுகொள்கின்றோம். அப்படியாவது தமிழகத்துக்கு ஒரு நோபல் பரிசாவது கிடைக்கட்டும். 
                                                        

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ, நமது ஆட்சியாளர்களுக்கு மிக சரியாக பொருந்தும். இதை பல சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்பவர்கள் நிருபித்து கொண்டே தான் இருகின்றார்கள். உதாரனதிற்கு ஈமு கோழி வளர்ப்பில் நடந்த மோசடியை எடுத்து கொள்ளுங்கள் ஈமு நிருவனங்கள் இரண்டு ஈமு கோழியை தங்களிடம் இருந்து வாங்கி வளர்தால் போதும் எல்லோரும் அம்பானியாக மாறிவிடலாம் என்ற வகையில் விளம்பரம் செய்தது. அதை ஒத்து ஊதும் விதமாக விளம்பரபங்களில் நடித்த நமது நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூட சேர்ந்து கூவினார்கள்

. இப்பொழுது பணம் கட்டினால் உங்கள் பெயரில் ஒரு தேக்குமரம் நட படும் இன்னும் இருபது வருடம் கழித்து அந்த தேக்குமரதை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தருவதாக கூறுவதையே நம்பி பணம் கட்ட தயாராக இருக்கும் நம்ம மக்கள். பணம் கட்டி ஈமு கோழியை வாங்கினால் வருடா வருடம் ஊக்க தொகை தரபடும். அதன் ஒரு முட்டை இரண்டாயிரம் முதல் நாங்காயிரம் விலை மதிக்க தக்கது. அதையும் எங்கள் நிருவனமே விலைக்கு வாங்கிக் கொண்டு உங்களுக்கு பணம் தருகின்றோம். அதன் இரச்சி ஒரு கிலோ ஆயிரம் விலை பொகும் அதற்க்கான பனத்தயும் நாங்களே தருகின்றொம் என கூறினால் அதை நம்பாமல் என்ன செய்வார்கள். அனைவரும் விவசாயத்தை விட்டு விட்டு ஈமுவில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த விளம்பரங்கள் வர ஆரம்பித்த உடனே நமது ஆட்சியாளர்கள் என்ன செய்து இருக்க வேண்டும். இந்த நிருவனம் செய்யும் விளம்பரம் உன்மைதானா அதன் நம்பக தன்மை எந்த அலவுக்கு சரியானது என விசாரித்து இருக்க வேண்டாமா. ஆனால் நமது அரசோ அந்த விளம்பரத்திற்கும் நாம் ஆட்சி செய்யும் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் மெத்தன்மாக இருந்தார்கள். இன்று அந்த நிறுவனம் இழுத்து மூடபட்டு விட்டது. இப்பொழுது அந்த நிருவனம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

அதேபோல் பள்ளி பேருந்தில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து இறந்த பிறகு அனைத்து பள்ளி பேருந்துகளின் தரத்தையும் ஆராய முவந்துள்ளது. பள்ளி பேருந்து குறித்து சட்ட திருத்தம் கொண்டுவருகின்றது. இதை ஏன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்த விபதிற்கு முன்பு பள்ளி பேருந்து தரம் குறித்து எந்த சட்டமும் இல்லயா. அதை பின் பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இனி பள்ளி பேருந்துகளின் தரத்தை உயர்த்துவதின் மூலம் இறந்த ஒரு உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா, குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் துயரத்தை துடைத்து விட முடியுமா. அதேபோல இப்பொழுது அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்த பிறகு எலியை பிடிக்க நடவடிக்கை எடுகின்றார்கலாம்.

ஆட்சியாளர்களின் கடமை மக்களை காப்பாற்ற வெண்டியதுதான். மக்கள் பாதிக்க பட்டவுடன் அவர்களுக்கு நிவாரன நிதி கொடுப்பதும் ஆறுதல் சொல்வதும் அறிக்கை விடுவது மட்டுமல்ல. மக்களை காப்பதும்தான்.

சனி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!



என்னது ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா . என்னப்பா சொல்றீங்க இவ்வளவு நாளா ஹாக்கி தேசிய விளையாடுன்னு பாடம் எடுத்தீங்க இப்ப என்னடான்ன ஒரு மாணவி இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி யான்னு தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டதுக்கு மத்திய அரசு எந்த ஒரு விளையாட்டையும் இந்திய அரசு தேசிய விளையாட்டுன்னு அறிவிக் கலன்னு பதில் சொல்லி இருக்கு . அப்படின்னா இவ்வளவு நாட்களா எல்லோரும் நம்ம தேசிய விளை யாட்ட விட்டுட்டு வெள்ளகாரனோட கிரிகட்ட எல்லோரும் பாக்க றாங்கன்னு கழிவி கழிவி ஊத்துனான்களே அதுக்கு என்ன அர்த்தம். நெனச்சாலே சிரிப்புதான் வருது. இன்னும் என்னவெல்லாம் நாம தப்பா புரிந்து இருக்கமோ.


----------------------------------------------------------------------------------------------------------------

நம்ம அண்ணா ஹசாரே இந்தியாவின் அடுத்த காந்தி இனி இந்தியா ஒளிர போகுது இந்தியாவிற்கு பிடித்த சாபம் எல்லாம் போய்டுச்சி இனி இந்தியா வில் பாலாரும் தேனாறும் ஓட போகுதுன்னு வட இந்திய ஊடகங்கள் எல்லாமே ரொம்ப ஓவரா கூவிக்கினு இருத்தாங்க. இந்தியாவில் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு எதிரா லோக்பால் வருது கோப்பால் வருதுன்னு ஓவரா சவுண்டு உட்டாரு நம்ம ஹசாரே. கடசில பார்த்தா ஒரு ஆவின் பாலு கூட வரல. இப்ப என்னடான்னா அரசியல் கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்றாரு. இவரோட போராட்டத்துக்கே கூட்டம் வராம காத்து போன பலூனாட்டும் ஆய்ட்டாரு. இந்த நெலமைல அரசியல் கட்சி வேற ஆரம்பிக்க போறாராமா. கட்சி ஆரம்பித்து மட்டும் நம்ம அரசியல் வாதிகளை என்ன பண்ண முடியும். ஒன்னும் பண்ண முடியாது. அரசியல் வாதி ராக்.

-----------------------------------------------------------------------------------------------------------------
சென்னை அருகே ஒரு நாதாரி குடி போதைல தன்னோட மகளையே கற்பழிக்க முயன்ற பொழுது தன்னை காத்து கொள்ள தந்தையை கொன்ற வழக்குல சென்னை உயர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு எதிரான வழக்க தற்பாதுகாப்பு கொலைன்னு தள்ளுபடி செய்தது பாராட்ட பட வேண்டிய விசயம்தான். அந்த நீதிபதிய பாராட்டியே ஆகணும். ஆனால் சில நீதிபதிங்க குற்ற வாளிகளுக்கு சாதகமா தீர்ப்பு சொல்றதுக்கு லஞ்சம் வாங்குராங்கன்ர செய்திய பார்க்கும் பொழுது நீதி துறையை நெனச்சி கவலையா இருக்கு. ஆமா இந்த நீதிபதிங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா.
--------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு

கடுபேத்துறாங்க மை லார்ட்...!



பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். ஏற்கனவே இவங்க நாடு நாடா சுத்துனது விமர்ச்சனத்துக்கு  உள்ளாகி இருக்கும் இந்த நேரத்துல இந்த காமெடி வேற. பேசாம ஆங்கிலேயர் ஏற்படுத்திய இந்த கவுறுவ பதவியையே ரத்து பண்ணினா என்னன்னு தோணுது தோணுது.


======================================



நடக்கறது எல்லாம் பார்க்கும் பொழுது நித்யானந்தாவுக்கு நல்ல காலமா கெட்ட காலமான்னு சந்தேகமா இருக்கு. அவரும் ரொம்ப காலமா சாமியாரா இருக்கார். அப்பொழுதெல்லாம் அவர் இந்த அளவுக்கு மக்கள்  மத்தியில் ரீச் ஆகல. எப்ப ரஞ்சிதா விசயத்துல அவர் பெயர் அடிபட்டுசோ அதிலிருந்து தொடர்ச்சியா மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியா ஆனதாகட்டும் கர்னாடக பத்திரிக்கயாளர்களை தாக்கியது வரைக்கும் அவருக்கு பப்ளிசிட்டி தான். நித்யானந்தா சம்பந்தமாக தினமும் ஒரு செய்தியாவது இடம் பெறாமல் இல்லை. அவரும் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவில்லை (மீசையே இல்லைங்குறது வேற விஷயம்) என்பதும் போல சிரிசிகிட்டே பத்திரிக்கைகளுக்கு போஸ் குடுத்துகிட்டு இருக்கார். இந்த நிலைல ஒரு புது சர்ச்சை வேற கிளம்பி இருக்கு. மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. எது எப்படியோ பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் புது பரபரப்பு செய்தி கிடைச்சிருச்சி.

================================================================


 ஹரினா மாநிலம் மானேசர் அருகில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4வயது குழந்தை மஹியை கிட்டத்தட்ட 85 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று பிற்பகல் ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லி இருக்காங்க.  ஆழ்குழாய் கிணறுக்காக போட்ற  துளைகல்ள குழந்தைங்க விழுந்துகிட்டு தான் இருக்காங்கா ராணுவமும் காப்பாத்த போராடிகிட்டு தான் இருக்காங்க இதுக்கு எப்பதான் முடிவு வருமோ தெரியல.

===============================================


ஏறக்குறைய பிரணாப் முகர்ஜி தான் அடுத்த ஜனாதிபதின்னு உறுதி ஆயிடுச்சி. இது எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஜெயலலிதா போன்றவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சர்மா ஜனாதிபதி தேத்தலில் தான் அமோக வெற்றி பெருவேன்னு அறிக்கை விட்டுகிட்டு இருக்காரு.இதுக்கு பேருதான் ஆள் இல்லாத கடைல டீ ஆத்தர்தோ . நல்ல வேலை நம்ம மருத்துவர் அய்யா கட்சிக்கு கணிசமான எம்.எல. ஏ வோ எம்.பி யோ இல்லை. இருந்து இருந்தா திருமாவளவன் தான் ஜனாதிபதியா வருனும்னு அறிக்கை விட்டாலும் விட்டிருப்பார். நல்ல வேலை நாடு தப்பிச்சது.

============================================