வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ, நமது ஆட்சியாளர்களுக்கு மிக சரியாக பொருந்தும். இதை பல சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்பவர்கள் நிருபித்து கொண்டே தான் இருகின்றார்கள். உதாரனதிற்கு ஈமு கோழி வளர்ப்பில் நடந்த மோசடியை எடுத்து கொள்ளுங்கள் ஈமு நிருவனங்கள் இரண்டு ஈமு கோழியை தங்களிடம் இருந்து வாங்கி வளர்தால் போதும் எல்லோரும் அம்பானியாக மாறிவிடலாம் என்ற வகையில் விளம்பரம் செய்தது. அதை ஒத்து ஊதும் விதமாக விளம்பரபங்களில் நடித்த நமது நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூட சேர்ந்து கூவினார்கள்

. இப்பொழுது பணம் கட்டினால் உங்கள் பெயரில் ஒரு தேக்குமரம் நட படும் இன்னும் இருபது வருடம் கழித்து அந்த தேக்குமரதை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தருவதாக கூறுவதையே நம்பி பணம் கட்ட தயாராக இருக்கும் நம்ம மக்கள். பணம் கட்டி ஈமு கோழியை வாங்கினால் வருடா வருடம் ஊக்க தொகை தரபடும். அதன் ஒரு முட்டை இரண்டாயிரம் முதல் நாங்காயிரம் விலை மதிக்க தக்கது. அதையும் எங்கள் நிருவனமே விலைக்கு வாங்கிக் கொண்டு உங்களுக்கு பணம் தருகின்றோம். அதன் இரச்சி ஒரு கிலோ ஆயிரம் விலை பொகும் அதற்க்கான பனத்தயும் நாங்களே தருகின்றொம் என கூறினால் அதை நம்பாமல் என்ன செய்வார்கள். அனைவரும் விவசாயத்தை விட்டு விட்டு ஈமுவில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த விளம்பரங்கள் வர ஆரம்பித்த உடனே நமது ஆட்சியாளர்கள் என்ன செய்து இருக்க வேண்டும். இந்த நிருவனம் செய்யும் விளம்பரம் உன்மைதானா அதன் நம்பக தன்மை எந்த அலவுக்கு சரியானது என விசாரித்து இருக்க வேண்டாமா. ஆனால் நமது அரசோ அந்த விளம்பரத்திற்கும் நாம் ஆட்சி செய்யும் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் மெத்தன்மாக இருந்தார்கள். இன்று அந்த நிறுவனம் இழுத்து மூடபட்டு விட்டது. இப்பொழுது அந்த நிருவனம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

அதேபோல் பள்ளி பேருந்தில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து இறந்த பிறகு அனைத்து பள்ளி பேருந்துகளின் தரத்தையும் ஆராய முவந்துள்ளது. பள்ளி பேருந்து குறித்து சட்ட திருத்தம் கொண்டுவருகின்றது. இதை ஏன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்த விபதிற்கு முன்பு பள்ளி பேருந்து தரம் குறித்து எந்த சட்டமும் இல்லயா. அதை பின் பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இனி பள்ளி பேருந்துகளின் தரத்தை உயர்த்துவதின் மூலம் இறந்த ஒரு உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா, குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் துயரத்தை துடைத்து விட முடியுமா. அதேபோல இப்பொழுது அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்த பிறகு எலியை பிடிக்க நடவடிக்கை எடுகின்றார்கலாம்.

ஆட்சியாளர்களின் கடமை மக்களை காப்பாற்ற வெண்டியதுதான். மக்கள் பாதிக்க பட்டவுடன் அவர்களுக்கு நிவாரன நிதி கொடுப்பதும் ஆறுதல் சொல்வதும் அறிக்கை விடுவது மட்டுமல்ல. மக்களை காப்பதும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக