வெள்ளி

அய்யோ தற்கொலயா..?

எல்லோரும் கொசுவத்தி சுத்துராங்க அதான் நானும் கொஞ்சம் சுத்தலாம்னு முடிவு பன்னிட்டேன் (யாருப்பா அது மொரைகிரது அப்படி எல்லாம் பாக்கபிடாது சரியா) நானும் மொக்க போடனும் மொக்க போடனும்னு நெனகிரேன் முடியல ஆன இன்னக்கி முடிவோட வந்து இருக்கேன், படிக்கிர உங்க கன்னுல எல்லம் பொக வர வைக்காம விடுரது இல்லனு முடிவு பன்னிட்டேன் ( யாருப்பா அது இவுரு பெரிய விஜய் ஒருமுற முடிவு பன்னிட்ட மாதிக்கவே மாடாருன்னு சொல்ரது) சரி சரி ரொம்ப மொக்க போட்ரனா ஒகே விசயத்துக்கு பொகலாம்.

ஒரு பத்து வருசத்துக்கு முன்னலா நான் கல்லூரியில் படிக்கிர காலத்துல (அப்பாட நாமலும் காலேஜ் எல்லாம் படிச்சத சொல்லியாச்சி வரலாறு முக்கியம்ல அதான் பதிவு பன்னிட்டேன்) எல்லா பசங்களயும் போல நாமலும் ஒரு செட்டு வெச்சிக்கிட்டு (பெரிய சேவிங் செட்டு) அலப்பர பன்ரது ஊர் சுத்தர்துன்னு ஜாலியா பொய்கிட்டி இருந்தது. அப்ப மாடல் எக்ஸாம் அதனாள இந்த வீக் யாரும் ஊருக்கு போகக் கூடாது எல்லோரும் இங்கயே ரூம்ல தங்கி எக்ஸாம்க்கு படிக்கனும்னு ஏகமனதா முடிவு பன்னிட்டோம்.

நாம படிக்கனும்னு முடிவு பன்னிட்டாலும் அப்படியே படிசிட்டு தான் மருவேள பாப்போம் பாரு வலக்கம் போல ஒரு நாதாரி அரம்பிச்சான் எலேய் இந்த எக்ஸாம் என்ன செமிஸ்டர் எக்ஸாமா? மாடல் எக்ஸாம் தன்னே அதுக்கு ஏண்டா எல்லோரும் இப்படி ஃபிலிம் காற்றீங்க வாங்கடா நம்ம ஜோதிக்க அக்கா நடிச்ச சினேகிதியே படம் ஒடுது நைட் போய்ட்டு வரலாம்னு ஒரு பிட்ட போட்டான் அந்த நாதாரி. சரி நைட் சினிமா போய்டுவோம்னு ஒருவளியா முடிவு பன்னிட்டு கிண்டலும் கேலியுமா வலக்கம் போல அரட்ட போய்ட்டு இருங்க்கும்போது ஒருதன் அடுத்த பிட்ட போட்டான் மாப்ள நம்ம கெமிஸ்ட்றி சுரேஷ் லாஸ்ட் வீக் கொடைக்கானல் போய்ட்டு வாந்தான்ல பக்கா கிலைமட்னு சொன்னாண்டானு திரிய கிலிச்சி போட அப்படியே பத்திகிச்சி.

நைட் ஜோதிகா அக்காவ பாத்துட்டு அப்படியே பஸ் ஏர வேண்டியதுதன் நளைக்கு விடியர்து கொடைகானலாதான் இருக்கனும்னு சங்கத்துல முடிவு எடுதாச்சி. எங்க செட்ல ஒரு சாம்பாரு அதுமட்டும் நா படிக்கோனும் மாடல் எஃஸாம்ல நல்ல மார்க்கு எடுத்தா செமிஸ்டர் எஃஸாம் ஈசியா இருக்கும் அப்படின்னு சொன்னுசி லூசு. அவனாடா நீயி அப்ப ரூம பத்ரமா பாத்துக்க அப்புறம் இன்னொரு முக்கியாமான விசயம் நல்லா படிச்சி மாடல் எஃஸாம்ல யுனிவெர்சிடி ரேங்க் எடுக்கனும் சரியானுட்டு நாங்க நாலு பேரும் கெளம்பிட்டோம்.

வெள்ளி நைட் சினிமா முடிச்சி பஸ்ஸு ஏறி சனி, ஞாயிறு கொடைக்கனல்ல சுத்திட்டு ஞாயிறு நைட் பஸ்ஸ புடிச்சி திங்கள் காலைல காலேஜ் வந்து எஃஸாம் எழுதனும்னு பிளான். கொடைக்கனல்ல ரெண்டு நாள் சுத்திட்டு ஞாயிறு நைட் 9.30 இருக்கும் பஸ்ல ஏறி வத்தலகுண்டுக்கு டிக்கட் வாங்கிட்டு அசதில அப்படியே ஒக்கார்ந்து இருக்குந்தோம். பஸ்ஸும் கெலம்பிடிச்சி காலைலேர்ந்து ஊர் சுத்துன அசதில அப்படியே எல்லோரும் தூங்கிட்டோம். வழியில பஸ்ஸு ஒரு எடத்துல நின்னுச்சி. கொடைக்கானல் மலை ஏரும்போது ஒரு எடத்துல டீ குடிக்க நின்னுச்சி. திரும்பி வரும்போதும் ஒரு எடதுல பஸ் நின்னது அந்த நேரத்துல தூங்கிட்டு இருந்த நான் மட்டும் கன்ன முழிச்சி பார்தேன், பஸ் டீ கட முன்னால நின்னது நான் மட்டும் கீழ எரங்கி போய் கடைல நாலு டீ சொல்லிட்டு திரும்பி பார்த்தா பஸ்ஸக் கானோம்.

கடகாரர்கிட்ட விசாரிச்சா அவரு இது பஸ் ஸ்டாப், டீ குடிக்க நிப்பாற்ற இடம் இல்லனு சொல்லிட்டாரு நைட் 10.30 மனி கொஞ்ச நேரதுல அவரும் கடைய மூட ஆரம்பிசிட்டாரு அந்த நேரம்பார்த்து கொடைக்கனாலுக்கு போர பஸ் ஒன்னு வந்த்தது, சரி எதுக்கு இந்த நடுக்காட்ல நிக்கனும் பேசாம இந்த பஸ்ஸ புடிச்சி கொடைக்கானல் பஸ்டாண்ட் பொய்டுவோம் அங்க இருந்து வேர பஸ் புடிச்சி மலய விட்டு கீல பொய்டலாம்னு முடிவு பன்னி பஸ்டாண்ட்க்கு 11.00 மனிக்கு போய்ட்டேன்.

அங்க போனா ஒரு பஸ்கூட இல்ல அக்கம் பக்கம் விசார்ச்சா லாஸ்ட் பஸ் 9.30க்கு போய்டுசின்னு சொன்னாங்க, ஆஹா! நாம போனதுதான் கடைசி பஸ் போல. சரியான குளிறுவேர ரூம் போட்டு தங்கலாம், ஆனா நாளைக்கு காலைல எஃஸாம் என்ன பன்ரதுன்னு ஒன்னுமே புரியல. பக்கதுல்ல இருந்த கடகாரர் கிட்ட விசயத்த சொன்னதும் அவர் ஒரு ஐடியா கொடுதார். ஒரு ரோட்ட காட்டி அந்த ரோட்ல நேரா போய் ரைட் எடு அப்புரம் லெஃப்ட் எடுன்னு என்னமோ சொன்னாரு அப்படி போனா மூஞ்சிக்கல்னு ஒரு ஏரியா வரும் அங்க இருந்து காய் கறி ஏதிகிட்டு லாரிங்க எல்லம் போகும் அதுல எப்படியாவது மலைய விட்டு எரங்கிடீங்கன்னா அப்பால நீங்க வேர பஸ்ஸ புடிச்சி போய்டல்லம்னு ஒரு பக்கா ஐடியா கொடுதார்.

சரின்னு நானும் அவர் காட்ன வழியில மூஞ்சிக்கல்ல நோக்கி வேகமா நடக்க ஆரம்பிச்சேன், பயங்கரமான குளிறு கை கால் எல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. கூட வந்த நாதாரிங்க, ஒருத்தன் கானாம போய்ட்டானேன்ற அக்கற கொஞ்சம் கூட இல்லாம விட்டுட்டு போய்டானுவலேன்ர கடுப்புல வேக வேகமா மூஞ்சிக்கல்ல நோக்கி நடந்திக்கிடு இருக்கேன். அந்த நேரத்துல்ல வழியில ஒரு மூனு ஆலுங்க வந்தாங்க அவிங்கல பாக்கும் போது உள்ளூர் காரங்க போல தெரிஞ்சது, அவிங்க எங்கிட்ட ரொம்ப மரியாதயா தம்பி இந்த நேரத்துல இந்த வழியில எங்க போரீங்க அப்படின்னு கேட்டங்க, எனக்கு ஏற்கனவே குளிறு + பசங்க வேர விட்டுட்டு போய்ட்டனுங்கன்ற கடுப்புல நான் எங்க போனா உனக்கு என்ன உன் வேலய பாருன்னுட்டு நடக்க ஆரம்பிசேன். வில்லங்கம் ஆரம்பிச்சிடுச்சி அந்த மூனு பேரும் என்ன புடிசிக்கிட்டாங்க. உன்மைய சொல்லு என்ன பிரச்ன உனக்கு வீட்ல எதாவது பிரச்னயா அல்லது எதாவது பரிச்சைல பெயிலாயிட்டயா அல்லது காதல் தோல்வியா என்ன பிரச்சினை ஏன் தற்கொல பன்னிக்க போற அப்படின்னு சொன்னதும் எனாக்கு பக்குனு தூக்கி போட்டுச்சி என்னாது தற்கொலய்யா யாருயா சொன்ன உனக்குனு உன் வாய்ல வசம்ப வெச்சி தேய்க்க அப்படின்னு மனசுல நெனசிக்கிட்டு இதுக்கு மேல வேலைக்கு ஆகாது எல்லா விசயதயும் சொல்லிட வேண்டியதுதான்னு எல்லாத்தயும் சொல்லிடேன்.

அதுக்கு அவைங்க கேட்டங்க பாரு ஒரு கேள்வி எப்பா தல சுத்த ஆரம்பிசிருச்சி. என்னாது மூஞ்சிக்கல் போரியா இப்படியே போனா யெமலோகம் தான் போவ மூஞ்சிக்கல் போக மாட்டன்னாங்க என்னய சொல்ரன்னு வெவரம் கேட்டா நீ போய்ட்டு இருகுர ரூட்ல இன்னும் கொஞ்சம் போனா பெரிய பல்லம் தான் இருக்குன்னாங்க ஆஹா வழி தவரிட்டோம் போலன்னு நென்ச்சிகிட்டு இல்ல அந்த கடைகாரர்தான் சொன்னருன்னு சொன்னா நம்ப மாற்றாங்க, என்னப்பா நீயி டூர் வந்தேன்னு சொல்ர ஆன ஒரு லக்கேஜ் பேக் இல்ல ஒன்னும் இல்ல எப்படி நம்பர்துன்னு கேக்குராங்க யோவ் எல்லா பேக்கும் பசங்கலோட பஸ்ல போயிடுசியான்னு சொன்னா நம்ப மாற்றாங்க, உன்மய சொல்லு எங்க ஏரியால தற்கொல நடகர்த எங்கலால அனுமதிக்க முடியாது, உன்மைய சொல்ரயா இல்லய போலீஸ் ஸ்டேசன் வரயா அப்படின்ராங்க என்னாது போலீஸ் ஸ்டேசனா என்னடா தொல்லயா போச்சின்னு ஐயா ராசா தற்க்கொலை எல்லம் பன்னிக்க வரல டூர் தான் வந்தோம் நம்பிக்க இல்லனா இந்தா என் காலேக் ஐடி கார்ட் பாருன்னு குடுத்தேன் ஐடி பார்துட்டு சரி ஒகே வா உன் காலேஜிக்கு போன் பன்னுவோம் அவிங்க ஒரு பிரசினயும் இல்லன்னு சொன்ன விட்டுரோம்ன்னு சொன்னானுவ, யோவ் மனி என்ன ஆகுது பாருங்கயா நைட் 1.30 இந்த நேரத்துல காலேஜ்ல ஒரு ஈ கக்கா கூட இருக்கது அங்க போன் பன்னி என்ன பன்ரது.

வேனும்னா ஒன்னு பன்னுங்க எங்க வீட்டு நம்பர் தர்ரேன் எங்க வீட்ல எந்த பிரசினையும் இல்லன்னு சொன்னா என்ன விட்டுடனும்னு ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுட்டு வீட்டு நம்பெர் குடுத்தேன். இப்ப போல செல் போன் எல்லாம் அப்ப கெடையாது ஒரே வழி டெலிபோன் பூத்தான் நடுராதிரில போய் ஒருதன எழுப்பிட்டு வந்து பூத்த தொரந்து எங்க வீட்டுக்கு கால் பன்னி எந்த பிரசினையும் இல்லன்னு சொன்னதும் தான் நம்பினாங்க.(வீட்ல எனக்கு வண்டி வண்டியா அர்சன கெடைச்சது எல்லாம் தனி கதை) ஒகே சரி என்ன விடுங்கடா நா போரேன்னு சொன்னா ரொம்ப நேரமாய்டுசி இதுக்கு மேல மூஞ்சிக்கல்ல எந்த வண்டியும் இருக்காது, அதானால இங்க நைட் தங்கிட்டு காலைல கெலம்புங்கன்னு சொன்னங்க குலிரு தாங்க முடில ஒகேன்னு சொல்லிட்டேன் அவிங்கலே ஒரு ரூம் அரேன்ஃஜ் பன்னி கம்பலி போர்வை எல்லாம் குடுத்தாங்க நல்லா தூங்கி காலைல எழுந்தேன் டீ வாங்கி குடுதாங்க சுடுதன்னி இருக்கு வெனும்னா குலிங்கனாங்க ஆனா நா குலிக்கல கைகால் மட்டும் கலிவிட்டு கெலம்பிட்டேன் காலை டிஃபன் வாங்கி கொடுதுட்டு பஸ் ஏத்தி விட்டாங்க ஒரு வழியா ரூம் வர்ரதுக்கு சாயங்காலம் அகிடுச்சி ரூம் வந்ததுமே பசங்க மெல செம கடுப்பு இப்படி பாதில்ல விட்டுட்டு வந்துட்டங்கலேன்னு, ரூம் வந்து பார்தா படிக்கிர புல்ல சாம்பாரு அதான் டூர் வரல படிக்கனுன்னு சொன்னுச்சே அதே சாம்பாரு தான் தலைல ஒரு குண்ட தூக்கி பொட்டுச்சி.

என்னென்னா சாம்பாரு சொன்னுச்சி என்ணடா மாப்ல நீ மட்டும் வந்துருக்க உன் கூட வந்தவங்க எல்லாம் எங்கடா ன்னா பாருங்க எனக்கு ஒன்னும் புரியால, என்னாது இன்னும் அவங்க ரூம்முக்கு வரலயா என்னடா சொல்ற ன்னா ஆமா அவங்க எஃஸாம்க்கு கூட வரல அப்படின்னு சொன்னா சாம்பரு. அப்புரம் ஒரு வழியா நைட் 10.00 மனிக்க அந்த மூனு பேரும் வந்தாங்க வந்தவிங்க என்ன பார்த்து ஷாக் ஆய்ட்டாங்க, என்னடா இங்க இருக்கேன்னு, அப்புரம் தற்க்கொல பன்னிக்க போன விசயத்த எல்லம் சொன்னதும் அவிங்க என்ன சொன்னங்க தெரியுமா பஸ்ல கொஞ்சம் தூரம் போய்ருக்கங்க அப்ப பார்து ஒருதன் தூக்கத்லேர்ந்து முலிச்சிருக்கான் என்ன கானோன்னதும் அங்கயே பஸ்ஸ நிப்பட்டி கண்டக்டர் கிட்ட விசாரிசதும் நா முன்னால ஒரு ஊர்ல எரங்குன விசயத்த சொல்லியிருக்காரு அவுங்க உடனே பஸ்ஸ விட்டு எரங்கி லாரி புடிச்சி நா பஸ்ஸ விட்டு எரங்கின எடத்துக்கு வந்திருக்காங்க என்ன அங்க கானோன்னதும் எங்க எங்கயோ தேடியும் கெடைகலன்னதும் கொடைக்கனல் போலீஸ் ஸ்டேசன் போய் கம்ப்லைண்ட் பன்னிட்டு அவங்க கூடயும் போய் தேடியிருக்கங்க அப்பயும் கெடைக்கல, உடனே போலீஸ் அங்க்கில் சொல்லி இருக்காரு காலேஜ் பசங்கலா வேர இருகீங்க எங்க பார்தாலும் தேடியாசி இன்னும் கெடைக்கல இதுக்கு மேல ஏதாவது பல்லதுல்ல பாடி கெடைக்குதானு செக் பன்னிடு சொல்ல்ரோம் நீங்க கெலம்புங்கன்னு சொல்லியிருக்காரு நம்ம பய புல்லைங்க அழுதுகிட்டே ஊர் வந்து சேர்ந்துருக்குங்க. அப்புரம் கொடைகானல் போலீஸ் ஸ்டேசனுக்கு போன போட்டு ஆள் கெடைச்சிருச்சி தேட வேனாம்னு சொன்னோம். இந்த அனும்பவத்த என்னால எப்பவும் மரக்க முடியாது.

டிஸ்க்கி: மருனாள் காலேஜ்ல நாலு பேரும் ஆலுக்கு ஒரு மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கிட்டு போய் எங்க துறை தலைவகிட்ட போய் நின்னது, அதுக்கு அவரு அது எப்படிடா எப்ப பார்தாலும் உங்க நாலு பேருக்கு ஒன்ன உடம்பு சரி இல்லம ஆகுதுன்னு கேட்டத சமாலிச்சாது எல்லாம் தனி கதை.

4 கருத்துகள்:

நல்லவண்டா..! சொன்னது…

நாம படிக்கனும்னு முடிவு பன்னிட்டாலும்...!

நல்லவண்டா..! சொன்னது…

): hi hi

நல்லவண்டா..! சொன்னது…

):

நல்லவண்டா..! சொன்னது…

hi hi

கருத்துரையிடுக