இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இந்திய அணி விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுது ஏதோ வாங்க தேசம் அணி விளையாடுவது போல உள்ளது. இந்திய வீரர்கள் ஏதோ இப்பொழுதுதான் முதன் முதளில்
சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடும் கத்து குட்டி அணி போல விளையாடுகின்றார்கள்.
கம்பீர்: இவரை பற்றி இந்த தொடரில் என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. ஒரு அணியின் அனைத்து வீரர்களும் அழுத்தம் இல்லாமல் விளையாட அந்த அணியின் தொடக்க வீரர்களின் பங்கு இன்றியமையாதது. கம்பீரின் கால்களை நகர்த்தி விளையாடும் உத்தி இவரின் எதிகால விளையாட்டு வாழ்க்கைக்கே கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்ற அச்சைத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அணியின் தொடக்க வீரர்கள் எந்த அளவுக்கு எதிரணியின் பந்து வீச்சை தைரியமாக எதிர் கொள்கின்றனறோ அதை வைத்துதான் பின்வரும் வீரர்கள் மனரீதியாக எதிரணியின் பந்து வீச்சை பாசிடிவாக எதிகொள்ள முடியும். இவரோ எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை கண்டு பயந்து போய் விளையாடுவதுபோல் விளையாடுகிறார். இந்த இரண்டாவது இன்னிங்க்சில் தான் பாசிட்டிவான அணுகுமுறைக்கு வந்துள்ளார். அது எந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சேவாக்:இவரைபற்றி சொல்வதென்றால் இவர் நன்றாக விளையாடுவது இவர் கையில் இல்லை. அது கடவுள் கையிலும் எதிர் அணியின் கையிலும்தான் உள்ளது. கிரிக்கெட்டில் பொதுவாக ஒரு சொலவடை உண்டு. பட்டால் பாக்கியம் பாடாட்டி லேகியம். அது இவருக்குதான் சரியாக பொருந்தும். இவருக்கு சில கேச் மிஷ்ஷிங்கும் கொஞ்சம் கடவுளின் கருணையும் இருந்தால் போதும். பந்து வீச்சாளர்கள் மேல் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அவர்களுக்கு கிரிகேட்டின் மேலே வெறுப்பு வரும்படி செய்து விடுவார். அது எல்லா மேட்சிலும் நடக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. இவர் ஒரு நம்பக தன்மை இல்லாத வீரர்.
திராவிட்: இவர் இந்திய அணியின் தூண், சுவர் எனவெல்லாம் அழைக்கப்படும் வீரர். இவரின் மட்டை வீச்சின் அழகு கிரிகெட் புத்தகத்தில் ஒவொரு பந்தையும் எப்படி ஆடுவது என்று பாடம் எடுப்பதுபோல் இருக்கும். ஆனால் அந்த சுவரில் பெரிய துளை விழுந்து விட்டதாகவே தெரிகிறது. இன்றைய சூழலில் இவர் ஒய்வு பெரும் காலத்தை நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. இவர் இடத்தை வேறொருவர் நிரப்புவது கடினம்தான். இவருக்கு மாற்று வீரைரை அணி நிர்வாகம் கண்டு பிடிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
சச்சின்: மட்டை வீச்சின் அனைத்து சாதனைகளையும் ஏறத்தாள முறியடித்து விட்டார். இவரும் கடுமையான மன அழுத்தத்தில் விளயாடிகொடிருக்கின்றாr. சத்தத்தில் சதம் அடிக்கவேண்டும் என்று அவருக்கு மன அழுத்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இந்த மீடியாக்கள் ஒவ்வொரு தொடர் தொடங்கும் பொழுதும் இந்த தொடரிலாவது சச்சின் நூறாவது சதத்தை அடிப்பாரா? மாட்டாரா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு வந்து இவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். இவர் அவுட் ஆனா அடுத்த நிமிடமே சச்சின் இந்த மேட்சிலும் சதத்தை தவற விட்டுவிட்டரென்று அனைத்து மீடியாக்களிலும் கண்டிப்பாக செய்தி இடம்பிடிக்கும்.
இதுவே இடுக்கை ரொம்ப பெரியதாகி விட்டது ஆதலால் அடுத்த இடுக்கையில் தொடரலாம் .
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக