செவ்வாய்

மல்ட்பிளக்ஸில் ஐபிஎல் போட்டிகளைக் காண ஆர்வம் காட்டாத ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். இருந்தாலும் அங்கு போவதற்கு ரசிகர்களிடையே ஆர்வம் காணப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால் இங்கு போய் போட்டிகளைக் காண ரசிகர்களிடையே போதிய ஆர்வம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதனால் என்ன செய்வது என்ற பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனவாம் மல்டிபிளக்ஸ் நிர்வாகங்கள். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த ஸ்பைஸ் சினிமாஸ் நிறுவன மேலாளர் அமித் அவஸ்தி கூறுகையில், வார நாட்களில் வெறும் 6 சதவீத சீட்களே நிரம்புகின்றன. வார இறுதி நாட்களில் 20 சதவீத இடம்தான் நிரம்புகிறது. இது கவலை தருவதாக உள்ளது.

இருந்தாலும் ரசிகர்களின் ஆர்வம் லேட்டாக பிக்கப் ஆகும் என கருதுகிறோம். எனவே தொடர்ந்து போட்டிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பிவிஆர் சினிமாஸ் நிறுவனமும் இதே போலத்தான் கருத்து தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் பாலிவுட்டில் புதிய படங்கள் பெரும்பாலும் ரிலீஸாகாது. பத்தாவது, 12வது பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாதம் என்பதால் இந்த நிலை. எனவே தியேட்டர்கள் டல்லடிக்கும். இதனால்தான், ஐபிஎல் போட்டிகளை வைத்து மேட்ச் செய்து விடலாம் என்று நினைத்த மல்டிபிளக்ஸ்காரர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக