ஒரு வழியாக தானே புயல் கரைய கடந்திருச்சி, இந்த வருடத்தின் முதலும் கடைசியுமா இந்த புயல் வந்திருக்கு. ஏற்கனவே பெய்த மழையால ரோடு எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு இந்த நேரத்துல்ல தானேவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான். இத அரசு எந்திரம் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரியல.
இந்த புயல் குறித்து ஏகப்பட்ட பில்டப்புகள மீடியா ஏத்தி விட்டுருச்சி அதுமட்டும் இல்லாம வானிலை அறிக்கை வேற முரண்பட்ட தகவல்கள கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. முதல்ல சென்னைக்கும் விசாக பட்டினத்துக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னாங்க. அப்புறம் நாகைக்கும் சென்னைக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னங்க. பிறகு புயல் கரைய கடக்கும் போது வலுவிலந்திரும்னு சொன்னங்க. ஒருவழியா நேத்து காலைல சென்னைக்கும் கடலூர்கும் இடைல கரைய கடந்து விட்டது.
இதனிடையே புயல் அப்டேட் குடுத்தாங்க பாருங்க புயல் 575 கிலோமீட்டர் தூரத்தல இருக்கு 300 க்கு வந்திருச்சி 200 ,100 , 50 , 10 , 5 , 1 , ௦, ஸ்டார்ட் அப்படின்னு கவுண்டவுன் வேற.
என்ன இருந்தாலும் இந்த புயல் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதிகள பொரட்டி தான் போட்டு விட்டது. பல இடங்கல்ல கரண்ட் இல்ல, கைபேசி இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது. கூரை ஓடு வீடுகளெல்லாம் புயல் காத்துல ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பா விவசாயிகள் ரொம்பவே பாதிக்க பட்டுளார்கள்.
தை மாச அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர் எல்லாம் காத்துல சாஞ்சி நீர்ல மூழ்கிடுச்சி இதனால விவசாயம் கடுமையா பாதிக்க பட்டிருகின்றது. வழக்கம் போல மத்திய மாநில அரசுகளின் வெல்ல சோதனை குழு வந்து பார்வையிடும் பின் நிவாரணம் வழங்கும்.
மாநில அரசு வழக்கம் போல மத்திய அரசு கொடுத்த நிவாரணம் போதுமானதாக இல்லைன்னு அறிக்கை விடும். இது கால காலமா நடக்குற சம்பிரதாய அறிக்கைதான். பின்பு இதுவும் கடந்து போகும் மக்கள் வழக்கம் போல இதையும் மறந்துடுவாங்க.
எது எப்படியோ புயலால் பாதிக்க பட்ட பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாளாகும்னு தான் தோணுது. ஏன்னா இந்த புயலோட பாதிப்பு அப்படி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக