இந்த நாட்டில் நடக்கும் அத்துணை குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று ஓயாமல் ஊளையிடும் அனைவரும் கீழ்காணும் இந்த செய்திக்கு என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது
டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.
நன்றி: ஒன் இந்தியா.காம்
3 கருத்துகள்:
கடந்த புது வருஷ(01/01/2012) தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா? இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
சங்பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் குதியாய் குதித்தன. கடையடைப்புக்கு பஜ்ரங் தள், வி.எச்.பி, போன்ற "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தி" அமைப்புகள் அழைப்புகள் விடுத்தன. காவி பயங்கரவாதத்தின் அரசியல் உருவம் பா.ஜ.க. ஒரு படி மேலே போய், கொடி ஏற்றப்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ததாம். (பாக்.கிலிருந்து வரும் சிந்து நதி நீரை எப்படி சுத்தம் செய்வார்கள்???)
அதன் பின், போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். நம்பித்தான் ஆகவேண்டும் விசாரணை செய்தவர்கள், மத அபிமானத்தை விடுத்து மனிதாபிமானத்தோடு விசாரித்ததில், இந்த செயலை செய்தவர்கள் "ராமசேனா" என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவை சார்ந்த தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் கொடியை ஏற்றி பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.இதே இயக்கம் தான் , கலவரத்தை தூண்டுவதற்கு "ரேட்" பேசி காசு வாங்கிய இயக்கம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
காந்தியை கொன்ற கோட்ஸே என்ற ஆர்.எஸ்.எஸ். அபிமானியின் கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தது. காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் தான் என்று இந்திய முஸ்லிம்களின் மேல் பழியை போடுவதே நோக்கம். இன்றைக்கும் அந்த வழிமுறை தொடர்கிறது. கோட்ஸெவின் நீட்சியாக..
இந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம்.
http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html
முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளையும்,காவல்துறையோ, உளவுத்துறையோ வெளியிடும் புதிய பெயர் தெரியாத இயக்கங்களோடு செய்திகளை புணைந்து மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் கட்டுக்கதைகளையும் வெளியிடும் ஊடகங்களுக்கு,சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் தெரியாமல் போயினவோ! என்னவோ?
குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது.
மேலும் மறைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான உண்மைகளை அறிய.. கீழுள்ள லிங்கில் கிளிக்குங்கள்.
http://meiyeluthu.blogspot.com/2010/07/blog-post_19.html
காவி பயங்கரவாத ரத்த வெறி பிடித்த மதவாத வெறியர்களின் இந்தியர்களுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தை ஊடகங்களும் அரசும் புலனாய்வு அமைப்புகளும் காவல் துறையும் கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இன்று அசுர வளர்ச்சி பெற்று, அடங்கா தீவிரவாதமாக உருவெடுத்து வருகிறது.
காவி தீவிரவாதத்தின் வேர்களை இன்னும் இந்திய அரசு கண்டறிய முயலவில்லை. காவி தீவிரவாதத்தை மூடி மறைத்த ஊடகங்களுக்கும் நேர்மை என்பது இல்லை.
மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட காவி தீவிரவாதம் தான் இந்தியாவிற்கு மறைமுக எதிரி என்பது எப்போது விளங்கிக்கொள்ளப் போகிறார்கள். தாங்களே குண்டு வெடித்து விட்டு அதனை முஸ்லிம் அப்பாவிகளின் மேல் பழி சுமத்தி விட்டு சுதந்திரமாக திரிய எவ்வளவு வன்மம் மனங்களில் இருந்திருக்க வேண்டும். இதற்கு ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும் ஏனெனில், இவர்கள் தான் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளின் மேல் பழியைப் போட்டவர்கள் இதனால் தான் காவி தீவிரவாதம் ஊடகங்களின் நிழல்களில் வளர்ச்சி பெற்றது.
காவல்துறை+ உளவுதுறை+புலனாய்வு ஏஜென்ஸிகள்+ஊடகத்துறை இவற்றில் இருக்கும் சில கறுப்பாடுகள் காவி தீவிரவாதிகளுடன் கை கோர்த்து தான் இவ்வளவும் நடந்து வந்திருக்க வேண்டும்.
மதசார்பற்ற நாடு என்ற போர்வையில் தீவிரவாதத்திற்கு எதிரான இறையான்மைய காக்கும் செயல்களில் கூட எத்தனை பாரபட்சங்கள்!!.
பாரபட்சம் காட்டப்படும் ஒரு நாடு என்றைக்கும் அமைதியாக இருந்ததாக வரலாறு இல்லை. அரசின் பாரபட்ச போக்கு தான் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்.
மத வேறுபாடின்றி இந்திய இறையாண்மையை காக்க, தீவிரவாத பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நம் கருத்துக்களை நேர்மையாக உரக்கச் சொல்வோம். வேற்றுமையிலும் ஒற்றுமை இது தான் இந்தியாவின் பலம்.
கருத்துரையிடுக