நிருபர்: சார் போன இங்கிலாந்து டூரும்
இந்த ஆஸ்திரேலிய டூர் பத்தின உங்க கருத்து என்ன சார்?
தோணி: இங்கிலாந்துக்கு கூட்டிட்டு போயி ஒரு குரூப்பு டெஸ்ட் மேட்ச்ன்ற பேர்ல மரண அடி அடிச்சானுங்க அடிச்சிட்டு,
ஒரு விமானத்துல ஏத்தி அனுப்புனாங்க. சரி இந்தியாக்கு தான் அனுப்புறாங்கன்னு நம்பி ஏறுனேன்.
அந்த விமானம் நேரா ஆஸ்திரேலியாவுக்கு போச்சுப்பா அங்க ஒரு பதினோரு பேரு நாலு டெஸ்ட் மேட்ச் சும்மா தெனற தெனற அடிச்சானுங்க சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.
நிருபர்: ஏன் சார் திரும்ப நீங்க அடிக்கலையா?
தோணி: இல்லை
நிருபர்: ஏன் சார்?
தோணி: அதுல ஒருத்தன் சொன்னா
'டேய் இவன் எவ்வளவு அடிச்சாலும் தான்குராண்டா இவன் ரொம்ப நல்லவன்டா அதனால இவனுக்கு
ஒரு விருது குடுத்திடலாம்' அப்படின்னு
நிருபர்:????????
தோணி(அழுதுகொண்டே): நானும் எவ்வளவு நேரம்தான்
வலிக்காதமாதிரியே நடிக்கறது.
பங்களாதேஷ் கேப்டன்: ஹலோ தோனி! மிஸ்டர் தோனி... ஹலோ பாஸ்...
தோனி: என்னது நாம் பாஸா?
பங்களாதேஷ் கேப்டன்: அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ் இவங்க இப்படித்தான் நம்மள போட்டு மிதிமிதின்னு மிதிப்பாய்ங்க; இதெல்லாம் பாத்தா ஃபீல்டுல இருக்க முடியுமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்!
டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!
ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?
நீங்க வேற மேட்சே அதுக்குள்ளே முடிஞ்சு போச்சு..!
@@@@@@@@@@@@@@@@@@@@@
வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு
வீரர் 2 : ஏன் என்னாச்சு?
வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!
@@@@@@@@@@@@@@@@@@@@@
பிளெட்சர்: எல்லாரும் கன்னாபின்னான்னு பேட்டிங் ஆடறீங்க வாங்க வாங்க எல்லாரும் பயிற்சிக்கு வாங்க!
தோனி: (நைசாக நழுவிய படியே) ஆமாமாம்! எல்லாம் பயிற்சிக்கு செய்ங்க!
பிளெட்சர்-தோனியிடம்: நீ எங்க எஸ்கேப் ஆர, உனக்குத்தான் பயிற்சியே தேவை!
தோனி: கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டுருக்கு!
1 கருத்து:
செம ஜோக்
ஹா
ஹா
ஹா
கருத்துரையிடுக