உடலமைப்பு
தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.
காண்டாமிருகத்தின் கொம்புநன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.[31]. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.
சமூகவாழ்க்கை
இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.
உணவு
இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.
இனப்பெருக்கம்
இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.
இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.
தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும்.
எப்பூடி நாங்களும் பதிவு போடுவோம்ல!
1 கருத்து:
ENNA ITHU HI HI
கருத்துரையிடுக