புதன்

அபாய எச்சரிக்கை..!



இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்து இருக்கின்றது.


மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.


சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன.

 செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.



ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டது.


இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.



அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இப்படி அணு உலை நிறுவியதால் அவர்கள் அதன் விளைவை இன்று அறுவடை செய்துகொண்டு இருகின்றார்கள். ஆனால் நமது அரசு அணு உலை பாதுகாப்பானது என ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறது.  அவர்களுக்கு  துணையாக சில ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. அணு உலையால் எவ்வளவு நன்மை இருக்கின்றதோ அதை விட  அதானால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம்.இது மக்களுக்கான அபாய எச்சரிக்கை. மக்களே சிந்திக்க தவறாதீர்கள்.  

செவ்வாய்

டாஸ்மாக்கும் இன்றைய மாணவர்களும்..!




நமது இளைய சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டு இருகின்றது என்பதே புரியவில்லை. காஞ்சிபுரத்தில் ஒன்பதாவது படிக்கும் மானவன் பீர் பாட்டிலை வாங்கி இடுப்பில் வைத்து கொண்டு சைகிளில் செல்லும் பொழுது பீர் பாட்டிலில் உள்ள கேஸ் அழுத்ததின் காரனமாக பாட்டில் வெடித்து அந்த மானவன் இறந்துள்ளன். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது நம்மை ஆண்ட முன்னால் முதவரும் இன்னால் முதல்வரும் நம் மக்களுக்கும் நமது மானவ சமுதாயத்திற்கும் சேவை செய்யும் விதமாக
டாஸ்மாக்கை ஊருக்கு ஊர் திறந்து நமக்கு ஆற்றிய பணியை தஞ்சாவூர் கல்வெட்டில் தான் பதிய வேண்டும்.

மதுவினால் நமது மானவ சமுதாயம் சீர்கெட்டு போயுள்ளது என்பதை நான் இந்த சம்பவத்தை மட்டும் வைத்து சொல்ல வில்லை. அரசே மதுபான கடைகளை ஊருக்கு ஊர் திறக்கும் முன்பு மது என்பது சமுதாயத்தில் மிக பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. டாஸ்மாக்கை அரசு ஆரம்பிக்கும் முன்பு வரை ஒயின்சாப் என்பது அனைத்து ஊரிலும் இருக்காது. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சந்தை பகுதியாக இருக்கும் நகர பகுதிகளில் மட்டும் தான் இருக்கும்.அங்கு அனைவரும் சென்று நினைத்த நேரத்தில் மது வாங்க முடியாது. கிராமங்களில் ஊருக்கு ஒதுக்கு புறம் மறைவாக சாரய கடைகளும் வெயில் காலங்கலில் கள்ளு கடைகளும் இருக்கும். அந்த கடைகளுக்கு இப்பொழுது டாஸ்மாக் கடைக்கு யார் வேண்டுமானாலும் போவது போல் போக முடியாது. வழக்கமாக வருபவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சென்றால் தான் தருவார்கள் யாரும் புதியவர்கள் சென்றால் தரமாட்டார்கள். காரனம் அந்த கடைகள் அரசுக்கு தெரியாமல் சட்டத்திற்க்கு புறம்பாக நடத்த படுபவை. புதியவர்களுக்கு யார் என்று தெரியாமல் விற்றால் அவர்கள் கடை காவல் துறைக்கு தெரிந்து விட வாய்ப்பு இருகின்றது என்ற அச்சம். அங்கு மானவர்கள் சென்று வாங்க நினைப்பது என்பது இயலாத காரியம்.

நான் மானவனாக இருக்கும் பொழுது பள்ளி சீருடை தைப்பதற்காக அருகாமயில் உள்ள நகர் பகுதியில் ஒரு தையற்கடைக்கு சென்ற பொழுது அந்த கடையில் இருந்தவர் மற்றொருவருடன் யேதோ பேசிக்கொண்டிறுக்கும் பொழுது அவர்களின் பேச்சின் ஊடாக ஒரு மது பாட்டில் விலை முப்பது ரூபாய் (பீரா அல்லது மற்ற வகை மதுவா என்பது அந்த வயதில் எனக்கு தெரிய வில்லை) என்பதை தெரிந்து கொண்டேன். இன்றுவரை அது என் நினைவில் மறக்காமல் இருகின்றது. இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டி உள்ளது. அன்றைக்கு ஒரு பீரின் விலை முப்பது ரூபாய். என்னை போன்ற மானவர்களின் பாகெட் மனி (வாங்கி திங்க காசுன்னு சொல்லுவாங்க). நான் பத்தாவது படிக்கும் வரை எனக்கு வீட்டில் தருவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய். எனக்கு மட்டுமல்ல என்னுடன் படித்த பெரும்பாலான மானவர்கள் கொண்டு வரும் காசு அவ்வள்ளவே. ஏதாவது பண்டிகை வந்தால் தான் பதினைந்து அல்லது இருபது ரூபாய் முழுதாக பார்க்க முடியும். அந்த காசை வைத்து நாங்கள் நினத்தாலும் எந்த மதுவும் வாங்க முடியாது. அப்படியே ரெண்டு மூனு பேரு சேர்ந்து காசு போட்டு வாங்க நினைத்தாலும் எந்த மதுபான கடையும் எங்கள் அருகாமயில் இருக்காது. அதற்காக டவுனுக்கு போய் வாங்கி வரும் அளவுக்கு எங்களுக்கு தைரியமும் இருந்தது இல்லை. இதுதான் டாஸ்மாக் திறக்கும் வரை இருந்த நிலை.

அன்றைக்கு ஒரு பீர் முப்பது ரூபாய் இன்று ஒரு பீர் அருபதில் இருந்து என்பது வரை இந்த பதினைந்து வருடத்துக்கு ஒன்று முதல் ஒன்னறை பங்கு வரை விலை உயர்ந்துள்ளது. இது சரியான அலவில் தான் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு ரூபாய்யும் இரண்டு ரூபாயுமாக கொடுத்து கொண்டிருந்த பாகெட் மனி மேற்கூறிய சதவிகிததில் தான் கூடியுள்ளதா. இன்று படிக்கும் பசங்களிடம் இரண்டு ரூபயோ அல்லது நாங்கு ரூபாயோ பாகெட் மனியாக கொடுக்க முடியுமா. நாம் நூரு இறுனூரு என சாதரனமாக கொடுக்கும் நிலை உள்ளது. அன்று போல மதுபான கடைக்கு போக எந்த சிரமமும் இல்லாமல் அரசே அவர்களுக்கு அருகாமையில் மதுபான கடையை திறந்துள்ளது. இப்படி மானவர்கள் தப்பு பன்னுவதற்க்கான எல்லா வழிகளையும் நாமும் நமது அரசும் திறந்து விட்டிருக்கும் பொழுது மானவர்கள் தவறு செய்ய்யதான் செய்வார்கள்.

இந்த மானவ பருவம் அனைத்து விசயத்தயும் கற்று கொள்ள துடிக்கும் வயசு. அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என தெரியாது. அவர்களை நல்வழிபடுத்த வேண்டியது நமது கடமையும் அரசின் கடமையுமே தவிர இதில் வேரு யாரை குற்றம் சொல்ல முடியும்.

ஞாயிறு

கூடான்குளமும் அமெரிக்க பணமும்..!






கூடாங்குளம் அனு மின் நிலயத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்பவருக்கு அமேரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் செயல் படும் சில அமைப்புகள் மூலமாக பணம் வருகிரது என்று கூறி இருப்பது யாரோ சாமானியனின் கூற்று அல்ல இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் பத்திரிக்கையாளர்களுக்கு முன் மேற்க்கண்டவாறு கூறியுள்ளார்.

தங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பிரதமர் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் அதை பிரதமர் அவர்கள் நிருபிக்க வேண்டும். என்றும் அவ்வாறு நிருபிக்க வில்லையெனில் பிரதமர் மற்றும் அமைச்சர் நாராயன சாமி மீதும் வழக்கு போடுவேன் என்றும் உதயகுமார் கூரியுள்ளார்.இந்த நிலையில் ரஷ்ய தூதர் தாங்கள் நினைத்தது போல இந்த போராட்டதிற்கு பின்னால் அமேரிக்கவின் கை உள்ளது என்பது இந்திய பிரதமரின் அரிக்கை மூலம் நிருபனமாகியுள்ளது என கூரியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அமேரிக்காவில் இருந்து பனம் வந்துள்ளது என கூறுவது யாரோ ஒரு சாமனியனோ அல்லது தினமலர் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையோ அல்ல இந்தியாவின் பிரதமர்.இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் படைத்தை பாரத பிரதமர். இந்தியாவில் அரசுக்கு எதிராக போராடும் சிலருக்கு அமேரிக்காவில் இருந்து பனம் வருகின்றது என்பதை தெரிந்து இருக்கும் பொழுது அதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி உதயகுமாரை கைத்து செய்து நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து அவருக்கு தண்டனை வாங்கி தருவது ஒரு நாட்டின் அரசுக்கும் அந்த அரசை வழி நடத்தும் பிரதமருக்கும் பெரிய விசயமல்ல அதை விடுத்து ஒரு சிறு பிள்ளை செய்வது போல அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பிரதமர் சுய நினைவோடுதான் இருக்கின்றாரா என்ற என்னம் எழுகின்றது.


கூடங்குளத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பனம் கொடுப்பதாக ஒரு செய்தி உலவிகொண்டு உள்ளது. அதே நேரத்தில் கூட்டம் கூட்ட வேண்டுமென்றால் பனம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது சாத்தியம். ஆனால் ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு மக்களை பனம் கொடுத்து கூட்டுவது என்பது இயலாத காரியம். மக்களுக்கு உன்மையில் அரசின் நடவடிக்கை பிடிக்காத பிடிக்காத நிலை இருந்தால் தான் பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் போராட முன்வருவார்கள்.ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராடினால் என்ன என்ன பின்விளவுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது நாட்டின் அரசங்கத்தை எதிர்த்து போராட கூலிக்கு பனம் பெருபவர்கள் வருவார்களா என்பது ஐய்யமே.

அமேரிக்கவில் இருந்து பணம் பெற்று இருப்பதாக கூறப்படும் உதய குமார் என்பவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதை விடுத்து. இவ்வாறு நடந்துள்ளது என பத்திரிக்கைகளுக்கு கூறுவதன் நோக்கம் போராடும் மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதாக இருக்குமோ என்ற ஐய்யம் எழுவதை தவிற்க முடியவில்லை. உதயகுமார் என்பவர் தம்மீது பொய்யான குற்றச் சாட்டு சுமத்தப்படுள்ளது அதை நிறுபிக்க வில்லயெனில் பிரதமர் மீது அவதூறு வழக்கு போடுவேன் என்று கூறியும் அவர் குற்றத்தை நிறுபிக்க எந்த நடவடிக்கயும் எடுத்ததாக தெரியவில்லை. உன்மையில் இந்த போராட்டத்திற்கு அமேரிக்கவில் இருந்து பனம் வந்ததா? அல்லது மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதற்காகவா?

புதன்

வங்கி ஊழியர்கள் மட்டும் வானிலிருந்தா குதித்தார்கள்?

மக்கள் தங்கள் சேமிப்புகளை அரசு வங்கியில் சேமிப்பது பெரிய வட்டி கிடைக்கும் என்ற நோக்கில் அல்ல. அப்படி பெரிய வட்டி வேண்டுமென்றால் தனியார் நிதி நிறுவனங்களில் சேமைத்து இருப்பார்கள். அவர்கள் அரசு வங்கியில் சேமிபதன் நோக்கம் வட்டிக்க அல்ல தாம் கஷ்ட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணம் வீட்டி வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல. அதை அரசு வங்கில் செமித்து வைத்தால் அதை அரசிடமே கொடுத்து வைப்பது போன்றது. நமது பணத்துக்கு அரசே பாதுகாப்பு கொடுக்கும். அரசின் பாதுகாப்பும் மற்றவர்களின் பாதுகாப்பை விட சிறந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.


ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்பை வங்கிகள் நிரைவேற்றுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் வங்கி ஊழியர்கள் தமது வடிக்கையாலர்களிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் கண்டிக்க தக்க முறையில் இருகின்றது. இதை நானே நேரடியாக பார்த்துளேன். இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் ஒரு எழுபது வயது மதிக்க தக்க முதியவர் பென்சன் வாங்குவதர்க்காக வந்திருப்பார் போல. அந்த முதியவர் வங்கி ஊழியரிடம் தமது கனக்கு புத்தகத்தை நீட்டியவாரு தமக்கு பென்சன் வந்து விட்டதா என கேட்டார். அதற்க்கு அந்த வங்கி ஊழியர் அந்த பெரியவரின் கனக்கு புத்தகத்தை கூட கையில் வாங்காமல் "தேதி அஞ்சி தானே ஆவுது அதுகுள்ள நோட்ட தூக்கிகிட்டு வந்துட்ட போ போ போய் பதினஞ்சி தேதிக்கு மேல வா தொர என்னமோ பனத்த பேங்குள போட்டு வச்சிருக்க மாதிரி வந்துட்டாரு"  இந்த வார்த்தையை கேட்ட அந்த முதியவரின் முகம் வாடிவிட்டது. பொதுமக்கள் நிரைந்த அந்த பொது இடத்தில் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னி எந்த அளவுக்கு அந்த முதியவர் கூனி குறிகியிருப்பார். வங்கி பனியில் இருந்து விட்டால் என்ன அவர்கள் வானில் இருந்தா குதிதார்கள். அந்த முதியவரும் அரசு பனியில் இருந்து ஓய்வு பெற்றவராகதான் இருக்க வேண்டும். நாளை இந்த வங்கி ஊழியரும் ஓய்வு பெரும் நாள் வரும் அந்த முதியவருக்கு வந்த நிலமை இந்த வங்கி ஊழியருக்கும் வேறொரு வங்கி ஊழியாரால் வரும் வறலாறு திரும்பும். தமிழகத்தில் வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். வங்கி நடவடிக்கையில் ஒரு படிவத்தை தவறாக பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால் போதும் அதற்கு அந்த ஊழியர் எப்படி நடந்து கொள்வார்கள் என்று.

அவர்கள் நாம் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பனத்தை வெளியில் வட்டிக்கு விட்டு தான் சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றார்கள். நாம் அவர்களின் வங்கியில் கனக்கு வைக்கவில்லை என்றால் அவர்களுக்கு அங்கு வேலையே இருக்காது. ஏதாவது மலிகை கடைக்கு கனக்கு பிள்ளையாகதான் போக வேண்டுமென்பதை மறந்து செயல் படுகின்ரனர். அரசு பனியில் இருந்தால் என்ன மனிதாபிமானத்தை அரசு அழுவலகத்தின் வாசலில் புதைத்து விடுவார்களா?

அடுத்து வங்கியில் நாம் செமித்து வைக்கும் பனம் அங்கு பாதுகாப்பாக தான் உள்ளதா. சமீபத்தில் சென்னையில் ஒரு வங்கியில் பட்ட பகலில் கொல்லை சம்பவம் நடந்துள்ளது. அந்த வங்கியில் கங்கானிப்பு கேமராக்கள் கூட இல்லாமல் இருந்துள்ளது. காவல்துறை பல முறை வங்கியில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்துங்கள் என்று அறிவுறித்தியும் கண்கானிப்பு கேமரா பொருத்த படவில்லை என காவல் துறை கூறுகின்றது. கண்கானிப்பு கேமரா பொருத்தாமல் இருந்ததால் பட்ட பகலில் நடந்த இந்த கொல்லை சம்பவத்தில் ஈடு பட்டவர்களை பிடிக்க முடியவில்லை. வங்கியில் திருடு போனதுகப்புறம் இப்பொழுது அங்கே கங்கானிப்பு கேமரா பொருத்துகின்றார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்க்காரம் எதற்கு.

திங்கள்

தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் இந்தியர்கள் தானே?




கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்திக் கொண்டு இருந்த இரு மீன வர்களை இத்தாலி ய நாட்டை சேர்ந்த கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொன்றுவிட்டனர். அந்த கப்பலில் இருந்த இரு வரை கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரனை நடத்திய பொழுது கடல் கொல்லைய ர்கள் என்று நினை த்து சுட்டுவிட்டதாக தெரிவித் துள்ளனர். மீன வர்களை ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டு கொன்றதக் காக கப்பல் நிறுவனம் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இறந்தவர் கலின்  குடும் பத்துக்கு தலா ஐம்பது லட்ச்ச ரூபாய் நிவாரன நிதி தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக் கையில் அரசு அதிகரிகள் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கை கடல் பகுதியில் கடந்த முப்பது வருடங்கலுக்கு மேலாக தமிழக மீனவர்கள் இலங்கை கடல் படையினாரால் சுட்டு கொல்ல படுகின்றார்கள். அது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருகி ன்றது. இதற்காக இந்திய அரசு ஒரு துரும்பைகூட அசைக்க வில்லை. சுட்டு கொல்லபடும் ஒவொரு மீனவனுக்கும் பின்ணால் ஒரு குடும்பம் இருகின்றது. அதை பற்றியும் அரசு கவலை படவில்லை. எந்த நிவா ரனமும் அவர்களுக்கு இதுவரை வழங்க வில்லை. தழக அரசும் இந்த பிறச்சினைக்கு தீர்வு கான வேண்டுமென்றால் அதற்கு கச்ச தீவை  மீட்பதுதான் ஒரேவழி என்று வழக்கம் போல பழைய பல்ல வியை  பாடிகொண்டு இருக்கின்றது. தமிழக அரசின் இந்த கோரிக்கை கச்ச தீவை மீட்க எந்த வழிவகையும் செய்ய போவது இல்லை.


தமிழக அரசும் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகின்றது இன்னும் என்னென்னமோ செய் கின்றது. ஆனால் எதை பற்றீயும் மத்திய அரசு கவலை படுவதாக இல் லை. நாட்டு மக்களின்  வாழ்வாத ரத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என இந்திய அரசியல் சாசனம் கூறு கின்றது. அப்படி இருக்கும் பொழுத மத்திய அரசு தமிழக மீனவர்களை பற்றி கவலை படாமல் இருப்பதற்கு காரனம் என்ன. ஒரு வேளை தமிழகம் இந்தியா வின் ஒரு பகுதி இல்லை என மத்திய அரசு நினை கின்றதா. ஆஸ்தி ரேலியாவில் இந்திய மாணவன் ஒருவன் தாக்கப் பட்டால் உடனே வெளியுறவு துறை அமைச்சர் தமது கண்டனத்தை  ஆஸ்திரேலியா வுக்கு   தெரிவிக்கின்றார். ஆனால் தமிழ கத்தை  சேர்ந்த மீனவன்  இந்திய கடல் பகுதியி அண்டை நாட்டு  ராணுவத்தினரால்  கொள்ள  படுகின்றான் அதற்க்கு யாரும் வாய்  திறப்பது  இல்லை.  

 இலங்கையில் நடந்த விடுதலைபுலிகலுக்கு எதிராக போரில் இந்தியா வால் எதுவும் செய்ய முடியாது அது இலங்கையின் உல்னாட்டு விகாரம் என மத்திய அரசு கூரியது. இந்தியா நினத்திருந்தால் அந்த போரை நிருத்தியிருக்க முடியும். ஆனால் அது உள்னாட்டு பிரச்சினை அந்த விசயத்தில் இந்தியா தலையிட்டால் காஸ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானும் அமெரிகாவும் தலையிடுவதை அனுமதிக்க வேண்டி வரலாம் என்ற கருத்து கூறப்பட்டது.


காஸ்மீர் பிரச்சினயில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் தலை யிடு வதை நாம் எப்படி அனுமதிக்க முடியாதோ அது போல இலங்கை அரசு அவர்கள் உள்னா ட்டு பிரச்சினையில் நம் மை அனுமதிக்காது. உள் னாட்டு மக்களுக்கு எதி ராக போரை நடத்த வே ண்டாம் என நம்மால் கருத்துதான் கூற முடியுமே தவிர நம்மால் இலங்கை அரசை கட்டு  படுத்த முடியாது என கூரியது. அந்த போரை இதியாதான் நடத்தியது என்று தமிழர்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்து வருகின்றது. அதே நேரத்தில் காஸ்மீர் பிரச்சினையில் நாம் அன்னிய நாட்டின் தலை யீடை அனுமதிக்க மாட்டோம் அந்த வகையில் இந்தியா ஈழ போரின் பொழுது எதுவும் செய்யாததை ஏற்றுக்கொள்வோம்.


ஆனால் தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் பிரஜை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. தமிழக மீனவ களின் உயிர் சம்பந்தபட்ட பிரச்சினைக்கும் இந்திய அரசு வாய் மூடி மௌ னமாக இருப்பது எந்த விததிளும் ஏற்றுக்கொள்ள முடியாது.


தீவிரவாதம் அதிகரிக்க யார் காரனம?



இன்றய கால கடத்தில் ஒவொறு நாடும் தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மின் தேவைக்காக யுரோனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதில் எந்த நாட்டையும் நாம் குறை கூற முடியாது. அப்படி குறை கூறுவதாக இருந்தால் இந்தியாவும் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி அனு சோதனை நடதியது. அமெரிக்காவும் அமெரிக்கவின் அல்லக்கை நாடுகலும் பொருளாதார தடை வித்திதது.


அனு உலை வேண்டுமா வேண்டாமா என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இருந்தாலும் நாம் இந்தியா அனு சோதனை நடத்தியதை தவறு என்று சொல்ல முடியாது. அது நமது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்பதால் நாம் அதை ஆதரித்துதான் ஆகவேண்டும். நமது நாட்டை சுற்றி இருக்கும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நமது பலத்தை காட்டி அவர்களுக்கு ஒரு அச்சைதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் அனு சோதனை நடத்டினோம் என்பதை மறுக்க முடியாது. நம் மீது பொருளாதர தடை வித்தித அமெரிக்க மற்றும் அதன் அல்லக்கை நாடுகலும் அனு ஆயுததை தயாரித்து வைத்துக்கொண்டும் யுரோனியத்தை செறிவூட்டும் பனியில் ஈடுபடுக்கொண்டே தான் நம் மீது பொருளாதார தடை விதித்தன.

இப்பொழுது ஈரான் யுரோனியத்தை செறிவூட்டுவதை அமேரிக்கா எதிர்கின்றது. ஈரான் அனு ஆயுத சோதனை நடத்துவது அந்த நாட்டின் உரிமை அதை சோதனை நடத்த கூடாதென்று சொல்ல அமெரிகாவுக்கு என்ன உரிமை இருகின்றது. ஈரான் அனு சோதனை நடதியது அனு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல மின்சாரம் தயாரிக்கதான் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அந்த நாடு மின்சாரம் தயாரிதால் என்ன அனு ஆயுதம் தயாரித்தால் என்ன அது அந்த நாட்டின் உரிமை. அனு ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அமேரிக்கா அனுவை செரிவூட்டுவதை கண்டிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஈரான் அனுவை செரிவூட்டுகின்றதென்றால் அதன் அண்டை நாடான இஸ்ரேல் அனு ஆயுதம் வைத்துள்ளது

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சினை இருந்து வருவது உலகரிந்த விசயம் அப்படி இருக்கும் பொழுது தனது எதிரி நாடு பலமான ஆயுதம் வைத்திருக்கும் பொழுது ஈரானும் தனுது ரானுவத்தை பலபடுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்படி இருக்கும் பொழுது அமெரிக்கா எப்படி ஒரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறிக்கொண்டு மற்றொரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

இப்படிதான் ஈராக்கும் பயங்கரமான ஆயுதம் வைத்திருகின்றது என்று கூறி அதன் மீது போர் தொடுத்தது. ஈராக் அயுதம் வைத்திருப்பது பெரிய குற்றமா அப்படி பார்த்தால் உலகில் உள்ள ஆயுதத்தில் எழுபது சதவிகிதம் வைத்திருக்கும் அமெரிக்கவுக்கு என்ன தண்டனை கொடுப்பது. சரி ஈராக் ஆயுதம் வைத்தைருந்தது என்ற காரனத்தை கூறித்தானே போர் தொடுத்தது. அப்படி என்ன ஆயுதத்தை ஈராக்கில் கண்டு பிடித்தது. லட்ச்சக் கனக்கான மக்களை கொன்று குவித்ததை தவிர அங்கு என்ன ஆயுத்ததை கண்டு பிடித்தது. எத்தைனை மக்கள் கை கால்களை இழந்து ஊனமானார்கள் இதற்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகின்றது. இபொழுத்து என்னவென்றால் ஈரான் அனு ஆயுதம் வைத்திப்பதாக கூறிக்கொண்டு அந்த நாட்டின் அருகாமையில் தனது அனு ஆயுத போர்கப்பலை நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது போர்தொடுத்தால் அதனால் பாதிக்க போவது அப்பாவி மக்கள்தான். இப்படி ஒரு நாட்டின் மீது அனியாயமாக போர் தொடுத்தால் அதனால் பாதிக்கபட்ட மக்கள் சொந்த பந்தங்களை இழந்த மக்கள் தங்களின் எதிரிப்பை காட்ட ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள். பலம் வாய்ந்த அமெரிக்காவை நேரடியாயக தாகமுடியாதென்பதால் பொது இடத்தில் குண்டு வைக்கதான் செய்வார்கள் போரால் பாதிக்க பட்ட மக்களின் உனர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் போரின் பாதிப்பை அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அது தான் ஈராக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது. தீவிரவாதிகள் தானாக முலைப்பதிலை. ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு இனத்தின் மீதோ அனியாயமாக தாக்குதல் நடத்துவதன் மூலம் தீவிரவாதத்தை விதைக்கின்றனர். (அதற்காக ஆயுதத்தை கையிலெடுத்து அப்பாவி மக்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு நான் சொல்ல வருவது அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்த திவிரவாதம் என்னும் உயிர் கொல்லி இன்று நம் கலுத்திற்கு மேல் கத்தியாக தொங்கிகொண்டு இருக்கின்றது.)

தீவிரவாதத்தை உருவாக்குவதில் அமெரிகாவிற்குதான் முதல் இடம். இந்த லட்ச்சனதில் தீவிரவாததை ஒடுக்குவத்துதான் அமெரிக்க அரசின் குறிக்கோளாம் ஒபாமா வாய் கூசாம் கூறிக்கொண்டு இருக்கின்றார். இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டி இருக்கின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அனு ஆயுத சோதனை நடத்தும் பொழுது அமெரிக்கா இப்படி போர் தொடுக்கவில்லை.ஆனால் ஈரான் மீது மட்டும் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராவது அனு ஆயுதம் தயாரிப்பதை எதிர்பதற்க்காக அல்ல. அந்த நாட்டின் என்னை வளத்தை கைபற்ற தான் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலில் அருபது சதவிகிதம் ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்குமேயானால் இந்தியாவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் அதானால் நமது மக்கள் நேரடியாகவே பாதிக்க படுவார்கள். இப்படி அனியாயம் செய்யும் இந்த அமெரிக்க புனைக்கு மனி கட்டுபவர் யார்?

இந்த நேரத்தில் நாம் மற்றொரு விடயத்தையும் உற்று நோக்க வேண்டி உள்ளது. ஈரான் அணு சோதனை நடத்திய இந்த நேரத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும் அது ஈரானுக்கும் தெரியாமல் இல்லை. இந்த சூழலில் இருக்கும் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டை பகைத்து கொள்ள விரும்பாது. அப்படி இருக்கு பொழுது ஈரான் எப்படி இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் இந்தியாவிலும் தாய்லாந்திலும் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியா அரசு ஈரான் மீது போர்தொடுக்க ஆதரவு தரமாட்டார்கள் என்பதை அறிந்த அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் வேலைதான் இந்த இஸ்ரேல் அதிகாரிகள் மேல் தாக்குதலுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஆனால் வழக்கம் போல இந்திய ஊடகங்கள் "இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் ஈரான் தீவிர வாதிகள் தாக்குதல்" என்று செய்தி வெளியிடுகின்றன. உலக அலவில் இன்று நடத்த படும் பெரும்பாலான தாக்குதலுக்கு பின்னால் இப்படிப்பட்ட உளவுத்துறையின் பங்கு இல்லாமல் இல்லை, ஆனால் ஒவொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு அப்பாவி மேல் வழக்கை போட்டு அவர்களின் வாழ்கையை வீணாக்கும் நடவடிக் கைகளில் அனைத்து நாட்டு காவல் துறை ஈடுபடுவதையும் மறுக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்க யார் திவிரவாதி அப்பாவி மக்களை அனியாயமாக கொன்று குவிக்கும் அமெரிக்காவா அல்லது இழந்த உரிமயை மீட்க்க போராடும் அப்பாவி மக்களா?

ஞாயிறு

அத்வானியின் ராமர் கோவில் ஆசை -இதுவல்லவோ லட்சியம்..!




இந்த மதவாதிகளுக்கு நாடு அமைதியாக இருந்தால் சுத்தமாக பிடிக்காது போலிருகிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டுவதுதான் தமது லட்சியம் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி, பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் என்று கூறியுள்ளார். என்னே ஒரு லட்சியம்! நாட்டுல மக்களுக்கு செய்ய வேற ஒன்றுமே இல்லை போல!

இதற்கான நேரம் விரைவில் வரவேண்டும் என்று ராமர் பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்கள் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு என்ன தான் பிரச்சினைன்னு தெரியல எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அப்பொழுது இந்த ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டியது. இதை காரணமாக வைத்து கொண்டு ஒட்டு பொறுக்கிவிட்டு மக்கள் மனதில் நஞ்சையும் விதத்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை விட பலமடங்கு அதிகமாக பணத்தை ஊழல் செய்து சம்பாதிக்க சென்று விடுவது தான் இவர்களின் வாடிக்கையாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் தேர்தலின் பொழுது சொன்ன வார்த்தைகளை உண்மை என்று நம்பி மக்கள் மாற்று மதத்தினருடன் பகைமையை எனும் தீயை வளர்த்து கொண்டு நிம்மதியில்லாமல் சண்டையிட்டு கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசியல் வியாதிகள் அந்த தீயில் நன்றாக குளிர் காய்ந்துகொண்டு இருப்பார்கள்.

ராமர் கோவிலை அத்வானி மட்டுமல்ல அவருடைய பேரபிள்ளைகள் அரசியலுக்கு வந்தாலும் கட்ட மாட்டார்கள். ராமர் கோவிலை கட்டி விட்டால் அவர்களுக்கு அரசியல் பிழைப்பு நடத்த வழி இருக்காது. இந்த மத பிரச்சினை என்னும் தீ எரிந்து கொண்டே இருந்தால் தான் அவர்கள் அரசியல் வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.


இந்த கோவில் கட்டி விட்டால் இந்த நாட்டில் தேனாறும் பாலாரும் ஓடிவிடுமா என்ன? நாட்டின் வருமைகோடு அழிந்துவிடுமா? இந்த கோவிலால் நாட்டு மக்களுக்கு என்ன நடந்து விட போகின்றது. நாட்டில் இருகின்ற கோவில் போதாதா இன்னும் ஒரு கோவில் கட்டுவது தேர்தல் வாக்குரிதியாம் என்ன கொடுமையா இது. இந்த கோவிலை படிப்பறிவில் பின்தங்கி இருக்கும் உ பி மக்களுக்கு எதற்கு பயன்பட போகின்றது இந்த கோவில். இதெல்லாம் ஒரு தேர்தல் வாக்குறிதி. எதை நோக்கி சென்று கொண்டிருகின்றது நமது தேசம் மக்களே சிந்திக்க மாடீர்களா?



வியாழன்

கேப்டனுக்கு அனுபவம் இல்லையா..?



சட்ட சபையில் விஜயகாந்த் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது ஒரு கட்சி தலைவருக்கு இருக்க வேண்டிய பொறுமையும் பொறுப்பும் இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகின்றது. சட்டசபை தேர்தலின் பொழுது தமது கட்சி வேட்பாளரை அடித்து விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அந்த செயல் பதட்டமான  பரபரப்பான சூழலில் தமிழ் நாட்டில்  உள்ள அனைத்து கண்களும் அவரையும்  உன்னிப்பாக பார்த்துக் கொண்டு  இருக்கிறது என்பதை உணராமல் நடந்து  கொண்டது அவரின் அரசியல் மற்றும்  பொது வாழ்க்கையில்  அனுபவ மின்மையே என அனைவராலும் கருதப்பட்டது.   ஆனால் வடிவேலின் எதிர் பிரிச்சாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை மக்கள் வரவேற்றார்கள்.

அதன் விளைவாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அவர்களே  எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்தது மட்டும் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பதவியும் கிடைத்தது. பின்பு ஆதிமுகவும் விஜயகாந்த் கட்சிக்கும் இடையில் உள்ளாச்சி மன்ற  தேர்தலில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக  இரண்டு  கட்சிகளும்  கூட்டணியை விட்டு விலகின  இந்த சூழலில்தான் சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்கியது.

சட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது . விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறினார் . சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்கார்ந்தனர். 


சில விநாடிகளில் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுந்தார் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.

இந்தக் காட்சியை அவரது கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் படு அமைதியாக, பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெல்லிய புன்னகையுடன், விஜயகாந்த் மிரட்டுவதையும், ஆளுங்கட்சி பதில் மிரட்டல் விடுப்பதையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் துரைமுருகன் படு பீதி கலந்த முகத்துடன் விஜயகாந்த்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுதான் நடந்தது.

 ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் மக்கள் பிரச்சினையை எடுத்து கூற வேண்டும். அதே நேரத்தில் ஒரு பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டுமென்பது அவருக்கு தெரிய வில்லையோ என்று தோன்றுகிறது.  அதுவே இந்த இடத்தில் கலைஞர் இருந்திருந்தால் அவரின் பதில் இதை விட மோசமாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அவர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது  விளங்கியிருக்காது அதுதான்  கலைஞரின் அனுபவம்.

ஜெயலலிதாவும் அப்படித்தான் நடந்து கொண்டார். அவர்களுடன்  கூட்டணி  வைத்து வெற்றி பெற்று விட்டு இப்பொழுது  அதற்காக வேக்கபடுகின்றோம்  என்று கூறுவது எந்த  விதத்தில் சரியான  பதிலாக இருக்க முடியும். அப்படி  வெக்கப்  படுவதாக இருந்தால்  கூட்டணி வைத்து வெற்றி பெற்று  ஆட்சியில் அமர்ந்ததுக்கும் வேக்கபட வேண்டும்.  ஆட்சியை  கலைத்து விட்டு தனியாக நின்று வெற்றி பெற வேண்டும். அதை  விடுத்து கூட்டணி வைத்து  வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தபிறகு இந்த  வார்த்தையை  கூறுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்.