வியாழன்

கேப்டனுக்கு அனுபவம் இல்லையா..?



சட்ட சபையில் விஜயகாந்த் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது ஒரு கட்சி தலைவருக்கு இருக்க வேண்டிய பொறுமையும் பொறுப்பும் இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகின்றது. சட்டசபை தேர்தலின் பொழுது தமது கட்சி வேட்பாளரை அடித்து விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அந்த செயல் பதட்டமான  பரபரப்பான சூழலில் தமிழ் நாட்டில்  உள்ள அனைத்து கண்களும் அவரையும்  உன்னிப்பாக பார்த்துக் கொண்டு  இருக்கிறது என்பதை உணராமல் நடந்து  கொண்டது அவரின் அரசியல் மற்றும்  பொது வாழ்க்கையில்  அனுபவ மின்மையே என அனைவராலும் கருதப்பட்டது.   ஆனால் வடிவேலின் எதிர் பிரிச்சாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை மக்கள் வரவேற்றார்கள்.

அதன் விளைவாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அவர்களே  எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்தது மட்டும் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பதவியும் கிடைத்தது. பின்பு ஆதிமுகவும் விஜயகாந்த் கட்சிக்கும் இடையில் உள்ளாச்சி மன்ற  தேர்தலில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக  இரண்டு  கட்சிகளும்  கூட்டணியை விட்டு விலகின  இந்த சூழலில்தான் சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்கியது.

சட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது . விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறினார் . சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்கார்ந்தனர். 


சில விநாடிகளில் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுந்தார் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.

இந்தக் காட்சியை அவரது கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் படு அமைதியாக, பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெல்லிய புன்னகையுடன், விஜயகாந்த் மிரட்டுவதையும், ஆளுங்கட்சி பதில் மிரட்டல் விடுப்பதையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் துரைமுருகன் படு பீதி கலந்த முகத்துடன் விஜயகாந்த்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுதான் நடந்தது.

 ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் மக்கள் பிரச்சினையை எடுத்து கூற வேண்டும். அதே நேரத்தில் ஒரு பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டுமென்பது அவருக்கு தெரிய வில்லையோ என்று தோன்றுகிறது.  அதுவே இந்த இடத்தில் கலைஞர் இருந்திருந்தால் அவரின் பதில் இதை விட மோசமாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு அவர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது  விளங்கியிருக்காது அதுதான்  கலைஞரின் அனுபவம்.

ஜெயலலிதாவும் அப்படித்தான் நடந்து கொண்டார். அவர்களுடன்  கூட்டணி  வைத்து வெற்றி பெற்று விட்டு இப்பொழுது  அதற்காக வேக்கபடுகின்றோம்  என்று கூறுவது எந்த  விதத்தில் சரியான  பதிலாக இருக்க முடியும். அப்படி  வெக்கப்  படுவதாக இருந்தால்  கூட்டணி வைத்து வெற்றி பெற்று  ஆட்சியில் அமர்ந்ததுக்கும் வேக்கபட வேண்டும்.  ஆட்சியை  கலைத்து விட்டு தனியாக நின்று வெற்றி பெற வேண்டும். அதை  விடுத்து கூட்டணி வைத்து  வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தபிறகு இந்த  வார்த்தையை  கூறுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்.    

1 கருத்து:

Sankar சொன்னது…

Vijaykanth shown his rage not at the first instance itself. He was driven to that end by the AIADMK members - by using abusive words. A full video which was shown by Doordharan clearly shows this.But they too, stopped the screening by political preasure.

But to the dismay, every media shows the edited second half of the video and photographs only, to gain cheap popularity for themselves. This is the truth.

If we say, what Vijaykanth has done is wrong, what we have to say for the acts of AIADMK members? Why nobody raise their voice against the acts of AIADMK members?

Sankar.

கருத்துரையிடுக