இன்றய சூழ்னிலயில் நாம் எல்லோரும் கவலை பட வேண்டிய விசயம் என்று பார்தோமேயானால் மக்களாகிய நாம் இயற்கை நமக்கு அளித்த இயற்கையெனும் சொத்தை பாதுகாக்க தவறிவிட்டோம் என்றுதான் தோன்றுகிரது. ஏன்னென்றால் சமீபத்தில் ஊட்டி என்னும் இயற்கை பிரதேசதிற்கு (அப்படியென்று நினைத்து) சென்றிரறுந்தேன். இயற்கை அன்னை இருகரம் நீட்டி அழைகின்றாள் என்று எழுத மனம் வரவில்லை அங்கு கண்ட காட்சிகள் மனதிற்கு நிம்மதி தருவதற்கு பதிலாக வெருமையை மட்டுமே கொடுத்தது.
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபொழுது அந்த பச்சை போர்திய மலைகளும் அதன்மேல் விரவிகிடக்கும் அடர் காடுகளும் ஓங்கி வளர்ந்த நீலகிரி மரங்களும் அதனூடக தவழ்ந்து வரும் தென்றலயும் உனர்ந்த பொழுது இது ஒரு தனி உலகமோ என்று என்னதோன்றும். அங்கு வாழ்பவர் எல்லாம் ஏதோ புன்னியம் செய்தவர்களாக கடவுள் தேசத்து சொந்தக்காரர்கலாக எனக்கு தெரிந்தார்கள்.
ஆனால் இந்தமுறை சென்ற பொழுது ஏதோ பசுமை இருகின்றது ஆனால் அந்த பசுமையினுள் இருக்க வேண்டிய ஜீவன் இல்லை என்றே எனக்கு என்ன தோன்றுகிறது. எங்கு பார்தாலும் காங்க்ரீட் கட்டிடங்கல். அந்த கட்டிட அமைப்புகளை கானும் பொழுது முறையான அனுமதி பெறப்பட்டுதான் கட்டபடுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.
எங்கு பார்தாலும் மக்கள் கூட்டம் வாகன நெருக்கடி வியபாரிகளின் கூச்சல் என ஊட்டியே அல்லோலப் படுகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் அங்கு வரும் மக்கள் கூட்டம் உன்மையில் இயற்கையை நேசிக்க வந்து இருந்தால் எந்த பிரசினையும் இல்லை.
ஆனால் அங்கு வந்திருக்கும் பெரும்பான்மயனவர்கள் இயற்க்கையின் மீது ஆர்வம் அற்றவர்களாகவே வருகிரார்கள் அவர்களின் பார்வையில் இயற்க்கயை ரசிப்பதென்பது ஓ! வென கூட்டமாகா கத்துவதும் மது அருந்துவதும் தான் அவர்கள் வந்த சுற்றுலாவின் நோக்கம் என்பதாக நினைதிருக்கிறார்கள். இன்று பெரும்பான்மயானவர்கள் இயற்கையை அதன் போக்கில் சென்று அனுபவிப்பது இல்லை,
மாறாக நாம் இயற்கை செல்வத்தை வீனாக்கிகொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் மேற்க்கு தொடற்ச்சி மலை என்னும் ஒரு அற்புதமான மலை தொடர் பசுமையோடு ஒரு காலத்தில் இருந்தது என நாம் நம் சந்ததிகளுக்கு தகவலாக மட்டும் தான் சொல்ல முடியுமே தவிற அவர்களாள் உனர்வு பூர்வமாக அந்த இயற்கை அன்னயை கான முடியாமல் போய்விடுமோ என்று பயம் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.
உண்மையில் இயற்க்கை தனது சுயத்தை இழந்து கொண்டு வருகின்றதா அல்லது இயற்க்கை குறித்த எனது பார்வை மாறி வருகின்றதா என என்னுள் பல கேள்விகள் விடை தான் கிடைக்க வில்லை
5 கருத்துகள்:
உங்களைப்போலவே பலரும் சிந்திக்கிறார்கள். செயல்படுத்துவதில் தனிநபரிலிருந்து ஆரம்பித்துவிட்டால் நிச்சயம் காப்பாற்றலாம்.அங்கும் கருத்துரையிட்டேனே...
நன்றி மனி அவர்களே நான் என்னில் இருந்தே அரம்பித்து விட்டேன்.
என்னவோ போங்க பாஸ் ! இதை எல்லாம் படித்தால் மனம் கணமாக இருக்கின்றது. மனிதர்கள் மீது வெறுப்புத் தான் வருகின்றது.. வெள்ளையர்கள் சும்மா இருந்த மலையில் சுகமாக வாழலாம் எனக் காட்டிவிட்டுச் செல்ல..நாமோ சுகத்தையும் தாண்டி சுமையேத்தலாம் என காட்டிவருகின்றோம். இதே நிலைத் தான் நீலகிரி முழுவதும், ஏற்காடு, கோடைக் கானலிலும் இதே நிலைதான். கேரளாப்பக்கத்தில் மலையெல்லாம் வனமாக்கி காத்துவருகின்றார்கள். நம் பக்கத்தில் வனமெல்லாம் விறகாக்கி அழித்துவருகிறோம் .. எரிச்சலாக வருகின்றது ? சுயநலத்தின் விளைவால் பாதிக்கப்படுவது இயற்கைதானே !
வருகைக்கு நன்றி இக்பால் செல்வம்
மக்கள் என்று இத பற்றி சிந்திக்க போகின்றனரோ!
அது சரி பலோவேர் விட்ஜெட் உங்கள்தலத்தில் இல்லையே ஏன்?
கருத்துரையிடுக