வியாழன்

சவால் விடும் சாலை போக்குவரத்து!

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிச்சல் நமது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.

இதற்கு இரண்டு கரணம் இருபதாக எனக்கு தோன்றுகிறது, ஒன்று அரசுக்கு தொலை நோக்கு பார்வை இல்லாதது. மற்றொன்று பொது நலனில் அக்கறை இல்லாத மக்கள்.

முதலில் தொலை நோக்கு இல்லாத அரசின் செயல்பாடுகளை பார்போம்.

இன்றைய நவீன உலகில் சாலை போக்குவரத்து என்பது மிகையும் இன்றியமையாதது, எனவே இன்றைய நிலையில் சாலை போக்குவரத்தின் அவசியம் உணர்ந்து அரசு எந்திரம் செயல்படுவது அவசியம்.
அரசின் தாரலமயமகளின் காரணமாக பல தானியர்கள் வாகன உற்பத்தியில் ஈடுபட்டத்தின் காரணமாக வாகன பெருக்கம் நாளுக்கு நாள் பெரிகிகொண்டே வருவதை நாம் கண்கூடாக பார்த்துகொண்டு இருக்கின்றோம், வாகன உற்பத்தி வளர்சிக்கு இணையாக சாலை வசதி ஏற்படுத்துவது அரசின் இன்றியமையாத கடமையாகும்.
அரசின் சாலை விரிவாக்க பனியின் வேகம் இன்னும் அதிகரித்தால் தான் வளர்ந்து வரும் வாகன பெருக்கத்தை சமாளிக்க முடியும்.
இருசக்கர வாகனபெருக்கம் அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நானோ டெக்னாலஜி எனும் புதிய நான்கு சக்கர வாகன உற்பத்திக்கு அரசின் கடன் மற்றும் வரி சலுகை அளித்திருப்பது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகமாக வைப்பு இருக்கிறது. இந்த நிலையில் அரசின் சாலை மேம்பட்டு வசதிகள் போதுமானதாக இல்லை. இந்த புதியவகை கார்கள் சாலையில் ஓட துவங்கினால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் சென்னை போன்ற நகரத்தில் வாகனம் ஊர்ந்து செல்லகூட முடியாத நிலை ஏற்படும்.

மேலும் பெருகி வரும் வாகன பெருகதிற்கு ஏற்றார்போல் நகரத்தில் பார்கிங் வசதி செய்யப்படவில்லை என்பது கவனிகதக்கது. அத்துடன் பாதசாரிகள் நடந்து செல்ல போதுமான வகையில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க பட வில்லை என்பதும் கவனிக்க தக்கது. நடைபாதை அமைக்க பட்ட சில இடங்களிலும் நடைபாதை வியாபாரிகள் காரணமாக நடை பயணிகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

எனவே பெருகிவரும் வாகன பெருக்கத்தை கட்டு படுத்த அரசு பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது மக்கள் ஒவொருவரும் தனியாக வாகனம் பயன்படுத்துவதை தானாக குறைத்து கொள்ளும் நிலை ஏற்படும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தின் தரம் உயர்தபடவேண்டியது அவசியமாகும். அவ்வாறு மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் சாலை நெருக்கடி மற்றும் சுற்றுசூழலும் பாதுகாக்க படும் என்பதில் மாற்று கருது இருக்க முடியாது. மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வைப்பது என்பது ஒரு தற்கால தீர்வு மட்டுமே, சாலை விரிவாக்க பணியால் மட்டுமே போக்குவரத்தை கட்டுபடுத்த முடியும் இதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுத்தால் தான் போக்குவரத்தை கட்டுபடுதமுடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக