வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

ரயில் பெட்களில் பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க, இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன எந்திரம் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.                                                                                                 - செய்தி


அட நீங்க வேற! பயனிகளுக்கு நல்லது செய்வதாக நினைத்து எலி கரப்பான் மூட்டப் பூச்செல்லாம் ஒழிச்சிடாதீங்க. அப்புறம் அந்த ரயில் இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ரயில்தானனு மக்களுக்கு சந்தேகம் வந்துரப் போகுது. அதுமட்டும் இல்லாம ரயில்ல கரபானும் எலியும் இல்லைன்னா நம்ம பதிவர்கள் பயண கட்டுரையின் போது ரயில்வே துறையை குறைக் கூறி எழுத மேட்டர் இல்லாம போயிடும். அதனால பதிவர்கள் சார்பாக நம்ம கோரிக்கைய பரிசீலனைக்கு எடுத்து பழையபடி எலி கரப்பானெல்லாம் இரயிலில் உலவ அனுமதிக்கனும்னு கேட்டுகொள்கின்றோம்.

 


=======================================

காவேரி பிரச்சினையால் பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை! தயாரிப்பாளர்  கவலை.                                          -செய்தி 1


காவேரியில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாததால் தஞ்சை பகுதி விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் கவலை.                                  - செய்தி 2


போட்ட பணத்த எடுக்க முடியுமா முடியாதான்னு தயாரிப்பாளுருக்கு கவலை. தொடர்ந்து விவசாயம் செய்து காலத்த ஓட்ட முடியுமா முடியாதான்னு விவசாயிகளுக்கு கவலை. பவர் கட்டால மானாட மயிலாட தொடர்ந்து பாக்க முடியலயேனு நமக்கு கவலை. வாழ்கைலதான் எத்தனை கவலை ஓ மை காட்!

 
=========================================

இயர்பியலுக்கான நோபல் பரிசு சேர்ஜே ஹரொசீ (Serge Haroche) மற்றும் டேவிட் ஜெ. வின்லான்ட் (David J. Wineland)

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு சான் பி.குர்தோன் மற்றும் ஜூல்ஸ் கால்ப்மேன்
                                                                                                                                           -செய்தி


இதேமாதிரி பவர் கட்டுக்கும் ஒரு நோபல் பரிசு தரனும்னு தமிழக மக்கள் சாரிபாக நோபல் பரிசு கமிட்டிக்கு ஒரு கோரிக்கை வைக்கனும்னு கேடுகொள்கின்றோம். அப்படியாவது தமிழகத்துக்கு ஒரு நோபல் பரிசாவது கிடைக்கட்டும்
                                                        

3 கருத்துகள்:

தமிழினியாள் சொன்னது…

நல்ல முயற்சி கண்டிப்பாக பரிசு கிடைக்கும்.

நன்பேண்டா...! சொன்னது…

//கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
ரைட்டு...//
வருகைக்கும் கருதிற்கும் நன்றி: கவிதை வீதி சௌந்தர்

நன்பேண்டா...! சொன்னது…

//தமிழினியாள் சொன்னது…
நல்ல முயற்சி கண்டிப்பாக பரிசு கிடைக்கும்.//
வருகைக்கும் கருதிற்கும் நன்றி:தமிழினியாள்

கருத்துரையிடுக