நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி

ஸ்பாட் ஃபிக்சிங் ஜோக்ஸ்!


என்னது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்ஸ் அத்தனை பேரும் சூதாட்டம் ஆடினாங்களா? எப்படி?

ஆமாம் திடீர்னு பச்சை டிரஸ் போட்டுட்டு இறங்கினா? எங்களுக்கு தெரியாமயா போயிடும்?

-----------------------------

கிரிக்கெட் வீரர்: "சத்தியமா நம்புங்க, தலையெல்லாம் ஒரே பேன், சொறியாம என்ன செய்யச் சொல்றீங்க? இப்படி சொறிஞ்சது மூலமா எவ்வளவு கோடி சம்பாதிசீங்கன்னு என்ன போட்டு உயிர எடுத்தீங்கன்னா நியாயமா?"

---------------------------------

போலீஸ்: அந்த ஓவர்ல 14 ரன் விட்டுக் கொடுத்தீங்க! சரியா? எவ்வளவு சம்பாதிச்சீங்க?

அருகில் இருந்த அணியின் கேப்டன்: நம்புங்க சார்! உண்மையில அந்த ஓவர்ல 22 ரன் கொடுக்கவேண்டியது. ஏதோ சூதாட்டக் காரங்க தயவால 14 ரன்னோட போச்சு.

--------------------------------------------------------------------

இஷாந்த் சர்மா: உடனே என்னோட முடியோட நீளத்தை குறைங்க!

சலூன் காரர்: ஏன் சார் நல்லாத்தானே இருக்கு?

இஷாந்த் சர்மா: ஓடி வந்து பவுலிங் போடும்போது முடி ஆடுது! இது ஏதோ சூதாட்டக்காரங்களுக்கு சிக்னல்னு சொல்லிட்டாங்கன்னா?

------------------------------------

போலீஸ்- வீரரிடம்: ஆமாம்! நீங்க ஏன் சூதாட்டக்காரங்களுக்கு பணம் கொடுத்தீங்க?

வீரர்: பின்ன என்ன சார்? பேட்ஸ்மென் கிட்ட போய் என் ஓவர்ல 28 ரன் அடிக்கணும்னு பணம் கொடுத்தாங்க. என் கேரியர் என்ன ஆறது? அதானால 28 வேணாம் 14ஆ குறைச்சுக்க சொல்லுங்கன்னு நான் அவங்களுக்கு பணம் கொடுத்தேன். சண்டைக்காரன் கால்ல விழறதவிட சாட்சிக்காரன் கால்ல விழுந்துரலாமே!
------------------------------

புக்கி: நீங்க இந்த ஓவர்ல ஒரு நோ-பால் ஒரு வைடோட சேர்த்து 17 ரன்கள் கொடுக்கணும்? ஆனால் 15 ரந்தான் கொடுத்தீங்க ஏன்?

வீரர்: சார் நான் நியுமராலஜியில் நம்பிக்கை உள்ளவன் 1+7=8; எட்டுல எனக்கு தோஷம் அதனாலதான் என் ராசி நம்பரான 1+5=6 கொடுத்தேன். இது தப்பா?

-----------------------------------------------------------------------

போலீஸ்: (இஷாந்திடம்): ஏன் இன்னிக்கு, அதுவும் குறிப்பா, முடிய ஒட்ட வெட்டீனீங்க?

இஷாந்த்: ஏன் சார் இதுல என்ன தப்பு! என் இஷ்டம் நான் வெட்டினேன்!

போலீஸ்: நீங்க இன்னிக்கு ஒட்ட முடிவெட்டுவீங்கன்னு பெட்டிங்ல பல கோடி ரூபா பேரம் நடந்துருக்கு உங்களுக்கு எவ்வளவு பங்கு?

இஷாந்த்: முடிதான் சார்!
----------------------------------------------

போலீஸ்: அந்த சிக்சர் அடிக்கும்போது பந்து உங்க பேட்ல பட்டுச்சாமே?

வீரர்: இது என்ன சார் கூத்து? பேட்ல படாம எப்படி சிக்ஸ் போகும்?

போலீஸ்: அங்கதான் வசமா மாட்டினீங்க? பேட்ல பந்து படறது மூலமா சூதாட்டக்காரங்களுக்கு நீங்க சிக்னல் கொடுத்திருக்கீங்க!
-----------------------------------

கோச்- பவுலரிடம்: இது என்ன மூஞ்சியெல்லாம் கறுப்பாகி, வேர்த்துக் கொட்டி... டவலை எடுத்து தொடைங்க!

ஸ்ரீசாந்த்: அய்யய்யோ டவலா? அந்த விளையாட்டுக்கே நான் வரல்ல சார்

------------------------------------------------------------------------

விசாரணையில் அன்கீட் சவான் கதறி அழுதார் -செய்தி

போலீஸ் அன்கீட் சவானிடம்: நீங்க ஏன் இடது கையிலயே எப்பவும் பந்து வீசினீங்க?

சவான்: இது என்ன சார் நான் எப்பவுமே இடது கை வீசாளர்தான்!

போலீஸ்: அங்கதான் உங்க டிரிக்கை நாங்க கண்டுபிடிச்சோம்! இடது கை பவுலர்தான? பின்ன ஏன் வலது கையை தூக்கி வீசினீங்க?

சவான்; இது என்ன சார் கொடுமை? வலது கையைத் தூக்காம எப்படி இடது கையால வீச முடியும்?

போலீஸ்: கரெக்ட்! வலது கையை தூக்கினீங்கன்னு ஒப்புக்கொள்றீங்க! இதுதான் நீங்க கொடுத்த சிக்னல்னு நாங்க சொல்றோம்!

சவான்: தலையில் அடித்துக் கொண்டு 'எனக்கு வேணும் எனக்கு வேணும்' என்று கதறி அழுகிறார்!

------------------------------------------------------------------------------

போலீஸ்: உங்க போன்லேர்ந்து 'புஜ்ஜு'ங்கற பேர் உள்ளவருக்கு ஒரே நாள்ல 15 கால் போயிருக்கு!

வீரர்: சார் அது என்னோட குழந்தை, செல்லமா புஜ்ஜுன்னு கூப்பிடுவோம்.
---------------------------

மீடியா: மற்றப் பிரச்சனைகளை மறைக்க இந்த பெட்டிங் விவகாரத்தை கிளப்பியிருக்கீங்க இல்ல?

போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்: அப்படியெல்லாம் பேசாதீங்க! இதுக்காக நாங்க எவ்வளவு அறுவ மேட்சையெல்லாம் பாக்கவேண்டியிருக்கு! எங்க கஷ்டத்தையும் கொஞ்சம் பாருங்க!
----------------
நன்றி : வெப் துனியா 

ஞாயிறு

இதெல்லாம் ஒரு பொழப்பு - கிரிகெட் ஜோக்..!

"என்னப்பா ராகுல் டிராவிட் அங்கேயிருந்து மறுபடியும் PAD கேக்கறார், அதான் கட்டிட்டு போனாரே?

அவர் ஒருவேளை ஸ்டம்ப்களுக்கு கேக்கறாரோ என்னவோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"யாரும் ஓய்வு பெற வேண்டியத் தேவையில்லை - சேவாக்"

என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு யாரும் ரிட்டையர் ஆக வேண்டாம்னு சொல்றாரு?

அவங்கள்லாம் ஏதாவதொரு கம்பெனில வேல பாத்திட்டுருப்பாங்கள்ல அதுலேர்ந்து ரிட்டையர் ஆயிட வேண்டாம்னு சொல்லியிருப்பார் போல.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"நாங்களும் இந்தியாவில் 2- 0 என்று வெற்றி பெற்றோம்- சேவாக்"

"அவர் தூக்கத்துல பொலம்பினத அப்படியே போட்டிருக்காங்க! இப்பல்லாம் மீடியா ரொம்ப முன்னேறிடுச்சு சேவாக் தூங்கும் போது கூட மைக்கை வாய் கிட்ட வைக்கிறாங்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


"இந்திய மூத்த வீரர்கள் மீண்டும் எழுச்சியுறுவார்கள்-மைக்கேல் கிளார்க்"

என்ன கொழுப்பு பார்த்தியா இவருக்கு! அடுத்த தடவை இந்தியாவுக்கும் வந்து நம்மள உதை கொடுக்க இப்பவே திட்டம் போடறாரு போல"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நிருபர்கள்: என்ன ஸ்ரீகாந்த் சார் 8 மேட்ச் உதை வாங்கியிருக்கோமே உங்களோட கருத்து என்ன?


ஸ்ரீகாந்த்: ஒண்ணும் பெரிசா நடந்துடல! உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் தேவை. அவங்க நல்ல விளையாடினாங்க நாம அத ஒத்துக்கணும்! எப்பவுமே நம்ம பசங்க வெளிநாடுன்னா ஊத்திக்குவாங்க! அதனாலதான் அடுத்த 2 வருஷத்துக்கு ஃபாரின் டூரே இல்லைன்னு ஐ.சி.சி. சொல்லிடுச்சு

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இவிங்க தொல்லை தாங்க முடியலப்பா..! - கிரிகெட் ஜோக்ஸ்


நிருபர்: சார் போன இங்கிலாந்து டூரும்
இந்த ஆஸ்திரேலிய டூர் பத்தின உங்க கருத்து என்ன சார்?

தோணி: இங்கிலாந்துக்கு  கூட்டிட்டு போயி ஒரு குரூப்பு  டெஸ்ட் மேட்ச்ன்ற பேர்ல  மரண அடி அடிச்சானுங்க அடிச்சிட்டு,
 ஒரு விமானத்துல ஏத்தி அனுப்புனாங்க. சரி இந்தியாக்கு தான் அனுப்புறாங்கன்னு நம்பி ஏறுனேன்.

அந்த விமானம் நேரா ஆஸ்திரேலியாவுக்கு போச்சுப்பா அங்க ஒரு  பதினோரு  பேரு நாலு  டெஸ்ட் மேட்ச் சும்மா தெனற தெனற அடிச்சானுங்க சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.

நிருபர்: ஏன் சார் திரும்ப நீங்க அடிக்கலையா?

தோணி: இல்லை

நிருபர்: ஏன் சார்?

தோணி: அதுல ஒருத்தன் சொன்னா
'டேய் இவன் எவ்வளவு அடிச்சாலும் தான்குராண்டா இவன் ரொம்ப நல்லவன்டா அதனால இவனுக்கு
ஒரு விருது குடுத்திடலாம்' அப்படின்னு

நிருபர்:????????

தோணி(அழுதுகொண்டே): நானும் எவ்வளவு நேரம்தான்
வலிக்காதமாதிரியே நடிக்கறது.          

பங்களாதேஷ் கேப்டன்: ஹலோ தோனி! மிஸ்டர் தோனி... ஹலோ பாஸ்...


தோனி: என்னது நாம் பாஸா?

பங்களாதேஷ் கேப்டன்: அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ் இவங்க இப்படித்தான் நம்மள போட்டு மிதிமிதின்னு மிதிப்பாய்ங்க; இதெல்லாம் பாத்தா ஃபீல்டுல இருக்க முடியுமா?

                              @@@@@@@@@@@@@@@@@@@@@

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்!
டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!


ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?

நீங்க வேற மேட்சே அதுக்குள்ளே முடிஞ்சு போச்சு..!

                              @@@@@@@@@@@@@@@@@@@@@


வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு


வீரர் 2 : ஏன் என்னாச்சு?

வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!
 
                              @@@@@@@@@@@@@@@@@@@@@
 

பிளெட்சர்: எல்லாரும் கன்னாபின்னான்னு பேட்டிங் ஆடறீங்க வாங்க வாங்க எல்லாரும் பயிற்சிக்கு வாங்க!


தோனி: (நைசாக நழுவிய படியே) ஆமாமாம்! எல்லாம் பயிற்சிக்கு செய்ங்க!

பிளெட்சர்-தோனியிடம்: நீ எங்க எஸ்கேப் ஆர, உனக்குத்தான் பயிற்சியே தேவை!

தோனி: கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டுருக்கு!

புதன்

பன்ச்..! - மூக்கு உடைந்தால் கம்பெனி பொருப்பல்ல!!





'பஜ்ஜி' இல்லாமல் ஆஸ்திரேலியா போயிருக்கக் கூடாது -வாசிம்.
யோவ் நீயெல்லாம் பெரியமனுசனா? நாம என்ன பொண்ணு பார்க்கவா போறோம்?

*******************************************

கற்பூரம் காட்டி வழிபட்ட காலண்டர் கடவுள் வருட முடிவில் குப்பைத்தொட்டி சென்றுவிட்டார்.

********************************************

நைட்டியின் பெயரை மேக்ஸி என்று மாத்தியாச்சாமே?
இனி நைட்டி பற்றி பேசுவோர் மீது 'ஆணாதிக்க குண்டர்' சட்டம் பாயுமோ?

********************************************

அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி பேர் எல்லாம்... கரெக்டா தெரிந்து இருக்கும் நகரவாசி பலருக்கு.
பக்கத்து வீட்டுக்காரன் பேரு மட்டும் தெரியாது.

******************************************

காமம் என்பார் கலீஜ் என்பார் நாணிநிப்பார் நாசமா போவார்
பட்டாங்கில் உள்ளபடி.!! பொழப்ப பாருங்கையா.

*******************************************

பேச்சிலர்க்கு வீடு தர மாட்டாங்களாம்.
ஆனா பிள்ளையார மட்டும் வீட்ல வெச்சி கும்புடுவாங்கலாம்.

********************************************

எனக்கொரு டவுட் கொலைவெறி பாடல் இங்லீஸ்ல தானே இருக்கு அப்படி கேவலப்படுத்தினாலும் அது இங்லீஷ்க்தானே கேவலம்?
அந்த பாட்ல தமிழே இல்லையே

**********************************************


குறிப்பு: இந்த பன்ச் எல்லாம் ட்வீடர்ல வந்தது.





ஞாயிறு

தமாஷ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கைகள்-09

இதோ அடுத்த புத்தாண்டு அருகே வந்து விட்டது. அரசியல் கட்சிகளின் தலைமைக் கழகங்கள் தாங்கள் தொண்டர்களுக்கு புத்தாண்டு செய்திகளை அறிக்கையாக கொடுத்தால் ( கற்பனையாக ) எப்படி இருக்கும் ? இதோ இப்படித்தான்.....

திமுக அறிவாலயத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி :
""கழக உடன்பிறப்புக்களே ! தலைவர் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொன்னதால் அடுத்த புத்தாண்டில் சோர்ந்து விட வேண்டாம் ! அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது... அவருடைய வாரிசுகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது ! தலைவருக்கு அடுத்த வருடம் 36 பாராட்டு விழாக்களுக்கு ஜெக்தரட்சகன் ஏற்பாடு செய்துள்ளார்... அதனால், புத்தாண்டு புத்துணர்ச்சி தரும் இனிய ஆண்டாக இருக்கப் போகிறது. உடன்பிறப்பே, சோர்வு நீக்கி புறப்படு தேர்தல் களம் நோக்கி !''
அதிமுக தலைமைக் கழகச் செய்தி :
"" நம் தலைவி, வருகின்ற புது வருடத்தில் சித்திரை முதல் தை மாதம் வரை நேரம் சரியில்லை என்பதால் கோடநாட்டில் ஓய்வெடுக்க உள்ளார்...அங்கிருந்து போராட்டங்களை வழி நடத்துவார்... அடுத்த ஆண்டில் நம் கட்சியிலிருந்து 110 தலைவர்கள் அணி மாறினாலும் மாறுவார்கள் என்று தளவதி வெங்கடேஷ் அறிவித்துள்ளார். அதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டியது தொண்டர்களின் கடமை ! யார் இருந்தாலும் போனாலும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தோள் கொடுப்பார்கள் என்பதால் கவலை வேண்டாம்!
புரட்சித் தலைவியின் தலைமையில் வருகிற புத்தாண்டில் கட்சி என்ன ஆகப் போகிறதோ என்கிற கவலையை விட்டு விடுங்கள் ! அந்தக் கவலையைத் தலைவர்கள் படுவார்கள் ! வாழ்க புரட்சித் தலைவி !''
பாமக தைலாபுரத்தில் இருந்து வெளியான வாழ்த்து அறிக்கை !
""வருகிற புத்தாண்டிலும் தலைவர் கலைஞர் அவர்கள் நல்லாட்சி நடத்துவார் ! நிச்சயம் நம்மை அழைத்துப் பேசுவார். அவர் நம்மை அழைத்துப் பேசி, தட்டிக் கொடுத்து நம் கண்ணீரைத் துடைத்து வைக்கும் நாளே நமக்குப் புத்தாண்டுத் திருநாள் ! பங்காரு அடிகளாரை யாரும் நம்ப வேண்டாம் ! சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் எல்லாம் இப்போது பிஎம்டபிள்யூவில் போகிறான்... அடுத்த வருடம் ஏதாவது பெரிய மாற்றம் நடந்து அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் ! ஜெயலலிதாவை நம்பினால் நாசமாய்ப் போவீர்கள் ! அன்னை சோனியா கருணையின் வடிவம் ! அடுத்தக்கட்டப் போர் ஈழத்தில் புத்தாண்டில் தொடங்கும் ! கலைஞரின் நல்லாட்சியில் புத்தாண்டில் தமிழகம் பீடு நடைபோடும் ! பாமக வை அழிக்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் வருகிற புத்தாண்டில் ரத்தம் கக்கி செத்துப் போவான் ! ''
சத்யமூர்த்தி பவனிலிருந்து காங்கிரஸ் சார்பாக வந்த 13 அறிக்கைகளில் ஒன்று :
""காங்கிரஸ் தொண்டர்களே ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !! ஈழத்தில் விடுதலைப் புலிகளை தலைவர் ராஜபக்ஷேவும் தளபதி பொன்சேகாவும் இணைந்து ஒடுக்கிய சென்ற ஆண்டு உண்மையிலேயே நமக்கு மறக்க முடியாத ஆண்டு ! மிச்சமிருப்பவர்களையும் இந்த ஆண்டில் அழித்து விட வேண்டும் என்று அன்னை சோனியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் ! தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து எப்பாடுபட்டாவது நீக்குவோம் என்று புத்தாண்டு சபதம் ஏற்போம் ! நமக்கு ஆட்சியில் பங்கு தராத திமுகவை ஆட்சியை விட்டு நீக்கி தலைவர் கலைஞரை வாழ்த்துவோம் ! சொதப்பலாக எதிர்க்கட்சிப் பணி ஆற்றி நம்மை வாழ வைக்கும் பாரதீய ஜனதாவுக்கு புத்தாண்டு நன்னாளில் நன்றி சொல்வோம் !''

சனி

நகைச்சுவை..!