பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். ஏற்கனவே இவங்க நாடு நாடா சுத்துனது விமர்ச்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்துல இந்த காமெடி வேற. பேசாம ஆங்கிலேயர் ஏற்படுத்திய இந்த கவுறுவ பதவியையே ரத்து பண்ணினா என்னன்னு தோணுது தோணுது.
======================================
நடக்கறது எல்லாம் பார்க்கும் பொழுது நித்யானந்தாவுக்கு நல்ல காலமா கெட்ட காலமான்னு சந்தேகமா இருக்கு. அவரும் ரொம்ப காலமா சாமியாரா இருக்கார். அப்பொழுதெல்லாம் அவர் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகல. எப்ப ரஞ்சிதா விசயத்துல அவர் பெயர் அடிபட்டுசோ அதிலிருந்து தொடர்ச்சியா மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியா ஆனதாகட்டும் கர்னாடக பத்திரிக்கயாளர்களை தாக்கியது வரைக்கும் அவருக்கு பப்ளிசிட்டி தான். நித்யானந்தா சம்பந்தமாக தினமும் ஒரு செய்தியாவது இடம் பெறாமல் இல்லை. அவரும் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவில்லை (மீசையே இல்லைங்குறது வேற விஷயம்) என்பதும் போல சிரிசிகிட்டே பத்திரிக்கைகளுக்கு போஸ் குடுத்துகிட்டு இருக்கார். இந்த நிலைல ஒரு புது சர்ச்சை வேற கிளம்பி இருக்கு. மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. எது எப்படியோ பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் புது பரபரப்பு செய்தி கிடைச்சிருச்சி.
================================================================
ஹரினா மாநிலம் மானேசர் அருகில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4வயது குழந்தை மஹியை கிட்டத்தட்ட 85 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று பிற்பகல் ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லி இருக்காங்க. ஆழ்குழாய் கிணறுக்காக போட்ற துளைகல்ள குழந்தைங்க விழுந்துகிட்டு தான் இருக்காங்கா ராணுவமும் காப்பாத்த போராடிகிட்டு தான் இருக்காங்க இதுக்கு எப்பதான் முடிவு வருமோ தெரியல.
===============================================
ஏறக்குறைய பிரணாப் முகர்ஜி தான் அடுத்த ஜனாதிபதின்னு உறுதி ஆயிடுச்சி. இது எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஜெயலலிதா போன்றவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சர்மா ஜனாதிபதி தேத்தலில் தான் அமோக வெற்றி பெருவேன்னு அறிக்கை விட்டுகிட்டு இருக்காரு.இதுக்கு பேருதான் ஆள் இல்லாத கடைல டீ ஆத்தர்தோ . நல்ல வேலை நம்ம மருத்துவர் அய்யா கட்சிக்கு கணிசமான எம்.எல. ஏ வோ எம்.பி யோ இல்லை. இருந்து இருந்தா திருமாவளவன் தான் ஜனாதிபதியா வருனும்னு அறிக்கை விட்டாலும் விட்டிருப்பார். நல்ல வேலை நாடு தப்பிச்சது.
============================================