சனி

தமிழ் நாட்டை தலை கீழாக மாற்றிய தானே..!


ஒரு வழியாக தானே புயல் கரைய கடந்திருச்சி, இந்த வருடத்தின் முதலும் கடைசியுமா இந்த புயல் வந்திருக்கு. ஏற்கனவே பெய்த மழையால ரோடு எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு இந்த நேரத்துல்ல தானேவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான். இத அரசு எந்திரம் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரியல.  



இந்த புயல் குறித்து ஏகப்பட்ட பில்டப்புகள மீடியா ஏத்தி விட்டுருச்சி   அதுமட்டும் இல்லாம வானிலை அறிக்கை வேற முரண்பட்ட தகவல்கள கொடுத்துக்கிட்டே  இருந்தாங்க. முதல்ல சென்னைக்கும் விசாக பட்டினத்துக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னாங்க. அப்புறம் நாகைக்கும் சென்னைக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னங்க. பிறகு புயல் கரைய கடக்கும் போது வலுவிலந்திரும்னு சொன்னங்க. ஒருவழியா நேத்து காலைல சென்னைக்கும் கடலூர்கும் இடைல கரைய கடந்து விட்டது.



இதனிடையே புயல் அப்டேட் குடுத்தாங்க பாருங்க புயல் 575 கிலோமீட்டர் தூரத்தல இருக்கு 300 க்கு வந்திருச்சி 200 ,100 , 50 , 10 , 5 , 1 , ௦, ஸ்டார்ட் அப்படின்னு கவுண்டவுன் வேற.






 என்ன இருந்தாலும் இந்த புயல் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதிகள பொரட்டி தான் போட்டு விட்டது. பல இடங்கல்ல கரண்ட் இல்ல, கைபேசி இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது. கூரை ஓடு வீடுகளெல்லாம்  புயல் காத்துல ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பா விவசாயிகள் ரொம்பவே பாதிக்க பட்டுளார்கள். 






தை மாச அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர் எல்லாம் காத்துல சாஞ்சி நீர்ல மூழ்கிடுச்சி இதனால விவசாயம் கடுமையா பாதிக்க பட்டிருகின்றது. வழக்கம் போல மத்திய மாநில அரசுகளின் வெல்ல சோதனை  குழு வந்து பார்வையிடும் பின் நிவாரணம் வழங்கும். 






மாநில அரசு வழக்கம் போல மத்திய அரசு கொடுத்த நிவாரணம் போதுமானதாக இல்லைன்னு அறிக்கை விடும். இது கால காலமா நடக்குற சம்பிரதாய அறிக்கைதான். பின்பு இதுவும் கடந்து போகும் மக்கள் வழக்கம் போல இதையும் மறந்துடுவாங்க.


எது எப்படியோ புயலால் பாதிக்க பட்ட பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாளாகும்னு தான் தோணுது. ஏன்னா இந்த புயலோட பாதிப்பு அப்படி.      


சிம்புவின் கொலவெறி...!


மக்களே.! மக்களின் மக்களை...!  தனுசின் கொல வெறி பாட்டுக்கு போட்டியா நம்ம ஒஸ்தி சிம்பு வெளியிட்டு இருக்கும் இந்த பாட்டு தனுஷின் கொலைவெறி பாடல் அளவு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பாப்போம்.

தணுஷே கொல வெறி பாடல் இந்த அளவு வெற்றி பேரும்னு எதிர் பார்த்திருக்க மாட்டார். இணையதில பார்த்தா ஏகப்பட்ட கொல வெறி ரீமிக்ஸ் வந்துகிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம ஜப்பான் அதிபர் மற்றும் நம்ம மன்மோகன் சிங் கூட நம்ம தனுஷ் விருந்து உண்ணுகின்ற அளவுக்கு தனுஷுக்கு வாய்ப்பு இந்த பாட்டு ஏற்ட்படுதி குடுத்திருக்கு.

இந்த நேரத்துல இன்னொரு விசயத்த உங்களோட்ட பகிர்ந்துக்க நெனைக்கிறேன். துள்ளுவதோ இளமை படம் வரும்போது தனுசுன்னு ஒரு நடிகர் இந்தளவு வருவார்ன்னு நான் நேனைகல  நீங்களும் நெனச்சி இருக்க மாடீங்கன்னு நம்புறேன்.




தனுஷுக்கு ரொம்ப நல்ல நேரம் இருக்குது போல, ஏன்னா துள்ளுவதோ இளமைக்கு அப்புறம் காதல் கொண்டேன் அப்படின்ற படம் வந்துச்சி அந்த படத்துக்கு ஏனோ அவரோட உடல் அமைப்புக்கு ஒத்து போய்டுச்சி,  அதனால படம் சூப்பர் ஹிட், அந்த படம் தான் நமக்கு தனுஸ் யாருன்னு அறிமுக படித்தியது அது மட்டும் இல்லாம சேல்வ ராவகன்ர ஒரு நல்ல இயக்குனரையும் அறிமுபடித்தியது (அவர்  நல்ல இயக்குனர்தான்றதுல  மத்தவங்களுக்கு மாற்று கருது இருக்கலாம் ஆனால் இது என்னுடைய பார்வை).   

   



அதுக்காக தனுஸ் நடிச்சது எல்லாம் ரொம்ப நல்ல படம்னு சொல்லமுடியாது, ஏன்னா உங்களுக்கே தெரியும் புதுகோட்டையிலர்ந்து சரவணன், சுள்ளான், (இந்த படங்கள பத்தி இப்ப நெனைச்சாலும் முடியல ) போன்ற படங்கள நல்ல படம்ன்னு சொல்ல முடியாது. அதுக்கு அப்புறம் தனுஸ் தனக்கு எந்த மாதிரி படங்கள் சரி வரும் அப்படின்றத ரொம்ப சரியா முடிவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டும் இல்லாம நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட மருமகன் அப்படின்ற பெரும் அவர் வளர்ச்சிக்கு உருதுனையா இருந்திச்சி (தமிழ் நாட்ல இருக்குறவங்களுக்கு தெரியாது. நார்த் இந்தியா இருகின்றவர்களுக்கு தனுச்ன்னு சொன்னா யாருக்கும்  தெரியாது ரஜினி மருமகன்னு சொன்னா தான் தெரியும் ).






அந்த நடிகரோட நடிப்புல வந்த ஆடுகளம் மூலமாக தான் ஒரு சிறந்த நடிகன்னு நிருபிச்சி தேசிய விருது வாங்கினாரு, இப்ப கொல வெறி மூலமா மன்மோகன் சிங் கூட விருந்து சாப்பிடும் அளவுக்கு வளர்ந்திருக்காறு வாழ்த்துக்கள் தனுஷ்.

நம்ம சிம்பு என்னடான்னா இவரும்  ஒரு பாட்டு வெளியிற்றுகாரு அது என்ன பாட்டுன்னு நீங்களே பாருங்க,   


அதுக்காக சிம்பு நல்ல நடிகர் இல்லன்னு சொல்ல முடியாது. ஆனால் அவருக்கு வாயிலையும் கையிலயும் சனி உக்கார்ந்து  இருக்கு அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்தா சிம்புவும் நல்ல நடிகரா வர வாய்ப்பு உள்ளது (பவர் ஸ்டார், ரித்தீஷ் போன்ற பல நடிகர்கள உச்சாணி கொம்புக்கு கொண்டுபோன சினிமா உலகம் நம்ம சிம்புவ மட்டும் கை விட்றுமா என்ன)

டிஸ்கி:   தனுஷ புகழ்ந்து பதுவு போடறதால என்ன தனுஷ் ரசிகன்னு நெனசிட வேண்டாம். சுள்ளான் படம் பார்த்து தனுஷ் மேல கொலவேரியான ஆயிரகனக்கனங்கவல்ல நானும் ஒருவன்



திங்கள்

ஜெ. வரலாறு காணாத அதிரடி..!

அதிமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை முதல்வர் ஜெயலலிதா இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார்.




தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரப்பியுள்ளது.



முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,



அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, எம்.நடராஜன் (சசியின் கணவர்), வி.என்.சுதாகரன் (சசியின் அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசியின் அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசியின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசியின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசியின் உறவினர்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.



இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.