வியாழன்

கொல்லிமலை ரகசியம்


மலைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை. இதனை நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.


மலச்சிக்கல்

தீரமலச்சிக்கலும், மனச் சிக்கலும் ஆதிநோய்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். பொதுவாக மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் வரும். மனச் சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் கூடவே வரும். இப்படி மனச்சிக்கலும், மலச்சிக்கலும்தான் நோய்களின் வாசலாக உள்ளன. மலச்சிக்கலைத் தீர்ப்பது மிக அவசியம். நிலவாகை இலையை எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து இரவு உணவுக்குப்பின் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இளக்கி வெளியே தள்ளும். நாள்பட்ட மலத்தையும் வெளியேற்றும்.


குடல் சுத்தமாக

நாம் உண்ணும் உணவில் சில கிருமிகள் உட்சென்று குடல் பகுதியில் தங்கிவிடுகின்றன. இதனால் குடலில் உட்பகுதிகளில் உள்ள குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல் புண்களை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரண சக்தி குறைந்து உடல் வலுவிழக்கின்றது. இக்குறையை போக்க நிலவாகையிலையை காயவைத்து பொடி செய்து அதில் தேன் கலந்து காலையும், இரவும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். மேலும் குடல் பூச்சிகளை நீக்கி குடல் சுவர்களை பலப்படுத்தி சீரண சக்தியைத் தூண்டும்.

கண் பார்வைக் கோளாறு நீங்க

பித்த அதிகரிப்பினால் சிலருக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க நிலவாகை இலையை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மேக நோய்கள் குணமாக

மேக நோயானது மனித இனத்தையே ஆட்டிப் படைக்கின்றது. இந்த நோயின் தாக்குதலிலிருந்து விடுபட நிலவாகை கஷாயம் பயன்படுகிறது.


வாயுத் தொல்லைகள் நீங்க

நிலவாகையின் வேருடன் பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சொறி சிரங்கு மாற

உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலின் வழியாகத்தான் தெரியவரும். இதனால் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சொறி, சிரங்கு ஏற்படுகிறது. இதற்கு நிலவாகை இலையை எடுத்து அரைத்து சொறி, சிரங்கின் மீது தடவினால் சிரங்கு விரைவில் குணமாகும்.

அஜீரணக் கோளாறு நீங்க

நிலவாகை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நீர்ப்பெருக்கியாகவும் நிலவாகை பயன் படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக