அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு

கேள்விக் குறியான மக்களாட்சி..!

ஒரு மக்களாட்சி நடை பெரும் நாட்டில் அந்த நாட்டை ஆளும் அரசு எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளையும் அன்நாட்டு குடிமக்கள் அனைவரும் ஆதரித்து ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. அப்படி கட்டாய படுத்தினால் அது ஜனனாயக நாடாக இருக்க முடியாது. அரசு எடுத்த முடிவு நல்லதாக அந்த மக்களுக்கு தெரிந்தால் ஆதரிக்கலாம். அது அந்த மக்களுக்கு தவறாக தெரிந்தால் அதை எதிர்த்து போராடலாம். அந்த போராட்டத்துக்கான அலவு கோல் என்பது வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் உன்னாவிரதம், பேரணி, கண்டன ஆர்ப்பட்டங்கள் இப்படி எந்த முறையில் வேண்டுமானாலும் போராடலாம். அவர்கள் வன்முரையில் மட்டும் இறங்க கூடாது. இதுதான் மக்களட்சி தத்துவத்தின் ஆனிவேர். வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதை இந்திய அரசியல் சாசன சட்டமும் உறுதி படுத்துகின்றது.



ஒரு சாரார் கூடங்குளத்தில் அனு உலையை எதிர்த்து போராடுகின்றனர். மற்றொரு சாரார் அனு உலை பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். அனு உலை பாதுகாப்பானதா இல்லையா என்பது நமக்கு தேவையில்லை. அதை பற்றி விவாதிக்க வேண்டாம். இந்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதை எதிர்த்து போராட அவர்களுக்கு உரிமையுள்ளது. எதுவரை என்றால் அவர்கள் வன்முரையில் இறங்காது இருக்கும் வரை. அவர்களின் போராட்டம் என்பது அவர்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்க அரசுக்கும் காவல் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் நான் கண்ட வரையில் இந்து முன்னயினர் மற்றும் காங்கிரஸ் காரர்களால் மாவட்ட ஆட்சியர் அழுவலகம் முன்பு அவர்கள் தாக்கப்பட்டது தவிற அவர்களின் போராட்டத்தில் கடந்த ஏழு மாதமாக எந்த வன்முறையும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

 

அப்படி இருக்கும் பொழுது கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல் துறை மற்றும் துனை ரானுவமும் அந்த பகுதியில் முகமிட்டு 144 தடை உத்தரவு பிரபித்துள்ளது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும். அந்த மக்களுக்கு உனவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருற்கள் கிடைக்காமல் தடை செய்து இருப்பதை பார்க்கும் பொழுது இது ஜனனாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற ஐயம் எழுகின்றது. மக்கள் அறவழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை அரசு காவல் துறையை ஏவி அடக்க முற்படுவது ஜனாயகம் என்ற அமைப்பை குழி தோண்டி புதைப்பதை போல் உள்ளது.



ஆளும் அரசின் ஜனனாயகத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் இந்த செயலை கண்டித்து எந்த அரசியல் கட்சியும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க வில்லை என்பதுதான் உச்ச கட்ட கொடுமை. போராட்ட காரர்கள் அனு உலையை எதிர்த்து போராடுவது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த போராட்டத்தை இப்படி அரசு ஒடுக்க நினைப்பது மக்களாட்ட்சி தத்துவத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனம் ஆகி விடாதா? இது மக்களாட்சி என்ற பதத்தை பதம் பார்த்து விடாதா? அந்த மக்களின் போராட்டம் தவறு. அனு உலையை துவங்கினால்தான் மின் பற்றா குறையை சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனு உலை தேவையானது என்று அரசு கருதும் பட்சத்தில் அதை மக்களுக்கு புறிய வைப்பது அரசின் கடமை. மக்களுக்கு தெளிவாக அனு உலையால் எற்படும் நன்மைகளை அந்த மக்களுக்கு தெரியபடுத்தி அனு உலைபாதுகாப்பானது என்பதை அந்த மக்களும் நிருபித்து அந்த மக்களின் அச்சைத்தை போக்க வேண்டும் அதை விடுத்து காவல் துறையை ஏவி போராட்டைத்தை ஒடுக்குவது மக்களாட்சி என்ற ததுவத்தை குழி தோண்டி புதைபதற்க்கு சமம்.







புதன்

அபாய எச்சரிக்கை..!



இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்து இருக்கின்றது.


மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.


சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன.

 செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.



ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டது.


இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.



அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இப்படி அணு உலை நிறுவியதால் அவர்கள் அதன் விளைவை இன்று அறுவடை செய்துகொண்டு இருகின்றார்கள். ஆனால் நமது அரசு அணு உலை பாதுகாப்பானது என ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறது.  அவர்களுக்கு  துணையாக சில ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. அணு உலையால் எவ்வளவு நன்மை இருக்கின்றதோ அதை விட  அதானால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம்.இது மக்களுக்கான அபாய எச்சரிக்கை. மக்களே சிந்திக்க தவறாதீர்கள்.  

ஞாயிறு

கூடான்குளமும் அமெரிக்க பணமும்..!






கூடாங்குளம் அனு மின் நிலயத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்பவருக்கு அமேரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் செயல் படும் சில அமைப்புகள் மூலமாக பணம் வருகிரது என்று கூறி இருப்பது யாரோ சாமானியனின் கூற்று அல்ல இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் பத்திரிக்கையாளர்களுக்கு முன் மேற்க்கண்டவாறு கூறியுள்ளார்.

தங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பிரதமர் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் அதை பிரதமர் அவர்கள் நிருபிக்க வேண்டும். என்றும் அவ்வாறு நிருபிக்க வில்லையெனில் பிரதமர் மற்றும் அமைச்சர் நாராயன சாமி மீதும் வழக்கு போடுவேன் என்றும் உதயகுமார் கூரியுள்ளார்.இந்த நிலையில் ரஷ்ய தூதர் தாங்கள் நினைத்தது போல இந்த போராட்டதிற்கு பின்னால் அமேரிக்கவின் கை உள்ளது என்பது இந்திய பிரதமரின் அரிக்கை மூலம் நிருபனமாகியுள்ளது என கூரியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அமேரிக்காவில் இருந்து பனம் வந்துள்ளது என கூறுவது யாரோ ஒரு சாமனியனோ அல்லது தினமலர் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையோ அல்ல இந்தியாவின் பிரதமர்.இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் படைத்தை பாரத பிரதமர். இந்தியாவில் அரசுக்கு எதிராக போராடும் சிலருக்கு அமேரிக்காவில் இருந்து பனம் வருகின்றது என்பதை தெரிந்து இருக்கும் பொழுது அதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி உதயகுமாரை கைத்து செய்து நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து அவருக்கு தண்டனை வாங்கி தருவது ஒரு நாட்டின் அரசுக்கும் அந்த அரசை வழி நடத்தும் பிரதமருக்கும் பெரிய விசயமல்ல அதை விடுத்து ஒரு சிறு பிள்ளை செய்வது போல அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பிரதமர் சுய நினைவோடுதான் இருக்கின்றாரா என்ற என்னம் எழுகின்றது.


கூடங்குளத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பனம் கொடுப்பதாக ஒரு செய்தி உலவிகொண்டு உள்ளது. அதே நேரத்தில் கூட்டம் கூட்ட வேண்டுமென்றால் பனம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது சாத்தியம். ஆனால் ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு மக்களை பனம் கொடுத்து கூட்டுவது என்பது இயலாத காரியம். மக்களுக்கு உன்மையில் அரசின் நடவடிக்கை பிடிக்காத பிடிக்காத நிலை இருந்தால் தான் பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் போராட முன்வருவார்கள்.ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராடினால் என்ன என்ன பின்விளவுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது நாட்டின் அரசங்கத்தை எதிர்த்து போராட கூலிக்கு பனம் பெருபவர்கள் வருவார்களா என்பது ஐய்யமே.

அமேரிக்கவில் இருந்து பணம் பெற்று இருப்பதாக கூறப்படும் உதய குமார் என்பவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதை விடுத்து. இவ்வாறு நடந்துள்ளது என பத்திரிக்கைகளுக்கு கூறுவதன் நோக்கம் போராடும் மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதாக இருக்குமோ என்ற ஐய்யம் எழுவதை தவிற்க முடியவில்லை. உதயகுமார் என்பவர் தம்மீது பொய்யான குற்றச் சாட்டு சுமத்தப்படுள்ளது அதை நிறுபிக்க வில்லயெனில் பிரதமர் மீது அவதூறு வழக்கு போடுவேன் என்று கூறியும் அவர் குற்றத்தை நிறுபிக்க எந்த நடவடிக்கயும் எடுத்ததாக தெரியவில்லை. உன்மையில் இந்த போராட்டத்திற்கு அமேரிக்கவில் இருந்து பனம் வந்ததா? அல்லது மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதற்காகவா?

திங்கள்

தீவிரவாதம் அதிகரிக்க யார் காரனம?



இன்றய கால கடத்தில் ஒவொறு நாடும் தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மின் தேவைக்காக யுரோனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதில் எந்த நாட்டையும் நாம் குறை கூற முடியாது. அப்படி குறை கூறுவதாக இருந்தால் இந்தியாவும் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி அனு சோதனை நடதியது. அமெரிக்காவும் அமெரிக்கவின் அல்லக்கை நாடுகலும் பொருளாதார தடை வித்திதது.


அனு உலை வேண்டுமா வேண்டாமா என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இருந்தாலும் நாம் இந்தியா அனு சோதனை நடத்தியதை தவறு என்று சொல்ல முடியாது. அது நமது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்பதால் நாம் அதை ஆதரித்துதான் ஆகவேண்டும். நமது நாட்டை சுற்றி இருக்கும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நமது பலத்தை காட்டி அவர்களுக்கு ஒரு அச்சைதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் அனு சோதனை நடத்டினோம் என்பதை மறுக்க முடியாது. நம் மீது பொருளாதர தடை வித்தித அமெரிக்க மற்றும் அதன் அல்லக்கை நாடுகலும் அனு ஆயுததை தயாரித்து வைத்துக்கொண்டும் யுரோனியத்தை செறிவூட்டும் பனியில் ஈடுபடுக்கொண்டே தான் நம் மீது பொருளாதார தடை விதித்தன.

இப்பொழுது ஈரான் யுரோனியத்தை செறிவூட்டுவதை அமேரிக்கா எதிர்கின்றது. ஈரான் அனு ஆயுத சோதனை நடத்துவது அந்த நாட்டின் உரிமை அதை சோதனை நடத்த கூடாதென்று சொல்ல அமெரிகாவுக்கு என்ன உரிமை இருகின்றது. ஈரான் அனு சோதனை நடதியது அனு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல மின்சாரம் தயாரிக்கதான் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அந்த நாடு மின்சாரம் தயாரிதால் என்ன அனு ஆயுதம் தயாரித்தால் என்ன அது அந்த நாட்டின் உரிமை. அனு ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அமேரிக்கா அனுவை செரிவூட்டுவதை கண்டிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஈரான் அனுவை செரிவூட்டுகின்றதென்றால் அதன் அண்டை நாடான இஸ்ரேல் அனு ஆயுதம் வைத்துள்ளது

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சினை இருந்து வருவது உலகரிந்த விசயம் அப்படி இருக்கும் பொழுது தனது எதிரி நாடு பலமான ஆயுதம் வைத்திருக்கும் பொழுது ஈரானும் தனுது ரானுவத்தை பலபடுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்படி இருக்கும் பொழுது அமெரிக்கா எப்படி ஒரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறிக்கொண்டு மற்றொரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

இப்படிதான் ஈராக்கும் பயங்கரமான ஆயுதம் வைத்திருகின்றது என்று கூறி அதன் மீது போர் தொடுத்தது. ஈராக் அயுதம் வைத்திருப்பது பெரிய குற்றமா அப்படி பார்த்தால் உலகில் உள்ள ஆயுதத்தில் எழுபது சதவிகிதம் வைத்திருக்கும் அமெரிக்கவுக்கு என்ன தண்டனை கொடுப்பது. சரி ஈராக் ஆயுதம் வைத்தைருந்தது என்ற காரனத்தை கூறித்தானே போர் தொடுத்தது. அப்படி என்ன ஆயுதத்தை ஈராக்கில் கண்டு பிடித்தது. லட்ச்சக் கனக்கான மக்களை கொன்று குவித்ததை தவிர அங்கு என்ன ஆயுத்ததை கண்டு பிடித்தது. எத்தைனை மக்கள் கை கால்களை இழந்து ஊனமானார்கள் இதற்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகின்றது. இபொழுத்து என்னவென்றால் ஈரான் அனு ஆயுதம் வைத்திப்பதாக கூறிக்கொண்டு அந்த நாட்டின் அருகாமையில் தனது அனு ஆயுத போர்கப்பலை நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது போர்தொடுத்தால் அதனால் பாதிக்க போவது அப்பாவி மக்கள்தான். இப்படி ஒரு நாட்டின் மீது அனியாயமாக போர் தொடுத்தால் அதனால் பாதிக்கபட்ட மக்கள் சொந்த பந்தங்களை இழந்த மக்கள் தங்களின் எதிரிப்பை காட்ட ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள். பலம் வாய்ந்த அமெரிக்காவை நேரடியாயக தாகமுடியாதென்பதால் பொது இடத்தில் குண்டு வைக்கதான் செய்வார்கள் போரால் பாதிக்க பட்ட மக்களின் உனர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் போரின் பாதிப்பை அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அது தான் ஈராக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது. தீவிரவாதிகள் தானாக முலைப்பதிலை. ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு இனத்தின் மீதோ அனியாயமாக தாக்குதல் நடத்துவதன் மூலம் தீவிரவாதத்தை விதைக்கின்றனர். (அதற்காக ஆயுதத்தை கையிலெடுத்து அப்பாவி மக்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு நான் சொல்ல வருவது அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்த திவிரவாதம் என்னும் உயிர் கொல்லி இன்று நம் கலுத்திற்கு மேல் கத்தியாக தொங்கிகொண்டு இருக்கின்றது.)

தீவிரவாதத்தை உருவாக்குவதில் அமெரிகாவிற்குதான் முதல் இடம். இந்த லட்ச்சனதில் தீவிரவாததை ஒடுக்குவத்துதான் அமெரிக்க அரசின் குறிக்கோளாம் ஒபாமா வாய் கூசாம் கூறிக்கொண்டு இருக்கின்றார். இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டி இருக்கின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அனு ஆயுத சோதனை நடத்தும் பொழுது அமெரிக்கா இப்படி போர் தொடுக்கவில்லை.ஆனால் ஈரான் மீது மட்டும் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராவது அனு ஆயுதம் தயாரிப்பதை எதிர்பதற்க்காக அல்ல. அந்த நாட்டின் என்னை வளத்தை கைபற்ற தான் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலில் அருபது சதவிகிதம் ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்குமேயானால் இந்தியாவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் அதானால் நமது மக்கள் நேரடியாகவே பாதிக்க படுவார்கள். இப்படி அனியாயம் செய்யும் இந்த அமெரிக்க புனைக்கு மனி கட்டுபவர் யார்?

இந்த நேரத்தில் நாம் மற்றொரு விடயத்தையும் உற்று நோக்க வேண்டி உள்ளது. ஈரான் அணு சோதனை நடத்திய இந்த நேரத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும் அது ஈரானுக்கும் தெரியாமல் இல்லை. இந்த சூழலில் இருக்கும் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டை பகைத்து கொள்ள விரும்பாது. அப்படி இருக்கு பொழுது ஈரான் எப்படி இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் இந்தியாவிலும் தாய்லாந்திலும் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியா அரசு ஈரான் மீது போர்தொடுக்க ஆதரவு தரமாட்டார்கள் என்பதை அறிந்த அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் வேலைதான் இந்த இஸ்ரேல் அதிகாரிகள் மேல் தாக்குதலுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஆனால் வழக்கம் போல இந்திய ஊடகங்கள் "இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் ஈரான் தீவிர வாதிகள் தாக்குதல்" என்று செய்தி வெளியிடுகின்றன. உலக அலவில் இன்று நடத்த படும் பெரும்பாலான தாக்குதலுக்கு பின்னால் இப்படிப்பட்ட உளவுத்துறையின் பங்கு இல்லாமல் இல்லை, ஆனால் ஒவொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு அப்பாவி மேல் வழக்கை போட்டு அவர்களின் வாழ்கையை வீணாக்கும் நடவடிக் கைகளில் அனைத்து நாட்டு காவல் துறை ஈடுபடுவதையும் மறுக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்க யார் திவிரவாதி அப்பாவி மக்களை அனியாயமாக கொன்று குவிக்கும் அமெரிக்காவா அல்லது இழந்த உரிமயை மீட்க்க போராடும் அப்பாவி மக்களா?

வியாழன்

அணு உலை அணு உலைன்னு கடுபேத்துராங்க மை லார்ட்..!


அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். இந்தியாவில் அணு உலை அமைப்பது பாதுகாப்பானதா என்பதை மட்டும் நாம் பார்ப்போம். நமது நாடு ஊழல் நிறைந்த நாடு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை .


உதாரணமாக போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசுமே காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள் முழுமை யாக அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன. அதுமட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

விச வாயு கசிவுக்கு ஆளான யூனியன் கார்பைடு ஆலையை டவ் நிறுவனம் வாங்கி நடத்தி கொண்டுதான் இருக்கின்றது. நம்மால் என்ன செய்ய முடிந்தது. அல்லது நமது ஆட்சியாளர்கள் தான் என்ன செய்தார்கள். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டது எந்த அரசியல் தலைவரும் அல்ல எல்லோரும் அப்பாவி மக்கள் தான். அப்பாவி மக்கள் பாதிக்க பட்டால் அதர்க்காக இந்த நாட்டில் யார் கவலை பட போகின்றார்கள். அவர்கள் ஆடு மாடு போன்றவர்கள் கேக்க நாதியற்றவர்களாய் கோடிகணக்கில் இருகின்றார்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைத்துவிட்டார்கள்.

நடந்த ஒரு விபத்திற்கே இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்னும் முடிவு தெரிய வில்லை. இந்த லட்சணத்தில் அணு உலை அமைக்க சர்வதேச ஒப்பந்தமாம். கடுபேத்துராங்க மைலார்ட்.

தானே புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு நிவரனபநிகளை முடிக்கிவிடவே நமது முதல்வருக்கு நேரம் இல்லை. கருணாநிதி பாதிக்க பட்ட மக்களை காண போகின்றார் என்ற அறிவிப்பு வந்ததும். அவர் மக்களை சந்தித்து நல்ல பெயர் எடுத்து விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் பறந்து வந்து கடமைக்கு சிலரை ஒரு திருமண மண்டபத்திற்கு வரவைத்து பார்த்து விட்டு கிளம்பிவிட்டார். புயல் தாகி இருபத்தி ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையாக மின்சாரம் தரப்படவில்லை.

இந்த லட்சணத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும். நீங்களே சிந்தித்து பாருங்கள்.முதல்வர் எங்கே விபத்துனடந்த பகுதிக்கு சென்றால் கதிர்வீச்சு நம்மையும் பாத்திது விடும் என்று பயந்து போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அறிக்கை கொடுப்பார். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க மத்திய அரசும் கருணாநிதியும் தான் காரணம். பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு ஐந்து லட்சம்கோடி நிதி உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற வகையில் அந்த அறிக்கை இருக்கும். நமது ஆட்சியாளர்களின் லட்சணம் இதுதான் இவர்களை நம்பி எப்படி நாம் அணு உலை அமைக்க முடியும். இங்கு அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்ததாகவே உள்ளது.

இந்தியாவில் அரசு நிறுவனங்களில் அடிமட்டத்தில் இருந்து ஆட்சியாளர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தியாவில் எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. உச்சநீதிமன்றமே அரசு அலுவலகத்தில் ஒவொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம் என்பதை அரசே அறிவித்து விட்டால் மக்கள் சிரமம் இல்லாமல் அந்த தொகையை செலுத்திவிட ஏதுவாக இருக்கும் என்று நய்யாண்டி செய்யும் அளவில் நமது ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்.

அணு உலை அமைப்பதற்கு முன்னாள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குங்கள் பிறகு அணு உலைகளை உருவாக்கலாம்.