பொது நலன்.மதவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது நலன்.மதவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன்

விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா?


சர்ச்சை நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம்கள் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடை விதிற்கும் அளவுக்கு சென்றுள்ளதும் அனைவரும் அறிந்த விடயம்தான்.  .எப்பொழுதுமே கமல் தனது படங்களில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்தும் கேலிசெய்வது போன்ற காட்சி அமைப்பது நாம் அறியாத ஒன்றல்ல.

சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். கமலஹாசன் தான் விரும்பியதை திரைப்படமாக எடுப்பதில் தவறு இல்லை. இது ஜனநாயக நாடு இங்கு ஒருவர் தனது கருத்தை திரைப்படமாக எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அதை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்றெல்லாம் சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று புலம்புகின்றவர்கள் ஒன்றை மனதில் வைத்துகொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது என்ன அதற்கான அளவுகோல் என்ன என்பதை விளங்க வேண்டும். நமது ஊரில் பொதுவாக சுதந்திரத்தைப் பற்றி ஒன்றை சொல்லுவார்கள். அதாவது நமது சுதந்திரத்தின் எல்லை கோடு எதுவரை என்றால் நாம் நமது கையை நீட்டினால் நமக்கு எதிரில் இருக்கும் நபரின் மூக்கு நுனி வரை நமது சுதந்திரம் நமக்கு உண்டு. நமது கை நமக்கு முன்பிருக்கும் நபரின் மூக்கு நுனியில் பட்டுவிட்டால் நாம் அவரின் சுதந்திரதில் கை வைத்து விட்டோம் என்று பொருள். அது போல கமல் தனது கருத்தை சொல்லலாம் எதுவரை என்றால் முஸ்லீம்களின் மூக்கு நுனி மீது கமலின் கை படும் வரை. முஸ்லீம்கள் கமல் நீட்டிய கை எங்கள் மூக்கு நுனியில் படுகின்றது ஆகவே கமலஹாசன் தனது கையை மடக்கி கொள்ள வேண்டும் என கூறுகின்றார்கள். இது எந்த வகையில் கமலின்  கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

கமலஹாசன் அவர் எடுக்கும்  திரைப்படங்களில்  தன்னை பற்றி எதுவேண்டு மென்றாலும் சொல்லலாம் அது  அவர் கருத்து சுதந்திரம். தான்  நாத்திகன் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை  என சொல்வது அவர் உரிமை. அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் பைதியகார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா. அது போல தாங்கள் திரைப்படம் எடுக்கலாம் தவறு இல்லை அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேறு ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை  ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

கமல் தான் விரும்பிய அனைத்தையும் சொல்லும் உரிமை  இருக்கிறது. அது எதுவரை என்றால் மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வரை  மட்டுமே. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் இதை புரிந்து  கொள்ள வேண்டும்.  

ஞாயிறு

மாலேகான் குண்டு வெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பங்கும் .!

இந்த நாட்டில் நடக்கும் அத்துணை குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று ஓயாமல் ஊளையிடும் அனைவரும் கீழ்காணும் இந்த செய்திக்கு  என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது

டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 

அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. 

நன்றி: ஒன் இந்தியா.காம்   

புதன்

அபாய எச்சரிக்கை..!



இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்து இருக்கின்றது.


மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.


சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன.

 செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.



ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டது.


இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.



அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இப்படி அணு உலை நிறுவியதால் அவர்கள் அதன் விளைவை இன்று அறுவடை செய்துகொண்டு இருகின்றார்கள். ஆனால் நமது அரசு அணு உலை பாதுகாப்பானது என ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறது.  அவர்களுக்கு  துணையாக சில ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. அணு உலையால் எவ்வளவு நன்மை இருக்கின்றதோ அதை விட  அதானால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம்.இது மக்களுக்கான அபாய எச்சரிக்கை. மக்களே சிந்திக்க தவறாதீர்கள்.  

ஞாயிறு

அத்வானியின் ராமர் கோவில் ஆசை -இதுவல்லவோ லட்சியம்..!




இந்த மதவாதிகளுக்கு நாடு அமைதியாக இருந்தால் சுத்தமாக பிடிக்காது போலிருகிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டுவதுதான் தமது லட்சியம் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி, பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் என்று கூறியுள்ளார். என்னே ஒரு லட்சியம்! நாட்டுல மக்களுக்கு செய்ய வேற ஒன்றுமே இல்லை போல!

இதற்கான நேரம் விரைவில் வரவேண்டும் என்று ராமர் பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்கள் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு என்ன தான் பிரச்சினைன்னு தெரியல எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகின்றதோ அப்பொழுது இந்த ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டியது. இதை காரணமாக வைத்து கொண்டு ஒட்டு பொறுக்கிவிட்டு மக்கள் மனதில் நஞ்சையும் விதத்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை விட பலமடங்கு அதிகமாக பணத்தை ஊழல் செய்து சம்பாதிக்க சென்று விடுவது தான் இவர்களின் வாடிக்கையாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் தேர்தலின் பொழுது சொன்ன வார்த்தைகளை உண்மை என்று நம்பி மக்கள் மாற்று மதத்தினருடன் பகைமையை எனும் தீயை வளர்த்து கொண்டு நிம்மதியில்லாமல் சண்டையிட்டு கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசியல் வியாதிகள் அந்த தீயில் நன்றாக குளிர் காய்ந்துகொண்டு இருப்பார்கள்.

ராமர் கோவிலை அத்வானி மட்டுமல்ல அவருடைய பேரபிள்ளைகள் அரசியலுக்கு வந்தாலும் கட்ட மாட்டார்கள். ராமர் கோவிலை கட்டி விட்டால் அவர்களுக்கு அரசியல் பிழைப்பு நடத்த வழி இருக்காது. இந்த மத பிரச்சினை என்னும் தீ எரிந்து கொண்டே இருந்தால் தான் அவர்கள் அரசியல் வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.


இந்த கோவில் கட்டி விட்டால் இந்த நாட்டில் தேனாறும் பாலாரும் ஓடிவிடுமா என்ன? நாட்டின் வருமைகோடு அழிந்துவிடுமா? இந்த கோவிலால் நாட்டு மக்களுக்கு என்ன நடந்து விட போகின்றது. நாட்டில் இருகின்ற கோவில் போதாதா இன்னும் ஒரு கோவில் கட்டுவது தேர்தல் வாக்குரிதியாம் என்ன கொடுமையா இது. இந்த கோவிலை படிப்பறிவில் பின்தங்கி இருக்கும் உ பி மக்களுக்கு எதற்கு பயன்பட போகின்றது இந்த கோவில். இதெல்லாம் ஒரு தேர்தல் வாக்குறிதி. எதை நோக்கி சென்று கொண்டிருகின்றது நமது தேசம் மக்களே சிந்திக்க மாடீர்களா?