செவ்வாய்

கலைஞரின் அதிரடி




ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது என தெரிவித்தார்.மேலும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் திமுக மத்திய அமைச்சர்கள் இன்றே பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக அவர் காரணம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார்கள் என்று கூறினார் கருணாநிதி.

மொத்தம் 18 உறுப்பினர்கள் ஐமுகூவில் திமுக சார்பாக இருப்பதால் தற்போதைய விலகல் அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றன.